காஷ்மீரில் இந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் யார் தூண்டுதலின்பேரில் நடத்தப்பட்டது? பாஜக எம்பி பரபரப்புக் கேள்வி!

0
75

தமிழகத்தைப் பொருத்தவரையில் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் பெரும்பான்மையாக வசித்து வருகிறார்கள். சிறுபான்மையின மக்கள் ஆங்காங்கே வசித்துக் கொண்டிருக்கிறார்கள்.ஆனாலும் திமுக ஆட்சி அமைந்ததிலிருந்து இந்துக்களுக்கு ஆதரவாக செயல்படுவதைப் போல காட்டிக்கொண்டு மறைமுகமாக சிறுபான்மையினருக்கு பல உதவிகளையும் செய்து வருகிறது என்று பலரும் குற்றம் சுமத்தி வருகிறார்கள். அதுவே சில சமயங்களில் உண்மை என்றும் கருதத் தோன்றுகிறது.

மாநில அரசு இவ்வாறு பாகுபாடு காட்டுவதற்கு காரணம் இந்து மக்களிடையே இருக்கின்ற ஒற்றுமையின்மை தான் என்றும் சொல்லப்படுகிறது.நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது காஷ்மீரில் இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் குமார் கேள்வி எழுப்பினார்.

கடந்த 1984 ஆம் ஆண்டு முதல் 1989 ஆம் ஆண்டு வரையில் காஷ்மீரில் இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய அளவிலான தாக்குதல் தொடர்பாக மத்திய அரசு விசாரணையை தொடங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதன் மூலமாக குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று அவர் குறிப்பிட்டு பேசினார்.

அதோடு 1989ஆம் வருடம் ஜம்மு காஷ்மீரில் இருந்து 70 பயங்கரவாதிகள் யாருடைய உத்தரவின் பேரில் விடுதலை செய்யப்பட்டார்கள் என்பது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சமயத்தில் அதனை தடுத்து நிறுத்துமாறு அப்போதைய விபி சிங் அரசை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ராஜீவ்காந்தி வலியுறுத்தியதாக தெரிவித்தார்.

காஷ்மீர் பண்டிட்டுகள் மற்றும் சீக்கியர்களை தன்னால் பாதுகாக்க இயலாது என்று அப்போதைய ஜம்மு காஷ்மீர் ஆளுநர் தெரிவித்ததாகவும் இதன் காரணமாக, காஷ்மீரிலிருந்து அவர்களை வெளியேறுமாறு அவர் கூறியதாகவும், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குறிப்பிட்டிருக்கிறார்.