பெற்ற குழந்தையை பெற்றோர்களே வெந்நீர் ஊற்றி சித்திரவதை செய்து கொன்ற சம்பவம்: கொடுரத்தின் உச்சம்?

0
191

சிங்கப்பூரின் தோ பாயோ பகுதியை சேர்ந்தவர் ரிட்சுவான் அப்துல் ரஹ்மான் (28), அஸ்லின் அருஜுனா (28) என்னும் தம்பதிக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்த குழந்தையை அவர்களின் குடும்ப நண்பர் ஒருவர் அந்த குழந்தையை நானே வளர்கின்றேன் என்று தம்பதிகளிடம் கேட்கவே குழந்தையின் பெற்றோர் இருவரும் குழந்தையை குடுக்க சம்மதித்தனர். பின்பு 5 ஆண்டுகளுக்கு கழித்து குழந்தையை பள்ளியில் சேர்க்க போவதாக கூறி அத்தம்பதியினர் குழந்தையை அழைக்க சென்றனர்.ஆனால் அக்குழந்தைக்கோ தன் வளர்ப்பு தந்தையை விட்டு பிரிய மனமில்லை. இருப்பினும் அக்குழந்தையை
வழுக்கட்டயமாக இழுத்து சென்றனர்.பின்பு அந்த குழந்தை வளர்ப்பு தந்தை இடமே போக ஆசைப்பட்டதால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் மகன் மீது வெந்நீரை ஊற்றி காயம் ஏற்படுத்தி அவனை துடிதுடிக்கச் செய்துள்ளனர்

பெற்ற குழந்தையை பெற்றோர்களே வெந்நீர் ஊற்றி சித்திரவதை செய்து கொன்ற சம்பவம்: கொடுரத்தின் உச்சம்?

மேலும் ஒரு மீட்டர் உயரமுள்ள அந்த குழந்தையை 91cm நீளமும் 58cm அகலமும் 70cm உயரமும் கொண்ட சிறிய கூண்டுக்குள் அடைத்துக் சித்திரவதைபடுத்தினர். அடுத்ததாக அந்த குழந்தையை உயிர் போகும் அளவிற்கு வெந்நீரை ஊற்றி சித்திரவதை செய்தனர். இதனையடுத்து ஒரு கட்டத்தில் சிறுவன் உயிரிழந்தான். பின்பு போலீசார்க்கு எப்படியோ தகவல் போக, போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்திய போது, சிறுவனை அவனது பெற்றோர் பல வழிகளிலும் கொடுமைப்படுத்தியது அம்பலமாகியது. இந்த வழக்கு விசாரணையின் போது, குற்றவாளி ரிட்சுவான் அப்துல் ரஹ்மானுக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 24 பிரம்படியும் கொடுக்க நீதிபதி உத்தரவிட்டார். அவரது மனைவி அஸ்லின் அருஜுனாவுக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பிரம்படிகளுக்குப் பதிலாக கூடுதலாக ஓர் ஆண்டுச் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
பெற்ற குழந்தையை பெற்றோர்களே வெந்நீர் ஊற்றி சித்திரவதை செய்து கொன்ற சம்பவம்: கொடுரத்தின் உச்சம்?

Previous articleஒரே சம்பவம் மூன்று மாநிலங்களில் தொடர்ந்து நடந்ததால் மக்கள் அச்சம்?
Next articleதிண்டிவனம் அருகே கார் கவிழ்ந்து விபத்து: ஓட்டுநர் உள்பட 6 பேர் பலி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here