வாகன ஓட்டிகள் மீது அதீத கருணை காட்டும் எண்ணெய் நிறுவனங்கள்! நெகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்!

0
251

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் ஏற்ற இறக்கம் இருந்து வருகின்றன. அந்த நேரத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் நாள்தோறும் மாற்றம் செய்யப்படுகின்றன.

இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆக இருந்து வரும் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன .நோய்த்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது.

ஆனால் கடந்த ஜூன் மாதம் முதல் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி வருகின்றன. இந்தநிலையில், ஆறாவது தினமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை. ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 99 ரூபாய் 20 காசுக்கும், ஒரு லிட்டர் டீசலின் விலை 93 ரூபாய் 52 காசுக்கும், விற்பனையாகி வருகிறது

Previous articleசட்டசபையில் பொதுப்பணித்துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! வாகன ஓட்டிகள் பெருமகிழ்ச்சி!
Next articleடோக்கியோ பாரா ஒலிம்பிக்! பங்கேற்ற முதல் போட்டியிலேயே பதக்கம் வென்ற இந்திய வீரர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here