திமுக அடங்காத யானை! சட்டசபையில் கர்ஜித்த முதலமைச்சர்!

0
178

தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தொடரில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த பதில் உரையில் அவர் தெரிவித்திருப்பதாவது, தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்திருப்பதற்கு எடப்பாடி பழனிச்சாமி தான் காரணம். அவர் முதலமைச்சராக இருந்த சமயத்தில் நோய் தொற்று தடுப்புப் பணிகளை மேற்கொள்ள கூடாது என்று எடப்பாடி பழனிச்சாமி அவர்களை யாரும் கட்டிப் போடவில்லை என்று தெரிவித்திருக்கின்றார்.

மறுபடியும் ஆட்சிக்கு நாம் வரப்போவதில்லை என்று துல்லியமாக தெரிந்து கொண்ட எடப்பாடி பழனிச்சாமி மிகவும் அலட்சியமாக நோய்த்தொற்று பரவல் தொடர்பான விவகாரத்தில் செயல்பட்டதன் காரணமாக, நோய் தொற்று வைரஸ் அதிகரித்தது. நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் என்பதைப் போல பிப்ரவரி முதல் மே மாதம் வரையிலான காலத்தை எடப்பாடி பழனிச்சாமி மறந்து விட்டார் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்து இருக்கிறார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது எடப்பாடி பழனிச்சாமி சொல்லியதைப் போல ஆளுநர் உரை யானையும் இல்லை மணி ஓசையும் இல்லை அடங்கிய யானைக்கு தான் மணி கட்டுவார்கள். திமுக அடங்காத யானை ஆளுநர் உரையில் எல்லாமே இருந்தால் அதற்கு பெயர் டெலிபோன் டைரக்டரி என்று தெரிவித்திருக்கிறார். அதோடு அது ஆளுநர் உரை கிடையாது எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தது போன்று ஒன்றிணைந்து செயல்பட்டு நோய் பரவலை நாம் வெற்றி கொள்வோம் என்று தெரிவித்திருக்கிறார்.

Previous articleதடுப்பூசி போடவில்லை என்றால் சிறை! வெளியிடப்பட்ட அதிரடி அறிவிப்பு எங்கு தெரியுமா?
Next articleஅதிமுக கட்சியின் தலைமை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! அதிர்ச்சியில் தொண்டர்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here