ஆயுத பூஜை கொண்டாட வேண்டிய நல்ல நேரம் !

0
130

ஆயுத பூஜை கொண்டாட வேண்டிய நல்ல நேரம் !

இந்தியா முழுவதும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இன்று நவமி திதி அன்று ஆயுத பூஜையும், நாளை தசமி திதி அன்று விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது.
குறிப்பாக தென் மாவட்டங்களில் இந்த பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் ஒன்பதாம் நாளான நவமி திதியில் ராமன் மகிஷாசுரனை வதம் செய்து வெற்றி அடைந்ததைப் போற்றும் விதமாக விஜய தசமி தினம் கொண்டாடப்படுவதாக புராணக்கதைகள் சில கூறுகின்றன. இந்த போருக்காக துர்க்கை அம்மன் ஆயுதங்களுக்கு பூஜை செய்ததை கொண்டாடும் விதமாக ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. ஆயுத பூஜை அன்று, மக்கள் அவர்களின் தொழிலுக்கு பயன்படுத்தும் உபகரணங்கள், அத்தியாவசியமான பொருட்களை வைத்து வணங்குவார்கள்.

ஆயுத பூஜை கொண்டாட உகந்த நேரம்:

ஆயுத பூஜை முக்கிய நேரங்கள், சூரிய உதயம் காலை 6:23 மணிக்கும், மாலை 6:07 மணிக்கு சூரியன் அஸ்தமனம் ஆகிறது. நவமி திதி தொடங்கும் நேரம் நேற்று மாலை 4:38 மணிக்கு தொடங்கி இன்று பிற்பகல் 2:21 மணி முடிவடைகிறது. சந்தி பூஜை முகூர்த்தம் நண்பகல் 1:57 மணிக்கு தொடங்கி 2:45 மணிக்கு முடிவடைகிறது.

எவ்வாறு ஆயுத பூஜை கொண்டாடுவது?

ஆயுத பூஜையன்று நம் தொழிலுக்கு தேவையான உபகரணங்கள், வீட்டில் உள்ள அத்தியாவசிய உபகரணங்கள், தொழிற்சாலை அல்லது தொழில் செய்யும் இடங்களில் உள்ள உபகரணங்களை சுத்தப்படுத்தி, வீடு மற்றும் அலுவலகத்தில் உள்ள வாகனங்களை கழுவி, குங்குமம் சந்தனம் வைத்து, மாலை சூட்டவேண்டும். மாணவர்கள் தங்கள் புத்தகங்களில் படிப்பு சம்பந்தப்பட்ட உபகரணங்களில் சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும்.துர்க்கை அன்னை முன் அனைத்தையும் படைத்து பின்னர் பஜனைகள் பாடி பூஜையை நிறைவு செய்ய வேண்டும். சிலர் திருஷ்டி கழிக்க வெள்ளைப் பூசணிக்காய் மீது மஞ்சள் பூசி வாகனத்தின் முன் உடைத்து அனைத்து விதமான தோஷங்களையும் நீக்குகின்றார்கள். சிறிய ஊசி முதல் கத்தி, அரிவாள், சமையல் கருவிகள், கத்தரிக்கோல், ஸ்பேனர்கள், கணினி, வேறு இயந்திரங்கள், புத்தகங்கள் போன்ற அனைத்து வகையான கருவிகளையும் வைத்து வழிபடுகின்றனர். இனிய ஆயுத பூஜை வாழ்த்துக்கள்.