நடிகர் கவின் நடிக்கும் அடுத்த திரைப்படம்!! முதல் முறையாக கவினுடன் இணைந்த ராக்ஸ்டார்!!

நடிகர் கவின் நடிக்கும் அடுத்த திரைப்படம்!! முதல் முறையாக கவினுடன் இணைந்த ராக்ஸ்டார்!!
நடிகர் கவின் அடுத்ததாக நடிக்கவுள்ள திரைப்படத்தில் ராக்ஸ்டார் அனிருத் அவர்கள் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் நடிகர் கவின் அவர்களுடன் முதன் முறையாக இணைவதாக தகவல் கிடைத்துள்ளது.
இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் வெளியான டாடா திரைப்படத்தில் நடிகர் கவின் கதாநாயகனாக நடித்திருந்தார். டாடா திரைப்படம் நடிகர் கவின் அவர்களுக்கு மிகப் பெரிய வெற்றியையும் தமிழ் சினிமாவில் ஒரு அங்கீகாரத்தையும் பெற்றுக் கொடுத்தது.
டாடா திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கவின் அவர்கள் நடன இயக்குநர் சதீஷ் இயக்கப்போகும் முதல் படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக அயோத்தி திரைப்படம் மூலமாக பிரபலம் அடைந்த நடிகை பிரீத்தி அஸ்ரானி நடிக்கவுள்ளார். ரோமியோ பிக்சர்ஸ் சார்பாக ராகுல் தயாரிக்கிறார்.
இதையடுத்து நடிகர் கவின் நடிக்க நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் முதல் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று அதாவது மே 26ம் தேதி பூஜையுடன் தொடங்கியுள்ளது. சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறும் எனவும் தகவல் வெளியாகி இருக்கின்றது.