வளைகுடா நாடுகளில் இருந்து நிதி திரட்டும் பி எப் ஐ அமைப்பு! அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கையில் அதிர்ச்சி தகவல்!

0
110

சமீபகாலமாக தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதிலும் பாஜக கணிசமான வளர்ச்சியை அடைந்து வரும் கோவையில் அந்த கட்சியின் நிர்வாகிகள் வீட்டிலும், வாகனங்களிலும் பெட்ரோல் கொண்டு வீசப்பட்டது தமிழகம் முழுவதும் பரபரப்பை கிளப்பியது.

இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டது இதன் பின்னர் மத்திய அரசு பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்புக்கு தடை விதித்தது அந்த அமைப்பு தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக மத்திய அரசு சார்பாக விளக்கங்கள் வழங்கப்பட்டன.

இப்படியான சூழ்நிலையில், மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு வளைகுடா நாடுகளிலிருந்து நிதி திரட்ட தேவையான கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளனர் என்று அமலாக்கத் துறையின் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

பி எப் ஐ என்று சொல்லப்படும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்புக்குச் சொந்தமான இடங்களில் நாடு தழுவிய சோதனையை அமலாக்கத்துறை அண்மையில் மேற்கொண்டது. தேசிய புலனாய்வு முகமையுடன் ஒன்று இணைந்து மாநில காவல் துறையினரும் இந்த சோதனையை நடத்தினர். அப்போது 100க்கும் அதிகமான பி எப் ஐ அமைப்பை சார்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த அமைப்பு தேச விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததும், ஐ.எஸ் உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதும் சோதனையில் தெரியவந்தது. இதனையடுத்து அந்த அமைப்புக்கு மத்திய அரசு 5 வருடங்கள் தடை விதித்தது.

இந்த அமைப்பைச் சார்ந்த முக்கிய நபர்களான பெர்வேஸ் அஹமது, அஹமது இலியாஸ், அப்துல் முகீத் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அப்படி கைது செய்யப்பட்ட இவர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிக்கையை புது டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சமீபத்தில் தாக்கல் செய்தது.

அந்த குற்றப்பத்திரிகையில் வளைகுடா நாடுகளில் இருந்து நிதி திரட்ட தேவையான கட்டமைப்பு வசதிகளை பிஎஃப் ஐ அமைப்பு ஏற்படுத்தி வைத்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அதோடு வளைகுடா நாடுகளில் இருந்து பிஎஃப் அமைப்பைச் சார்ந்த தனி நபர்களின் வங்கி கணக்குகளுக்கு நிதி மாற்றப்பட்டு, அதன் பின்னர் அந்த அமைப்பின் கணக்குக்கு அந்த நிதிகள் மாற்றப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.