1.28 லட்சமாக குறைந்தது நோய்த்தொற்று பாதிப்பு!

0
77

இந்தியாவில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1.28 லட்சமாக குறைந்தது. இது கடந்த 527 நாட்களில் பதிவான மிகக் குறைவான எண்ணிக்கை என்று சொல்லப்படுகிறது.

நாட்டில் நேற்றைய நோய்தொற்று நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு இருக்கின்ற அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் இன் விகிதம் 98. 28 சதவீதமாகவும், பலியானவர்களின் சதவீதம் 1.35 சதவீதமாகவும், இருக்கிறது. அதோடு தற்சமயம் 0.37 சதவீதம் பேர் சிகிச்சையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

நாட்டில் இன்று காலை 8 மணி நிலவரப்படி 113. 68 கோடி தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது. இதில் நேற்று மட்டும் 67 லட்சத்து 82 ஆயிரத்து 42 பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில், தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.