BJP TVK: தமிழக சட்டமன்ற தேர்தலானது இம்முறை நான்கு முனை போட்டியில் காணப்படும். விஜய் அரசியலுக்குள் நுழைந்து ஆட்சி அதிகாரத்தில் பங்கு எனக் கூறியதிலிருந்து ஒவ்வொரு கூட்டணி கட்சியும் தங்களின் ஆளுமைகளிடம் எகிற ஆரம்பித்து விட்டனர். குறிப்பாக திமுகவில் விஜய் எங்களுக்கு எவ்வளவு சீட் தர தயாராக உள்ளார் நாங்கள் மாறி விடுவோம் என்று சூசகமாக கூறியே கூடுதல் எண்ணிக்கையில் சீட் பெற்று விட்டனர்.
அந்த வகையில் எந்த ஒரு கூட்டணியும்மின்றி தற்போது வரை தமிழக வெற்றிக் கழகம் தனித்து தான் நிற்கிறது. ஆனால் கரூர் சிபிஐ வழக்கு மூலம் விஜய்யை பாஜக சுத்துப்போட ஆரம்பித்துவிட்டது. டெல்லி மேலிடத்திலிருந்து கூட அவருக்கு மிரட்டல் வந்ததாக பனையூர் காரர்கள் பேசி வருகின்றனர். நேற்று நடந்த திடீர் ஆலோசனை கூட்டம் கூட நிர்வாகிகளிடம் பாஜகவுடன் கூட்டணி வைப்பது குறித்து விவாதிக்க தானாம்.
அந்த வகையில் விஜய் பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்து விட்டால் திமுகவிற்கு அது பெரும் சவாலாக இருந்துவிடும். குறிப்பாக திமுக தான் தங்கள் எதிரி எனக் கூறிவரும் விஜய்க்கு கூட்டணியில் சில நிபந்தனைகளை வைத்து தான் பாஜக இணைத்துக் கொள்கிறதாம். முதலில் எதிரியை வீழ்த்துவோம், பின்பு கூட்டணிக்குள் சமரசத்தை கொண்டு வந்து விடலாம் என்ற பாணியில் பேசி வருகிறார்களாம்.
ஆரம்பிக்கட்டத்திலேயே அதிமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்திய போது தொகுதி பங்கீட்டில் ஒத்துவரவில்லை என்பதால் தான் அந்த பேச்சு வார்த்தையே கைவிடப்பட்டது. ஆனால் இம்முறை பாஜக விஜய் கேட்கும் தொகுதிக்கு நிகராகவே தருவதாக கூறுகிறார்களாம். மற்றொருபுறம் கூட்டணியில் இணையவில்லை என்றால் கரூர் வழக்கை வைத்து கட்டாயம் சிறைக்கு அனுப்பி விடுவோம் என்றும் மிரட்டுகிறார்களாம்.
இதனால் விஜய் அவசர கட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணி வைப்பது குறித்து முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. இது திமுகவிற்கு பெரும் சவாலாகவே இருக்கும். இவர்கள் கூட்டணியை வீழ்த்தும் அளவிற்கு பெரிய திட்டத்தை ஸ்டாலின் கையில் எடுக்க வேண்டியிருக்கும். இவர்கள் இணையப் போகிறார்கள் என்ற செய்தி முன்கூட்டியே திமுக தலைமைக்கு சென்றுவிட்டதாம். இதனால் ஸ்டாலின் ரகசிய குழு அமைத்து இவர்களை வீழ்த்தும் நடவடிக்கை ரீதியாக திட்டம் தீட்ட ஆரம்பித்துவிட்டாராம்.
அதிமுக பாஜக என வரும்பொழுது சமாளிப்பது எளிது, இவர்களுடன் விஜய் சேர்ந்தால் கட்டாயம் நம்மால் வெற்றி பெற முடியாது என ஸ்டாலின் எண்ணுகிறாராம். இதனால் தான் நேற்று இரவே அவசரக் கூட்டம் அமைத்து குழு நியமிக்கப்பட்டுள்ளதாம். மேற்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்பது விஜய்யின் அறிவிப்பை பொறுத்து இருக்கும்.