திண்டிவனம் அருகே கார் கவிழ்ந்து விபத்து: ஓட்டுநர் உள்பட 6 பேர் பலி!

0
203

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மற்றும் கார் ஓட்டுனர் ஒருவர் என 6 பேர் பலியாகினர்.

திருநெல்வேலி மாவட்டம்,சூடுவிளையத்தான்
மலைப்பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் காரில் சென்னையில் உள்ள ஆவடிக்கு இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தனர்.அப்பொழுது திண்டிவனம் அருகே உள்ள
குச்சுக்கொளத்தூர் அருகே சென்று கொண்டிருக்கும் போது கார் திடீரென நிலைதடுமாறி அங்குள்ள மரத்தில் மோதியது.இதில் முருகராஜ் (38),ஸ்ரீ முருகன்(37),மலர்(35),முருகன்(40),முத்து,அனிஷா(8) உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மற்றும் அந்த வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இத்தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்த முத்து ஹரிஷ், முத்து மனிஷா ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleபெற்ற குழந்தையை பெற்றோர்களே வெந்நீர் ஊற்றி சித்திரவதை செய்து கொன்ற சம்பவம்: கொடுரத்தின் உச்சம்?
Next articleஇன்று(ஜூலை 16)தங்கம் மற்றும் வெள்ளி விலை ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here