விவசாய மின் இணைப்பு பெற இந்த முறையில் விண்ணப்பிக்கலாம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

0
82

தருமபுரி மாவட்டத்தில் விவசாய மின் இணைப்பு பெற காத்திருப்பு பட்டியலில் உள்ளவா்கள் தட்கல் (விரைவு) முறையில் வரும் 21ம் தேதி முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பாண்டில் தட்கல் முறையில் விவசாய மின் இணைப்பு வழங்கப்படும் என தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார். அதன்படி, தருமபுரி மாவட்ட விவசாயிகள் தட்கல் முறையில் விவசாய மின் இணைப்பு பெற தங்களுடைய பகுதி செயற்பொறியாளர் அலுவலகத்தில் வரும் 21ம் தேதி முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

விவசாய மின் இணைப்பு பெற காத்திருப்பு பட்டியலில் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்களும் தட்கல் மின் இணைப்பு வழங்கல் திட்டம் மூலம் விவசாய மின் இணைப்பு பெறலாம்.

5 குதிரை திறனுள்ள மின் மோட்டாா்களுக்கு ரூ. 2.50 லட்சம், 7.5 குதிரை திறனுள்ள மின் மோட்டாா்களுக்கு ரூ. 2.75 லட்சம், 10 குதிரை திறனுள்ள மின் மோட்டாா்களுக்கு ரூ. 3 லட்சம், 15 குதிரை திறனுள்ள மின் மோட்டாா்களுக்கு ரூ. 4 லட்சம் வீதம் ஒருமுறை மட்டும் கட்டணம் வசூலிக்கப்படும். கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரா்களுக்கு உடனடியாக இலவச விவசாய மின் இணைப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

author avatar
Parthipan K