திமுகவின் 1000 ரூபாயில் தான் பெண்கள் அழகாக இருக்கிறார்களா? நடிகை குஷ்பு பிரச்சாரத்தில் பேச்சு!

0
39
#image_title

திமுகவின் 1000 ரூபாயில் தான் பெண்கள் அழகாக இருக்கிறார்களா? நடிகை குஷ்பு பிரச்சாரத்தில் பேச்சு!

திமுக கட்சி மாதம் தருகின்ற 1000 ரூபாயில் தான் பெண்கள் அழகாக இருக்கிறார்களா என்று பிரச்சாரத்தில் நடிகை குஷ்பு அவர்கள் கேள்வி கேட்டுள்ளார்.

தேர்தல் நாள் நெருங்கிக் கொண்டிருக்கும் வேலையில் பிரச்சாரம், வாக்கு சேகரிப்பு என அனைத்து வேலைகளும் பரபரப்பாக நடந்து வருகின்றது. இதையடுத்து வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடி சட்டப் பேரவை தகுதிக்கு உட்பட்ட ஆலங்காயம், உதயேந்திரம் போன்ற பகுதிகளில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி சண்முகம் அவர்களை ஆதரித்து பேசினார்.

அந்த பிரச்சாரத்தில் நடிகை குஷ்பு அவர்கள் “தேசத்தின் வளர்ச்சிக்கு என்ன தேவை என்பது குறித்து மக்கள் அனைவரும் சிந்திக்க வேண்டிய நேரம் இது. ஒரு மனிதன் வாழ்வதற்கு இருக்க வீடு, உண்ண உணவு, உடுத்த ஆடை இவை மூன்றும் மிகவும் முக்கியம். இந்த மூன்றையும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடந்த பத்து ஆண்டுகளில் நமக்கு கொடுத்துள்ளார்.

இவை அனைத்தும் தெரிந்துமே முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் பிரதமர் நமக்கு என்ன செய்தார் என்று கேட்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாஜக கட்சியின் தலைமையிலான மத்திய அரசானது 2 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்துள்ளது. தமிழர்களுக்காகவும், தமிழகத்திற்காகவும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நிறைய செய்துள்ளார் என்பது உங்களுக்கே தெரியும்.

இங்கு இருக்கும் ஒரு அமைச்சரின் மகன் பெண்களை பார்த்து கிண்டல் செய்கிறான். அதாவது நாங்கள்(திமுக) தரும் 1000 ரூபாயை வைத்து பெண்கள் மேக்கப் போட்டு பளபளப்பாக இருக்கிறார்கள் என்று கிண்டல் செய்கிறான். இவர்கள்(திமுக) தரும் 1000 ரூபாயில் தான் பெண்கள் அழகாக இருக்கிறார்களா என்ன?

தமிழகத்தில் எங்கு திரும்பி பார்த்தாலும் சாராய விற்பனை, போலேட் பொருள் விற்பனை நன்றாக நடைபெற்று வருகிறது. இதனால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்கின்றது. தமிழகம் கடன் வாங்குவதிலும் போதைப் பொருள் விற்பனை செய்வதிலும் முன்னோடி மாநிலமாக விளங்குகிறது. இவை அனைத்தையும் சரி செய்ய வேண்டும் என்றால் வேலூர் சட்டமன்ற தொகுதியில் பாஜக கட்சி சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் நம்முடைய வேட்பாளர் ஏ.சி சண்முகம் அவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்” என்று பேசினார்.