முழு ஊரடங்கு எதிரொலி! அம்மா உணவகங்களில் மந்தமான விற்பனை!

0
59

நோய்த்தொற்று காரணமாக, நேற்றைய தினம் ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தபட்டதன்காரணமாக, உணவு விடுதிகளில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. அமர்ந்து உண்ண அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. அத்துடன் சாலையோர சிறு உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டது. அதன் காரணமாக, அம்மா உணவகங்களில் கூட்டம் அதிகமாக சேர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெரிய அளவில் அங்கே மக்கள் கூட்டம் வரவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

முன்கூட்டியே முழுமையான ஊரடங்கு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் காரணமாக, அதற்கேற்றவாறு உணவை தயார் செய்து கொண்டார்கள். ஆதரவற்றவர்கள், சாலையோரம் வசிப்பவர்கள், மட்டுமே அம்மா உணவகங்களை நாடி வந்ததாக சொல்லப்படுகிறது.

எப்போதும் போலவே உணவு விற்பனை ஆகியிருக்கிறது காலை, மதியம், உள்ளிட்ட சமயங்களுக்கு உணவகத்திற்கு கூட்டம் வரவில்லை. இரவில் மட்டுமே வழக்கத்தைவிட அதிகமாக பொதுமக்கள் வந்ததாக அம்மா உணவக ஊழியர்கள் தெரிவித்திருக்கிறார்கள். பகல் சமயங்களில் ஹோட்டல்களில் உணவு வாங்கி சாப்பிட்டதன் காரணமாக, அம்மா உணவகங்களை பொதுமக்கள் அதிகமாக நாடவில்லை வழக்கமாக வரக்கூடியவர்கள் மட்டுமே வந்தார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

சென்னையில் சுமார் 400க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன, இங்கு நாள்தோறும் 1.75 லட்சம் பேர் உணவு அருந்தி வருகிறார்கள். குறைந்த விலையில் உணவு கிடைப்பதன் காரணமாக, கூலித்தொழிலாளர்கள் ஆதரவற்றவர்கள் உள்ளிட்டோர் இந்த அம்மா உணவகங்களில் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள்.

இதுதொடர்பாக அம்மா உணவக ஊழியர் ஒருவர் தெரிவிக்கும்போது, வழக்கமாக நடைபெறும் வியாபாரத்தை விட அதிகமாக விற்பனையாகும் என்று எதிர்பார்த்து இருந்தோம். அதற்காக கூடுதலான உணவுப் பொருட்கள் தயார் நிலையில் இருந்தனர். யாரும் உணவு இல்லை என திரும்பி சென்று விடக்கூடாது என்று நினைத்து தயார் நிலையில் உணவு பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தது.

ஆனாலும் கூட எதிர்பார்த்த அளவு கூட்டம் வரவில்லை காலை,மதியம், உள்ளிட்ட சமயங்களை விடவும் இரவில் சப்பாத்தி சாப்பிட அதிக நபர்கள் வருகை தந்தார்கள். இதன் காரணமாக, சப்பாத்தி தயார் செய்து வழங்கினோம் என்று தெரிவித்திருக்கிறார்.