மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்து கொலை! 6 பேர் கும்பல் வெறிச்செயல்!

மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்து கொலை! 6 பேர் கும்பல் வெறிச்செயல்!

ஆவடியை அடுத்த பட்டாபி உழைப்பாளர் நகரில் 3 வது தெருவை சேர்ந்தவர் பிரசாந்த் 24  வயதான இவர், அவரது நண்பர் நாகராஜ் என்பவருடன் நேற்று மாலை காந்தி நகர் அருகே உள்ள ஏரிக்கரையில் அருகே மது அருந்த ஆரம்பித்தனர்.

அங்கே ஏற்கனவே ஒரு 6 பேர் கொண்ட கும்பல் மது அருந்திக்கொண்டு இருந்தனர். இந்நிலையில் இவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரம் அடைந்த அந்த கும்பல், பிரசாந்தை தாக்க முயன்றுள்ளனர்.

எனவே அங்கிருந்து பிரசாந்தும், அவரது நண்பரும் ஊட ஆரம்பித்து விட்டனர். இருந்தாலும் அந்த கும்பல் விடாமல் பின் தொடர்ந்து ஓடி பாரத மாதா தெருவில் இருவரையும் மடக்கி பிடித்தனர்.

அப்போது தலை மற்றும் கண் பகுதியில், காயம் அடைந்த பிரசாந்தின் நண்பர் நாகராஜ், அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

அந்த கும்பலிடம் வசமாக சிக்கிய பிரசாந்தை பீர் பாட்டில், தென்னை மட்டை, கற்கள் ஆகியவற்றை வைத்து அந்த கும்பல் ரவுண்டு கட்டியது. மேலும் அவரின் தொண்டையில் அழுத்தி செவற்றில் மோதி உள்ளது. அப்போதே  அவர் சுருண்டு, மயங்கி விழுந்த விட்டார்.

இருந்தாலும், ஆத்திரம் குறையாத அந்த 6 பேர் கும்பல் அவரது மார்பு பகுதியில் கல்லை கொண்டு குத்தியும், தலையில் கல்லை போட்டும் கொடூரமாக கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த பட்டாபிராம் சரக போலீஸ் உதவி கமிஷனர் வெங்கடேசன் மற்றும்  பட்டாபிராம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் மற்றும் போலீசார் கொலையான பிரசாந்த் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அண்ணா நகர் போலீஸ் துணை கமிஷனர் தீபா கனிக்கர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரனை மேற்கொண்டார். மேலும் தலைமறைவாக உள்ள கொலையாளிகளை பிடிக்க உதவி கமிஷனர் வெங்கடேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

அந்த 6 பேர் கொண்ட கும்பலை பிடித்தால் தான் கொலைக்கான உண்மையான காரணம் தெரியும் எனவும், வேறு ஏதேனும் காரணத்திற்காக கொலை நடந்ததா எனவும் போலீசார் தரப்பில் கூறினார்கள்.

மேலும் 6 பேர் கொண்ட கொலை கும்பலையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave a Comment