பாட்டி வீட்டிற்கு சென்ற பேரக்குழந்தைகள் நீரில் மூழ்கி பரிதாப சாவு; காரணம் என்ன தெரியுமா?

0
207

தர்மபுரி மாவட்டத்தில் இருக்கின்ற பாப்பிரெட்டிப்பட்டி கௌரிசெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் முருகேசன் இவர் விவசாயியாக இருக்கிறார். இவருடைய மனைவி இளையராணி இந்த தம்பதியருக்கு ராதிகா என்ற 5 வயது மகள் தனுஸ்ரீ என்ற மூன்று வயது மகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை என மூன்று குழந்தைகள் இருந்து வருகிறார்கள்.
தர்மபுரி பகுதியில் இருக்கின்ற கோடலு மார்ரம்பட்டி என்ற பகுதியில் சிறுமிகளின் பாட்டி சத்தியவாணி தன்னுடைய வீட்டிற்கு சிறுமிகளையும் மற்றும் அந்த சிறுவனையும் அழைத்துச் சென்றிருக்கிறார். இந்த நிலையில், சத்தியவாணி நேற்றைய தினம் 2 சிறுமிகளையும் சந்துரு என்ற அந்த ஐந்து வயது சிறுவனையும் அழைத்துக்கொண்டு தன்னுடைய மனதை தோட்டத்திற்கு சென்று இருக்கிறார்.

இந்த நிலையில், சத்தியவாணி தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த சமயத்தில் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சுவதற்காக அமைக்கப்பட்ட ஒரு குளத்தில் நான்கு அடி ஆழத்தில் நீர் சேகரித்து வைக்கப்பட்டு இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்தநிலையில் சிறுமிகள் இருவரும் நீரில் மூழ்கி விட்டார்கள்.ஆனால் சிறுவன் சந்துரு மட்டும் எப்படியோ அதிலிருந்து தப்பித்து வந்துவிட சிறுமிகள் நீரில் மூழ்கி விட்டார்கள். இந்தநிலையில், சிறுவனின் அழுகுரல் கேட்டு அருகில் இருந்தவர்கள் வருவதற்குள் சிறுமிகள் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக மாண்டு போயினர்.

இதுதொடர்பாக தகவல் அறிந்து கொண்ட காவல் துறையினர் விரைந்து வந்து இறந்துபோன இரு சிறுமிகளின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். அதோடு இதுதொடர்பாக பாப்பிரெட்டிப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Previous articleநாளை முதல் குறைகிறது ஆவின்பால் விலை பொதுமக்கள் நிம்மதி!
Next articleவருகிறது பெரும் புயல்! தப்புமா தமிழகம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here