காவலரை மிரட்டிய காங்கிரஸ் எம்எல்சி! உடனடியாக பதவியை விட்டு விலக்குங்கள்!

0
138

காவலரை மிரட்டிய காங்கிரஸ் எம்எல்சி! உடனடியாக பதவியை விட்டு விலக்குங்கள்!

கர்நாடக மாநிலத்தின் சட்ட மேலவையில் நேற்று தேர்தல் நடைபெற்றது. அப்போது காவல் அதிகாரியை பார்த்து “பல்லை உடைத்து விடுவேன்” என காங்கிரஸ் எம்எல்சி மிரட்டினார் . இதனால் சட்ட மேலவையில் பெறும் சலசலப்பு ஏற்பட்டது.

2013 ம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் எம்எல்சி போட்டியிட்டார். மேலும் அதே ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் சிக்கோடியில் அமைந்த சட்டசபையில் சடல்கா எனும் தொகுதியில் போட்டியிட்டு 1,02,237 வாக்குகள் பெற்றார். 2008ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களிலும் இதே தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார்.

பெலகாவியில் உள்ள வடமேற்கு டீச்சர்ஸ் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பிரகாஷ் ஹக்கேரி போட்டியிட்டார். அதே சமயம் பாஜக சார்பில் அருண் ஷாஹாபூரும் போட்டியிட்டார்.

நேற்று மாலை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது. இறுதி முடிவில் காங்கிரஸின் பிரகாஷ் ஹக்கேரி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

வாக்கு எண்ணும் இடத்துக்கு பிரகாஷ் ஹக்கேரி சென்றார். அவருடன் பெலகாவி காங்கிரஸ் எம்எல்ஏவான லட்சுமி ஹெபால்கரும் சென்றார்.பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெலகாவி காவல் உதவி ஆணையர் சதாசிவ் கட்டிமானி,

எம்எல்ஏ லட்சுமி ஹெபால்கரை இந்த வழியாக யாரும் செல்ல அனுமதி இல்லை என தடுத்து நிறுத்தினார்.

அப்போது அங்கு வந்த பிரகாஷ் ஹக்கேரி பதவி கிடைத்த உடன் காவல் உயரதிகாரி என்று கூட எண்ணாமல், “பல்லை உடைத்து விடுவேன்” என்று கூறியவாறே அவரை கடந்து சென்றார்.

அந்த கட்சியில் இருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகின்றது.

கங்கிரஸ் எம்எல்சி, பிரகாஷ்யை பதவி நீக்கம் செய்யக் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.