உறுதியான தகவல்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

0
194

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு விரைந்து இருக்கிறது. இதில் நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வருகிற 18-ஆம் தேதி ஆரம்பமாகிறது. இந்த தொடரில் இந்திய அணிக்கு முக்கியமான தொடர் என காணப்படுவதால் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரியும் இந்திய அணியுடன் சென்றிருக்கின்றார். இதனைத் தொடர்ந்து இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட இருப்பதாக தெரிகிறது.

இந்தப் போட்டி வருகின்ற ஜூலை மாதம் 13ஆம் தேதி முதல் ஆரம்பமாகி ஜூலை மாதம் 25 ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது. இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் இடம் பெறவில்லை என்றும் சொல்லப்படுகிறது. அதனால் அணியின் கேப்டனாக ஷிகர் தவான் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். இந்த தொடரில் அணியின் பயிற்சியாளராக டிராவிட் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். என்ற தகவல் வெளியாகி இருந்தது இந்த சூழ்நிலையில், இலங்கை தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்படுவார் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய்ஷா, ஆகிய இருவரும் இந்த தகவலை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.

Previous articleபகவதி அம்மன் கோவிலில் திடீரென்று வெளிவந்த தேவதை! மக்கள் அதிர்ச்சி!
Next articleஇனி இவர்களுக்கும் அரசு வேலை! தமிழக அரசிடம் வைகோ குமுறல்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here