ஆப்கானிஸ்தான் இரட்டை குண்டு வெடிப்பு! அமெரிக்காவின் அடுத்தடுத்த தாக்குதல்!

0
69

ஆப்கானிஸ்தான் தலைநகரம் காபூலில் இருந்து முழுவதுமாக அமெரிக்கப் படை வாபஸ் பெற தொடங்கி இருக்கின்ற நிலையில், சென்ற மூன்று தினங்களில் இரண்டாவது ஆளில்லா ட்ரோன் தாக்குதலை நடத்தி வருகிறது அமெரிக்க ராணுவம்.சென்ற ஆகஸ்ட் மாதம் இருபத்தி ஆறாம் தேதி மாலை காபூல் விமான நிலைய வாசலில் அருகில் ஒரு பகுதியில் என்று இரண்டு பகுதிகளில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் பலியானார்கள். அமெரிக்காவுடன் தாலிபானின் இணக்க போக்கை கண்டிக்கும் விதமாக இந்த தாக்குதலை நடத்தியதாக ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

இந்த தாக்குதலில் பொதுமக்கள் மற்றும் தாலிபான் படையினரோடு அமெரிக்க ராணுவ படையினரும் பலர் உயிரிழந்தார்கள் இதன் காரணமாக, கடும் கோபம் அடைந்த அமெரிக்கா இந்த சம்பவம் நடந்த மறுநாள் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி நள்ளிரவு ஆகஸ்ட் மாதம் 28 தேதி அதிகாலையில் நாங்கரஹமத் மாகாணத்தில் ஐஎஸ் பயங்கரவாதிகள் இருவரை ஆளில்லாத ட்ரோன் மூலமாக தாக்கி பலி கொண்டது.

இதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் காபூல் விமான நிலையம் அருகே மற்றொரு ஆளில்லா ட்ரோன் தாக்குதலையும் அமெரிக்க ராணுவம் நடத்தியிருக்கிறது. காபூல் விமான நிலையத்தின் மீது மற்றுமொரு தாக்குதல் நடத்தும் விதத்தில் வாகனங்களில் வெடிபொருட்கள் முழுவதுமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனை கண்டு கொண்ட அமெரிக்க ராணுவம் அந்த வாகனங்களின் மீது தாக்குதல் நடத்தி வெடிபொருட்களை முற்றிலுமாக அழித்தது என்று அமெரிக்கத் தரப்பு தெரிவித்து வருகிறது.

ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்திற்கு வடக்கே நேற்றைய தினம் மாலை ஒரு பெரிய குண்டு வெடிப்பு நடந்ததாக கண்ணால் பார்த்தவர்கள் சாட்சியும் தெரிவித்திருக்கிறார்கள். அதோடு தொலைக்காட்சி காட்சிகளில் வானில் கருப்புப் விரும்புவதை காட்டியிருக்கிறார்கள். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகஸ்ட் மாதம் 28 தேதி காபூலில் எதிர்வரும் 24 முதல் 36 மணி நேரத்திற்குள் இன்னொரு தீவிரவாத தாக்குதலுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக அவருடைய இராணுவத் தலைவர்கள் தெரிவித்ததாக எச்சரிக்கை செய்து இருக்கிறார்.

அதிலும் குறிப்பாக அமெரிக்க ராணுவத் துருப்புகளை கிளம்பும்போது விமான நிலையத்தை தாக்குவதற்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பினர் திட்டமிட்டு இருப்பதாக அமெரிக்கா தெரிந்துகொண்டது. இந்நிலையில், தான் கடந்த வியாழக்கிழமை தற்கொலைக் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட அமெரிக்க படையினர் இறுதி மரியாதை செலுத்துவதற்காக டெலவேரில் இருக்கின்ற தோபர் விமானப்படைத் தளத்துக்கு ஜோ பிடன் வந்த சமயத்தில் சரியாக காபூலில் நேற்றையதினம் தாக்குதல் நடைபெற்று இருக்கிறது. இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் உடைய வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட கார் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்தாலும் இந்த தாக்குதலில் குழந்தைகள் உள்ளிட்ட பொது மக்களும் பலியானார்கள் என்று காபூல் உள்ளூர் செய்திகளை குறிப்பிட்டு தி கார்டியன் சொல்லியிருக்கிறது. தற்சமயம் வரையில் காபூல் விமான நிலையத்திலும் அதை சுற்றிலும் இருக்கின்ற 5800 அமெரிக்கப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.