கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட எஸ்.பி. பாலசுப்ரமணியம்! சற்றுமுன் வெளியான தகவல்

S. P. Balasubrahmanyam

பின்னணி பாடகரான எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா தொற்று பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதனையடுத்து கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த அவருக்கு திடீரென்று அவரது உடல்நிலை மோசமடைந்தது. இது அவரது ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் உள்ளிட்ட அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில் கொரோனா பாதிப்பிலிருந்து எஸ்.பி. பாலசுப்ரமணியம் குணமடைந்து நலமுடன் வர வேண்டும் என்று பிரபலங்கள், அவரது ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரும் உலகம் முழுவதும் பிராத்தனைகளில் ஈடுபட்டனர். இந்நிலையில் கொரோனா பாதிப்பிலிருந்து எஸ்.பி. … Read more

ஊரடங்கால் சிறுமிக்கு நடந்த அவலம்….

ஊரடங்கால் சிறுமிக்கு நடந்த அவலம்....

புனே : நாடே ஊரடங்கு உத்தரவால் முடங்கி கிடக்க அத்தை மகனால் 16 வயதுடைய சிறுமி பலமுறை கற்பழிக்கப்பட்டு கற்பமடைந்த அவலம் தெரியவந்துள்ளது. சிறுமி கற்பமடைந்ததை மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்ட பிறகு சிறுமியின் அம்மாவால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் பின் அந்த நபர் கைது செய்யப்பட்டார். புனே போலிஸ் இதைப்பற்றி தெரிவிக்கையில், ” ஒரே வீட்டில் அந்த குடும்பம் தங்கியிருந்தது. முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வரும்முன் அந்த சிறுமியின் அத்தை மகன் (35 வயது), … Read more

சோனியா பதவியை விட்டு விலகுகிறாரா? காங்கிரஸ் கட்சியில் பரபரப்பு

சோனியா பதவியை விட்டு விலகுகிறாரா? காங்கிரஸ் கட்சியில் பரபரப்பு

லோக்சபா 2019 தேர்தலுக்கு பிறகு ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை விட்டு விலகினார். இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி பதவியை வகித்து வந்தார். இந்நிலையில் காங்கிரஸ் காங்கிரஸ் கட்சியின் சில தலைவர்கள் சோனியாகாந்திக்கு கடிதம் எழுதியதாகவும் அதில் கட்சியை புதுப்பிக்கவும், பழம்பெரும் கட்சிக்கு திறன் மிகுந்த தலைமை வேண்டுமென்றும், கட்சியின் உட்கட்டமைப்பில் மாற்றங்கள் வேண்டுமென்றும் குறிப்பிட்டு கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது.. ஆயினும் இப்படி ஒரு கடிதம் யாரும் எழுதவில்லையென காங்கிரஸ் மறுப்பதாகவும் சொல்லப்படுகிறது. ராகுலுக்கு ஆதரவு: … Read more

கோஷ்டி அரசியலால் திமுக பக்கம் நகரும் அதிமுகவின் முக்கிய பிரபலம்! குழப்பத்தில் அதிமுக தலைமை

Edappadi Palanisamy and O Panneerselvam-News4 Tamil Online Tamil News

தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுக என இரண்டும் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலுக்காக வியூகங்களை வகுத்து வருகின்றன. தற்போது ஆளும் கட்சியாக உள்ள அதிமுகவில் அடுத்து யார் முதல்வர் என்ற போட்டி பூதாகரமாக கிளம்பியுள்ளது. தற்போது கிளம்பிய இந்த பிரச்சனையை தற்காலிகமாக சமாளிக்க எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் என இருவரும் இணைந்து சமரச அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.ஆனால் இருவருக்குள்ளும் ஏற்பட்ட போட்டியானது ஓய்ந்தபாடில்லை. அதேபோல திமுகவிற்கு மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக பெரும் தலைவலியை … Read more

தமிழகத்தில் காலூன்ற முக்கிய கட்சியை கபளீகரம் செய்ய தயாரான பாஜக! அதிர்ச்சியில் தொண்டர்கள்

LMurugan BJP-News4 Tamil Online Tamil News Today

மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பாஜக, வடமாநிலங்களில் செல்வாக்கு பெற்ற கட்சியாக இருந்தாலும், தென் மாநிலங்களில் கர்நாடகாவை தவிர அக்கட்சியால் கால் பதிக்க முடியவில்லை. குறிப்பாக தமிழகத்தில், தன்னுடைய சட்டமன்ற பிரதிநிதித்துவ கணக்கை தொடங்க முடியாமல் கடுமையாக போராடுகிறது. கலைஞர், ஜெயலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாத நிலையில், தமிழகத்தில் கால் பதிக்க பாஜக எடுத்த முயற்சிகள் அனைத்தும் இதுவரை கைகொடுக்கவில்லை. பாஜக தற்போது வரை, அதிமுக கூட்டணியில் இருந்தாலும், அது தனக்கு கிடைக்க வேண்டிய … Read more

இந்தியாவில் மீண்டும் டிக் டாக்! பேச்சுவார்த்தையில் ரிலையன்ஸ்

இந்தியாவில் மீண்டும் டிக் டாக்! பேச்சுவார்த்தையில் ரிலையன்ஸ்

சமீபத்தில் பாதுகாப்பு கருதி சீனா தொடர்புள்ள 59 மொபைல் ஆப்களை இந்திய அரசு தடை செய்து அறிவித்தது. இதில் மிகவும் பிரபலமான டிப்டாப் ஆப்பும் மேலும் இதுபோல சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான சில அப்ளிகேஷன்களும் தடைசெய்யப்பட்டன. இதனையடுத்து டிக் டாக் உள்ளிட்ட சில ஆப்கள் மீண்டும் இந்தியாவிற்கு செயல்பாட்டிற்கு வருமா என்று அதன் பயனாளர்கள் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டிக் டாக் அப்ளிகேஷன் செயல்பாட்டை இந்தியாவில் கொண்டு வர ரிலையன்ஸ் நிறுவனம் முயற்சித்து வருவதாக … Read more

இந்தியாவில் செயல்படுத்தப்படும் தனியார் ரயில்களை இயக்க 23 நிறுவனங்கள் ஆர்வம்

Private Companies are Interested to Run Train

நாடு முழுவதும் உள்ள 12 பெரும் நகரங்களிலிருந்து 109 வழித்தடங்களில் தனியார் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்த வழித்தடங்களில் ரயில்களை இயக்குவதற்கான தனியார் நிறுவனங்களை தேர்வு செய்வதற்காக முதற்கட்ட விண்ணப்ப கூட்டம்  காணொலி காட்சி மூலமாக நேற்று நடைபெற்றுள்ளது. இந்தக் காணொளி காட்சி கூட்டத்தில், மேதா, பாரத் போர்ஜ், ஸ்டெர்லைட் பவர், எல்&டி உள்ளிட்ட 23 நிறுவனங்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டன. இந்த திட்டத்தில் ரூ. 30 ஆயிரம் கோடி செலவில் தனியார் முதலீட்டுடன் … Read more

கொரோனாவிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு! சுகாதாரத்துறை வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு

Corona Positive for Russian President-News4 Tamil Online Tamil News

கொவிட்-19 தொற்றிலிருந்து 16 லட்சம் பேர் குணமடைந்தனர், குணமடையும் விகிதமானது 70 சதத்தை நெருங்குகிறது,அதேபோல இறப்பு விகிதமானது தொடர்ந்து குறைந்து, இரண்டு சதவீதமாகியுள்ளது.இதுகுறித்து மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது. ஒருங்கிணைந்த கவனிப்பு முறையின் அடிப்படையில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் சிறப்பான உத்தி, தீவிரமான மற்றும் ஒருங்கிணைந்த பரிசோதனை, அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு தரமான மருத்துவ சிகிச்சை அளித்தல் ஆகியவற்றின் விளைவாக கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் நாளுக்கு … Read more

தொலைதூரத்தில் எங்கிருந்தாலும் வாக்களிக்கும் புதிய வசதி! அசத்தும் தேர்தல் ஆணையம்

Election Commission-News4 Tamil Online Tamil News

தேர்தல் நேரத்தில் பணிச் சூழல், கல்வி, மருத்துவ சிகிச்சை அல்லது பிற காரணங்களால் பலர் வெளியூர் செல்வதால் அவர்கள் சார்ந்த தொகுதியில் வாக்களிக்க முடியாமல் போகிறது. இதனை சமாளிக்கும் விதமாக எங்கிருந்தாலும் வாக்களிக்கும் முறையை செயல்படுத்த தேர்தல் ஆணையம் முயற்சித்து வருகிறது. இது குறித்து நேற்று தமிழ்நாடு மின்னணு நிர்வாக முகமையுடன் இணைந்து இந்தியத் தேர்தல் ஆணையம் இணையவழி பயிலரங்கை நடத்தியுள்ளது. தொலைதூரத்தில் இருந்து வாக்களிக்கும் தொழில்நுட்பத்தின் அம்சங்கள்: பிளாக்செயின் தொழில்நுட்ப வாய்ப்புகளை ஆராய்தல்” என்ற தலைப்பில் … Read more

தேர்தலுக்காக திமுகவினர் போட்ட நாடகம்! அம்பலப்படுத்திய ஹச் ராஜா

H Raja Says Next Arrest will Be Dayanidhi Maran-News4 Tamil Online Tamil News

திமுகவின் மகளிரணி செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்பி விமான நிலையத்திற்கு வந்திருந்த போது அங்கு சோதனை மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படை அதிகாரி (CISF) சோதனை மற்றும் பாதுகாப்பு பற்றி கனிமொழியிடம் இந்தியில் கேட்டபோது தனக்கு இந்தி தெரியாது தமிழ் மற்றும் ஆங்கிலம் தான் தெரியும், அதனால் எதுவாக இருப்பினும் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் கூறுங்கள் என்று கூறியுள்ளார். அதற்கு அந்த CISF அதிகாரி நீங்கள் இந்தியர் தானா? என்று … Read more