காத்திருக்கும் கனமழை! பொதுமக்களே உஷார்!

0
292

இன்றைய தினம் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் தமிழ்நாட்டில் இன்றைய தினம் கோவை, நீலகிரி, தேனி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது. அதேபோல சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், கள்ளக்குறிச்சி ,தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால், ஆகிய இடங்களில் அநேக பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய தினங்களில் கோவை, உதகமண்டலம், உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. வட தமிழக மாவட்டங்கள் புதுச்சேரி ,காரைக்கால், ஆகிய இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருக்கிறது.

வரும் 15ஆம் தேதி திண்டுக்கல், தென்காசி, திருப்பூர், தேனி, கோவை, நீலகிரி, ஆகிய மாவட்டங்கள் வட கடலோர மாவட்டங்கள் உள்ளிட்ட இடங்களிலும் அதனை சுற்றி இருக்கின்ற உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதிகபட்ச வெப்ப நிலையானது 36 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆகவும், இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

Previous articleஆத்தூரை மாவட்டமாக மாற்ற வேண்டும்! பட்ஜெட் தாக்குதலில்  எம்.எல்.ஏ ஜெய்சங்கர் மனு! 
Next articleமுதலமைச்சருக்கு சம்மன் அனுப்பிய சிறப்பு நீதிமன்றம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here