ஹிந்து கலாச்சாரத்தை அழிக்க பல 100 ஆண்டுகளாக சதி நடைபெறுகிறது! வானதி ஸ்ரீனிவாசன்!

0
77

இந்தியாவில் தேசிய அளவில் ஒரு மிகப்பெரிய மதமாக பார்க்கப்படுவது இந்து மதம். ஆனால் அந்த இந்து மதத்தை அழிப்பதற்கு பலகாலமாக சூழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக தான் இந்து மக்களையும், இந்து தெய்வங்களையும் கொச்சைப்படுத்தும் விதமாக அவ்வபோது அரசியல்வாதிகள் பேசி வருகிறார்கள். ஆனால் இந்த அரசியல்வாதிகள் இப்படி இந்து மக்களை கொச்சைப்படுத்தும் விதமாக பேசுவதில் அவர்களுக்கு சுய லாபமும் இருக்கிறது. சிறுபான்மையினரை திருப்தி படுத்தியதற்காகவே அவர்கள் இவ்வாறு அடிக்கடி பேசி வருகிறார்கள்.

ஆனால் இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் இந்து மக்களையும் சரி இந்து கடவுள்களையும் சரி அவமானப்படுத்தும் விதமாகவும், கொச்சைப்படுத்தும் விதமாகவும் பேசினாலும் கூட இந்து மக்கள் அதனை பெரிதாக கருதுவதில்லை என்பதுதான் இங்கே இந்து மக்களிடம் இருக்கும் மிகப்பெரிய குறைபாடாக காணப்படுகிறது.

அதே வேலையில் சிறுபான்மையினரை கொச்சைப்படுத்தும் விதமாக எந்த ஒரு அரசியல்வாதியும் எந்த மேடையிலும் இதுவரையில் பேசியதில்லை. அப்படியே பேசினாலும் எதிர்காலத்தில் தேர்தலில் அவர்கள் தங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பது இந்த அரசியல்வாதிகளுக்கு நன்றாகவே தெரியும்.

ஆனால் பெரும்பான்மை சமூகமான இந்த இந்து சமூகம் பெரிய அளவில் ஒற்றுமை இல்லாமலும் மதப்பற்று இல்லாமலும் இருப்பதால் அந்த விஷயத்தை பல அரசியல்வாதிகளும், சிறுபான்மையினர்களும் பயன்படுத்திக் கொண்டு இந்து மக்களையும், இந்து தெய்வங்களையும் கொச்சைப்படுத்தும் விதமாக பேசி வருகிறார்கள்.

இந்து மக்கள் இப்படி எந்த விதமான விவரமும் இல்லாமல் இருப்பதால்தான் சிறுபான்மையினரும், சில அரசியல்வாதிகளும் அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

சமீபத்தில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் சோழர்களின் வரலாறை கூறும் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது.

இதற்கும் அந்த திரைப்படத்திற்கும் என்ன தொடர்பு என்று சிந்திக்கிறீர்களா?சோழர்களின் குலதெய்வம் தில்லை நடராஜர் என்பது சோழர்களின் வரலாற்றை அறிந்த எல்லோருக்கும் தெரியும்.

ஆனால் தற்போது சமூக வலைதளங்களில் ஒரு விவாதம் மிகவும் காரசாரமாக நடைபெற்று வருகிறது. அதாவது இராஜராஜசோழன் இந்து சமயத்தை சார்ந்தவரா? என்பதுதான் அந்த விவாதம்.

ஆனால் இன்று வரையில் தமிழகத்தில் இருக்கக்கூடிய பல சிவாலயங்களில் எந்த இடத்திலும் இது இந்து கோவில் அல்ல என்று யாரும் குறிப்பிட்டது கிடையாது. ஆனால் தற்போது அரசியல் செய்வதற்காகவே ராஜ ராஜ சோழன் இந்து சமயத்தை சார்ந்தவரா என்று கேள்வியை எழுப்பி உள்ளார்கள்.

இந்த நிலையில் இந்து மத கலாச்சாரத்தை அழித்து ஒழிக்க பல 100 வருடங்களாக சதி வேலைகளை நடத்தி வருகிறார்கள் என்று பாஜகவின் தேசிய மகளிரணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் மணிவிழாவில் பேசிய திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பது ராஜ ராஜ சோழனை ஹிந்து அரசன் ஆக்குவது என்று சினிமாவில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று பேசி உள்ளது கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார் வானதி ஸ்ரீனிவாசன்.

ஒட்டுமொத்த உலகமும் வியக்கும் அளவிற்கு தஞ்சாவூரில் சிவபெருமானுக்கு மிகப்பெரிய கோவிலை கட்டியவர் ராஜராஜ சோழன் அவருக்கு சிவ பாதக சேகரன் சோழநாராயணன் திருமுறை கண்ட சோழன் என்று பல பெயர்கள் இருக்கிறது. சோழர்கள் ஆண்ட நாடுகளில் சிவபெருமானுக்கு கோவில் கட்டி உள்ளார்கள்

சங்க இலக்கியங்கள் போன்ற தொன்மையான தமிழ் இலக்கியங்கள் எல்லாவற்றிலும் இந்து வழிபாடு தொடர்பாகவும் சிவன், பிரம்மா, விஷ்ணு என்று இந்து கடவுள்கள் தொடர்பாகவும் விரிவாகவே பேசப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு இந்துக்களின் ஆன்மீக பூமியாக இருந்து வருகிறது அன்னிய படையெடுப்பால் இங்கே அந்நிய மதங்கள் வந்துள்ளனர் சேர சோழ பாண்டியர்கள் கட்டிய 30 ஆயிரம் கோவில்கள் இங்கு இருக்கின்றன. ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் ஆயிரம் வருடங்களை கடந்து நம்முடைய ஹிந்து வழிபாட்டு அடையாளமாக இருக்கிறது.

இன்றளவும் இந்தியாவில் மற்றும் மதங்களின் ஆதிக்கம் இருக்கிறது. மதமாற்றங்கள் தொடர்ந்து வருகின்றன. ஹிந்து மத கலாச்சாரத்தை அழித்து விடுக்க பல 100 வருடங்களாக சதி வேலைகள் நடைபெற்று வருகின்றன.

அதன் தொடர்ச்சி தான் திரைப்பட இயக்குனர் வெற்றிமாறனின் இந்த பேச்சு.1000 வருடங்கள் நிலைத்து நிற்கும் சிவாலயத்தை கட்டிய ராஜராஜ சோழனை ஹிந்து அல்ல என்று சொல்லவும் அவர் துணிந்திருக்கிறார்.

இது இந்து கலாச்சாரத்தை அழிக்கும் சதி திட்டத்தின் ஒரு பகுதியாகும் தமிழர்கள் இந்துக்கள் இல்லை என்றால் இந்த மண்ணில் வேறு யாருமே ஹிந்துக்கள் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.