மூன்று நடிகைகளுடன் ஜோடி போடும் நடிகர்!! அடுத்தடுத்து வெளியாகும் அப்டேட்!!

0
65
An actor pairing up with three actresses!! Next update!!
An actor pairing up with three actresses!! Next update!!

மூன்று நடிகைகளுடன் ஜோடி போடும் நடிகர்!! அடுத்தடுத்து வெளியாகும் அப்டேட்!!

திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் ஒருவர் தான் நடிகர் ஜெயம் ரவி. இவர் ஏராளமான படங்களில் வித்தியாசமான கதாப்பாத்திரங்களில் நடித்து வந்துள்ளார். இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

அந்த வகையில் தற்போது இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இத்திரைப்படத்தில் அருள்மொழி வர்மன் என்னும் கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். மேலும் இவர் அந்த கதாப்பாத்திரமாகவே வாழ்ந்து வந்தார்.

மேலும் இந்த பொன்னியின் செல்வன் படத்தில் பெண்களை ரசிக்கும் ஒரு கதாபாத்திரமாக கார்த்தி நடித்துள்ளார். ஆனால் அவரையே தற்போது மிஞ்சும் அளவிற்கு நடிகர் ஜெயம் ரவி தனது அடுத்த படத்தில் மூன்று நடிகைகளுடன் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்திற்கான பூஜை தற்போது போடப்பட்டது. ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஜெயம் ரவியின் அடுத்த படமான ஜீனி தற்போது உருவாக இருக்கிறது.

மிஷ்கின்-யிடம் உதவி இயக்குனராக இருந்த புவனேஷ் அர்ஜூன் இந்த திரைப்படத்தை இயக்க உள்ளார். மேலும் இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைக்க உள்ளார்.

இந்த ஜீனி படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக மூன்று நடிகைகள் நடிக்க இருக்கிறார்கள். இதில் முதலாவதாக தமிழ், தெலுங்கு முதலிய படங்களில் நடித்த கீர்த்தி ஷெட்டி நடிக்க உள்ளார்.

மேலும் இவர் தற்போது பாலா இயக்கத்தில் தயாராகி வரும் வணங்கான் படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். அடுத்ததாக இந்த ஜீனி படத்தில் கல்யாணி பிரியதர்ஷினி ஜெயம் ரவிக்கு ஜோடியாக உள்ளார்.

மேலும் மூன்றாவதாக வாமிகா கபி நடிக்க உள்ளார். இவர் பாலிவுட்டில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார், மற்றும் மாடர்ன் லவ் சென்னை என்ற வெப் தொடரிலும் நடித்துள்ளார்.

தற்போது இவருக்கு முதல் முறையாக ஜெயம் ரவியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இவ்வாறு ஒரே படத்தில் இந்த மூன்று நடிகைகளும் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்க உள்ளனர். தற்போது இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் வந்துக்கொண்டே இருக்கிறது.

author avatar
CineDesk