கைக்குழந்தையுடன் பிரியங்கா! ரசிகர்களுக்கு கொடுத்த ஷாக் நியூஸ்!

0
368

கைக்குழந்தையுடன் பிரியங்கா! ரசிகர்களுக்கு கொடுத்த ஷாக் நியூஸ்!

விஜய் டிவியில் மக்கள் அதிகமாக விரும்பி பார்க்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சியில் பிரபலமானவர் தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே.

இவர் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக், பிபி ஜோடிகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை காண பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

பிரியங்கா தேஷ்பாண்டே கையில் குழந்தையோடு இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

பிரியங்கா தேஷ்பாண்டே சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதுமட்டுமின்றி சமையல் வீடியோ, வெளிநாடு சென்ற வீடியோ என பல வீடியோக்களை பகிர்ந்துள்ளார்.

இதனிடையே பிரியங்கா தேஷ்பாண்டே கடந்த 2016 ஆம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் பிரியங்கா தனது பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு வெற்றி பெற்றார் . தற்போது சூப்பர் சிங்கர், பிபி ஜோடிகள் 2 நிகழ்ச்சியை மிகவும் நகைச்சுவையாக தொகுத்து வழங்கி வருகிறார்.

பிரியங்கா தேஷ்பாண்டே எந்த ஒரு நிகழ்ச்சியிலும் அம்மா மற்றும் தம்பி பற்றி பேசிக்கொண்டே இருப்பார். இவருக்கு ரோஹித் என்ற தம்பி உள்ளார். அவருக்கு கடந்த 2020 ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

ரோஹித்தின் மனைவி கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டார்.

இந்நிலையில் ரோஹித்திற்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை கையில் வைத்த படி போஸ் கொடுத்துள்ளார் பிரியங்கா.

இந்த புகைப்படத்தை பார்த்த அனைவரும் பிரியங்கா தேஷ்பாண்டே அத்தை ஆனதற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Previous articleகாவலரை மிரட்டிய காங்கிரஸ் எம்எல்சி! உடனடியாக பதவியை விட்டு விலக்குங்கள்!
Next articleஇந்த மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுப்பு! ஏல தோட்ட தொழிலாளர்களுக்கும் ஓர் நாள் வேலை பாதிப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here