இலவச தையல் மெஷினை பெற இந்தத் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்:! மாவட்ட ஆட்சியர் தகவல்!

0
100

இலவச தையல் மெஷினை பெற இந்தத் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்:! மாவட்ட ஆட்சியர் தகவல்!

திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பெண்கள்,அதாவது கணவனால் கைவிடப்பட்டோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளி ஏழைப் பெண்களுக்கு,திருவள்ளூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டிற்கான,இலவச தையல் மிஷினை பெறுவதற்கு வருகின்ற செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தையல் இயந்திரத்திற்கு விண்ணப்பிக்க,விண்ணப்பப் படிவத்துடன் கீழ்கண்ட சான்றிதழ்களையும் இணைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

1. வட்டாட்சியர் இடம் பெற்ற வருமான சான்று.(ஆண்டு வருமானம் ரூ.72,000 கீழே இருப்பவர்கள் மட்டும்)

2.இருப்பிடச் சான்று அல்லது குடும்ப அட்டை

3.பதிவு செய்யப்பட்ட தையல் நிறுவனத்திடமிருந்து தையல் பயிற்சி பெற்ற சான்று.

4.வயது சான்று அதாவது ஏதேனும் ஒரு கல்வி சான்று அல்லது பிறப்புச் சான்று

5.விதவை,கணவரால் கைவிடப்பட்டவர் ஆதரவற்ற மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளி பெண்ணின் சான்று நகல்,

6.மனுதாரரின் கடவுச்சீட்டு,இரண்டு கலர் போட்டோ மற்றும் ஜாதி சான்றிதழ்.

7.ஆதார் அடையாள அட்டையின் நகல் இவை அனைத்தும்,இணைத்து செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்ட முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.

முகவரி: மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரக வளாகம் 2ம் தளம், திருவள்ளுர் – 602001. தொலைபேசி எண். 044-29896049 மற்றும் சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் தொடர்புகொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

author avatar
Pavithra