எதிர்வரும் நான்கு நாட்களுக்கு இந்த மாவட்ட மக்கள் உஷாராக இருங்கள் வளர்த்த எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்.

0
102

நாளைய தினம் தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், உதகை, உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. நாளை மறுநாள் தேனி, திண்டுக்கல், நீலகிரி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்து இருக்கிறது சென்னை வானிலை ஆய்வு மையம்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று முதல் வரும் 6ஆம் தேதி வரையில் தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும், இன்று நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை வரையில் பெய்யும் எனவும் கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம், திருப்பூர், திண்டுக்கல், தேனி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது.

நாளைய தினம் கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. சென்னையை பொருத்தவரையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் நகரத்தின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

கேரளா மற்றும் கர்நாடகா கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு உள்ளிட்ட இடங்களில் 4-ஆம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரையில் பலத்த காற்று வீசுவதால் வாய்ப்பு இருக்கிறது. அதாவது மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இன்று முதல் வரும் 6-ஆம் தேதி வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று பேசுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாக, மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.