மக்கள் அவர்களை தூக்கி எறிய தயாராகிவிட்டார்கள்! அண்ணாமலை பரபரப்பு பேச்சு!

0
63

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்றது.2கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் எதிர்க்கட்சியாக இருந்த திமுக அனேக இடங்களை கைப்பற்றியது.

இருப்பினும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்து வந்தது.இந்தநிலையில், சென்ற வருடம் நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

இதனைத்தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றம், உள்ளிட்ட நீதிமன்றங்களில் அனேக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் தொடங்கியது.

அதன்படி சென்ற மாதம் 28ம் தேதி நகர்ப்புர உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது, அந்த வேட்பு மனு தாக்கல் சென்ற வாரத்துடன் முடிவடைந்தது.

இந்தசூழ்நிலையில், சென்னை , தாம்பரம், ஆவடி, உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் தாம்பரத்திலிருக்கின்ற திருமண மண்டபம் ஒன்றில் நேற்றைய தினம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உரையாற்றியபோது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக சார்பாக கிறிஸ்துவர், முஸ்லிம்கள், என்று பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்களும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அனைத்து மதத்தினரையும் அரவணைத்து செல்லும் கட்சி பாஜக இருந்தாலும் திமுகவில் வாரிசுகளுக்கு மட்டுமே போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது என தெரிவித்தார்.

ஆளும் கட்சியான திமுக 8 மாதத்தில் சம்பாதித்த கெட்ட பெயரை எந்த அரசியல் கட்சியும் இதுவரையில் சம்பாதிதத்தில்லை பொதுமக்கள் மாற்றத்திற்கு தயாராகி விட்டார்கள் புதியவர்களை வரவேற்க தயாராகவுள்ளார்கள் ஆகவே பாஜகவினர் வெற்றி உறுதி என அவர் உரையாற்றியிருக்கிறார்.