ரஜினியை வைத்து பக்காவாக கட்டம் கட்டும் பிஜேபி! தமிழகத்தில் அமித்ஷாவின் சித்து விளையாட்டு பலிக்குமா!

0
76

தான் அரசியலுக்கு வர வேண்டாம் என்று அவரே நினைத்தாலும் ரஜினியால் அது முடியாது போல. அவர் வந்தே ஆகவேண்டும் என்ற நெருக்கடியும் இருக்கத்தான் செய்கின்றது.

எதிர்வரும் தேர்தலில் வென்று ஆட்சிக்கு வர முடியாது என்பது பாரதிய ஜனதாவிற்கு தெரிந்ததுதான் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட அளவில் சட்டமன்ற உறுப்பினர்கள் வேண்டும் என்று தீர்க்கமாக இருக்கிறது பாஜக.

பாஜகவின் உறுதி அந்த கட்சியினரின் வேகத்திலேயே தெரிகின்றது. அதே சமயத்தில் அதிமுக இல்லை என்றால் திமுக, திமுக இல்லையென்றால் அதிமுக, என்ற தமிழகத்தின் அரசியல் நிலைமையை மாற்ற வேண்டும் என்பதில் முனைப்பாக செயல்பட்டு வருகிறது பாஜக.

இந்த இரு கட்சிகளையும் தாண்டி மூன்றாவதாக வரும் ஒரு பெரிய சக்தியால் மட்டுமே அதனை நிகழ்த்திக் காட்ட முடியும், அந்த மிகப்பெரும் சக்தியாக இருப்பது ரஜினிகாந்த் அவர்கள் தான்.

அதனாலே அவர் கட்சி தொடங்கிவிட்டால் அதிமுக இல்லை என்றால் திமுக, அதிமுக இல்லை என்றால் அதிமுக, என்ற ஒரு நிலைப்பாடு மாறும் அப்படி மாறும் நேரத்தில் பாஜக தனக்கான பாதையை அமைக்கும் என்று சொல்கிறார்கள்.

இவை அனைத்தும் தெரிந்ததுனாலேதான் ரஜினிகாந்த் அவர்கள் ஒதுங்கிக் கொண்டு இருக்கிறார் என்று தெரிவிக்கிறார்கள் திராவிட கட்சியினர்.

உடல்நிலை காரணமாக வைத்து கட்சி தொடங்குவதில் இருந்து விலகி விடலாம் என்றுதான் ரஜினியும் முயற்சித்து வருகின்றார். இருந்தாலும் இந்து அமைப்புகள் ரஜினி அரசியலுக்கு வருவார் என்று சொல்லி வருகிறார்கள்.

இது ஒரு பக்கம் இருந்தாலும் அமித்ஷா அவர்களின் நெருங்கிய நண்பர் துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி ரஜினியை நேரில் சந்தித்து சுமார் 40 நிமிடங்கள் பேசி இருக்கின்றார்.

குருமூர்த்தியின் சந்திப்பு பல யூகங்களை கிளப்பியிருக்கிறது. தற்போது இருக்கும் சூழ்நிலையில் கட்சி தொடங்கி பொதுக்கூட்டம் பிரச்சாரம் அனைத்தையும் சமாளிக்க இயலாது போல் இருக்கிறது.

என ரஜினிகாந்த் எடுத்து கூறியதாகவும், உங்களுக்கு இருக்கும் பவருக்கு கட்சியை தொடங்கி கொடியை அறிமுகப்படுத்தினால் போதும் பொதுக்கூட்டம் பிரச்சாரம் என எங்கேயும் போகத் தேவையில்லை.

காணொளி வாயிலாகவே அனைத்தையும் முடித்து விடலாம் என அமித்ஷாவின் எண்ணத்தை ரஜினிகாந்த் அவர்களுக்கு சொல்லியிருக்கிறார் ஆடிட்டர் குருமூர்த்தி என்று தெரிவிக்கிறார்கள்.