இனி இவர்களுக்கும் அரசு வேலை! தமிழக அரசிடம் வைகோ குமுறல்!

0
64
Government work for them now! Vaiko Kumaral to the Tamil Nadu government!
Government work for them now! Vaiko Kumaral to the Tamil Nadu government!

இனி இவர்களுக்கும் அரசு வேலை! தமிழக அரசிடம் வைகோ குமுறல்!

கொரோனா தொற்றானது ஓராண்டு காலத்திற்கு மேல் மக்களை விடாமல் துரத்தி வருகிறது.ஆட்சி மாறிய சூழ்நிலையிலும் அரசாங்கம் பலவித நடவடிக்கைகளை எடுத்தும் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.அதனால் தொற்று அதிகமுள்ள மாநிலங்களில் மக்களின் நலன் கருதி முழு ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றனர்.அந்தவகையில் நம் தமிழ்நாட்டில் தற்போது தொற்று குறைந்துள்ள மாவட்டங்களில் மட்டும் தளர்வுகளற்ற ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.அதனையடுத்து தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்தயுள்ளனர்.

இந்த கொரோனா தொற்று காலத்தில் நம் தமிழ்நாட்டில் தமிழக அரசு ஆங்காங்கே தடுப்பூசி மற்றும் ஆர்டிபிசிஆர் டெஸ்ட்டுக்கான முகாம்கள் அமர்த்தி செயல்படுத்தி வருகின்றனர்.இதனையடுத்து தேசிய ஊரக வேலைவாய்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வேலைவைப்பு திட்டத்தை தமிழக அரசின் தேசிய ஊரக மற்றும் ஊராட்சி ஆணையர் வெளியிட்டார்.அந்த 100 நாட்களில் பணிபுரிபவர்கள் 55 வயதுக்கும் கீழ் இருக்க வேண்டும்.

சளி,இருமல்,காய்ச்சல்,சர்க்கரை நோய் போன்றவை உள்ளவர்கள் இந்த 100 நாள் வேலை திட்டத்தை உபயோகிக்கக்கூடாது போன்ற கட்டளைகளை ஊராட்சி ஆணையர் ஏப்ரல் 20 ம் தேதி கூறியிருந்தார்.அந்த ஆணையின் அடிப்படையில் 100 நாள் வேலைக்கு ஆட்கள் எடுக்குமாயின்,இந்த 100 நாள் வேலையை வாழ்தரமாக கொண்டிருக்கும் 55 வயது நிரம்பியவர்களின் வாழக்கை பெருமளவு பாதிப்பிற்குள்ளாகும்.அதனால் ம.தி.மு.க பொதுசெயலாளர் வைகோ தமிழக அரசுக்கு ஓர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது,55 வயதுக்கு மேற்பட்டவர்கள் 100 நாள் வேலை திட்டத்தை பயன்படுத்தக்கூடாது என்பதை தமிழக அரசு உடனடியாக தகற்ற வேண்டும்.ஏனென்றால் வயது முதிந்தவர்கள் இத்திட்டத்தை பயன்படுத்த முடியாமல் பெருமளவு சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.அதுமட்டுமின்றி இந்த 100 நாள் வேலை திட்டத்தை பயன்படுத்துபவர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்துவதையும் அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.இவரது கோரிக்கையை அரசு ஏற்குமா என்பது பெரும் கேள்வியாவே இருக்கிறது.