மக்களுக்கு தண்ணீர் காட்டிய எம்எல்ஏ! குவியும் பாராட்டுக்கள்!

0
126
MLA who showed water to people! Accumulated compliments!
MLA who showed water to people! Accumulated compliments!

மக்களுக்கு தண்ணீர் காட்டிய எம்எல்ஏ! குவியும் பாராட்டுக்கள்!

கடந்த சட்டமன்ற தேர்தலானது ஏப்ரல் மாதம் நடைபெற்றது.இந்த தேர்தலில் திமுக பத்து ஆண்டுகள் கழித்து ஆட்சி அமர்த்தியது.பத்து ஆண்டுகள் கழித்து ஆட்சி அமர்தியதினால் நல்லாட்சியை திமுக அரசு பின்பற்றி வருகிறது.மக்களின் கோரிக்கைகளை கேட்டு உடனடியாக தீர்வு காண்கிறது.அந்தவகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வேலைவாய்ப்பு காரணமக ஓர் பெண் மனு கொடுத்தார்.அந்த மனுவை முதல்வர் உடனே பரீசீலனை செய்து அப்பெண்ணுக்கு பெரிய தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை வாய்ப்பை வாங்கி கொடுத்தார்.

அவரது மகனும் தனது சேப்பாக்க தொகுதியில் தனது மக்களின் கோரிக்கைகளை நேரடியாக அவர்களின் வீட்டிற்கே சென்று கேட்டு வருகிறார்.அந்த கோரிக்கைகளை உடனே நிறைவேற்றவும் செய்கிறார்.அந்தவகையில் சமீபத்தில் அத்தொகுதி மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகள் பயிலுவதற்கு தொலைப்பேசி இல்லாமல் சிரமப்பட்டு வந்துள்ளனர்.அதனை உதயநிதியிடம் கோரிக்கையாக கூறியுள்ளனர்.உதயநிதி உடனடியாக அந்த மாணவர்களுக்கு செல்போன் மற்றும் டேப் போன்றவற்றை வாங்கி கொடுத்து உதவினார்.மேலும் உதவி தொகையையும் மாணவ,மாணவிகளுக்கு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் அவர்களின் தலைவர்கள் வழியே நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் உள்ளனர் என்பதை தற்போது திமுக சட்டமன்ற உறுப்பினர் நிருபித்து காட்டியுள்ளார்.திமுக எம்எல்ஏ இனிகோ இதயராஜ்,இவர் திருச்சி கிழக்கு பகுதியில் எம்எல்ஏ வாக உள்ளார்.இவர் மக்களுக்காக பலமுறை குரல் கொடுத்துள்ளார்.அந்தவகையில் திருச்சி விமான நிலையம் உள்ள இடத்தில் சுதானா என்ற பகுதி உள்ளது.

இந்த பகுதியில் மக்கள் நல்ல தண்ணீர் இல்லாமல் அவதி பட்டு வந்துள்ளனர்.பலமுறை அங்குள்ளவர்களிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.தற்போது அந்த மக்கள் நேற்று எம்எல்ஏ இனிகோ இதயராஜ் கண்டு கோரிக்கை விடுத்துள்ளனர்.நேற்று மக்கள் கொடுத்த புகாருக்கு கடந்த 24 மணி நேரத்திற்குள் அந்த பகுதி மக்களுக்கு நல்ல குடி தண்ணீர் ஏற்பாடு செய்துள்ளார்.மக்கள் கொடுத்த புகாரை இவர் உடனடியாக ஏற்று நடவடிக்கை எடுத்ததால் அங்குள்ள அனைவரும் பெருமளவு இனிகோ இதயராஜ் பாராட்டி வருகின்றனர்.

Previous articleபள்ளிகள் திறப்பதில் சிக்கலா! அமைச்சருடன் முதல்வர் ஆலோசனை!
Next articleபுனர்பூ தோஷ பரிகாரம்!