Home Blog Page 288

இந்த வார்த்தையை வச்சு எல்லாமா பாட்டு எழுதுவ!! எம்ஜிஆர் கூறிய கங்கை அமரனின் பாடல்!!

0

தமிழ் திரையுலகிலும் அரசியல் வாழ்விலும் இன்றுவரை இவரை போல் ஒருவர் இல்லை என்று கூறும் அளவிற்கு தனித்து நிற்கக் கூடியவராக டாக்டர் எம்ஜிஆர் விளங்கி வருகிறார். மக்கள் இவருக்கு பொன்மனச் செம்மல் சின்னவர் என பல நற்பெயர்களை இட்டு அழைத்த வருகின்றனர்

இவருடைய காலகட்டத்தில் இவர் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் அந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தையும் பலமுறை கேட்டு அதில் இருக்கக்கூடிய அர்த்தங்கள் தெளிவாக இருப்பின் மட்டுமே அந்த பாடலை தன் படத்தில் இடம் பெற அனுமதிக்க கூடிய ஒரு வல்லமை பெற்றவராக எம் ஜி ராமச்சந்திரன் அவர்கள் விளங்கி இருக்கிறார். இது ஒரு புறம் என்றால் அவர் அம்மாவின் மீது மிகுந்த மரியாதையும் மதிப்பும் கொண்டவராக இருந்ததால் இவருடைய அன்னை சார்ந்த பாடல்கள் எல்லாம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்ததோடு இன்றளவும் போற்றப்படுகிறது.

எம்ஜிஆரை பற்றி கங்கை அமரன் சமீபத்தில் தெரிவித்த சுவாரசியமான தகவல் :-

அலைகள் ஓய்வதில்லை படத்தினுடைய வெற்றி விழாவிற்கு நடிகர் மற்றும் முதல்வரான எம்ஜிஆர் தலைமை ஏற்று நடத்தி இருக்கிறார். அந்த விழாவிற்கு கங்கை அமரன் தொகுப்பாளராக இருந்த நிலையில் பாவலர் கிரியேஷன்ஸ் படத்தின் தயாரிப்புகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

கங்கை அமரன் பாடல் ஆசிரியர் ஆகவும் பாடகர் ஆகவும் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் பன்முகங்களை சினிமா துறையில் கொண்டவராக இருந்ததோடு அந்த விழாவில் தொகுப்பாளராகவும் இருந்த நிலையில் எம்ஜிஆர் கங்கை அமரனை நோக்கி உலக மகா கவிஞன் நீ என தெரிவிக்கிறார். காரணம் யாருமே பயன்படுத்தாத ஒரு வார்த்தையை அதாவது வாடி ஏன் கப்பக்கிழங்கே என ஒரு கிழங்கை வைத்து பாடல் அமைத்ததால் எம்ஜிஆர் கங்கை அமரன் அவர்களை கிண்டல் அடித்திருக்கிறார்.

நீரிழிவு நோய் எப்படி உண்டாகிறது? — உங்கள் உடல்நலத்திற்கு அவசியமான தகவல்கள்

0

நீரிழிவு நோய் (Diabetes Mellitus) என்பது உடலில் இன்சுலின் என்ற ஹார்மோன் குறைவாக சுரக்கப்படுவதால் அல்லது சுரந்த இன்சுலின் சரியாக செயல்படாததால் ஏற்படும் ஒரு நிலையாகும். இதனால், இரத்தத்தில் குளுக்கோஸ் (சர்க்கரை) அளவு அதிகரித்து, பல்வேறு உடல் உறுப்புகளை பாதிக்கும்.​

நீரிழிவு நோயின் முக்கிய காரணிகள்:

  1. மரபணு (ஜீன்) காரணிகள்: பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருந்தால், வாரிசுகளுக்கு இந்த நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம். மரபணுக்களில் ஏற்பட்ட மாற்றங்கள், இன்சுலின் சுரப்பில் சிக்கல்களை ஏற்படுத்தலாம் .​

  2. உடல் பருமன்: அதிக உடல் எடை, குறிப்பாக வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேர்வது, இன்சுலின் எதிர்ப்பு உணர்வை (Insulin Resistance) ஏற்படுத்துகிறது. இதனால், இன்சுலின் சரியாக செயல்படாது .​

  3. உடற்பயிற்சி குறைவு: நிலைநிறுத்தமான உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறை, இன்சுலின் செயல்பாட்டை பாதிக்கிறது. உடற்பயிற்சி இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது .​

  4. மன அழுத்தம்: நீண்டகால மன அழுத்தம், கார்ட்டிசால் போன்ற ஹார்மோன்களின் சுரப்பை அதிகரித்து, இன்சுலின் செயல்பாட்டை குறைக்கிறது .​

  5. உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு அளவு: இவை இரண்டும் நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கின்றன .​

  6. கர்ப்பகால நீரிழிவு: கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படலாம். இது பிறகு நீரிழிவு நோயாக மாறும் அபாயம் உள்ளது .​

அறிகுறிகள்:

  • அடிக்கடி சிறுநீர் கழித்தல்

  • அதிக தாகம்

  • அதிக பசி

  • எடை குறைதல்

  • சோர்வு

  • பார்வை மங்கல்

  • காயங்கள் மெதுவாக ஆறுதல்

  • பாதங்களில் உணர்வு குறைவு .​

தடுப்பு மற்றும் மேலாண்மை:

  • சீரான உடற்பயிற்சி

  • சீரான உணவுமுறை

  • மன அழுத்தத்தை குறைக்கும் நடவடிக்கைகள்

  • மருத்துவ பரிசோதனைகள் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் கண்காணித்தல்

நீரிழிவு நோய் ஒரு நாள்பட்ட நோயாக இருந்தாலும், முறையான வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் மருத்துவ ஆலோசனைகளின் மூலம் அதை கட்டுப்படுத்த முடியும். உங்கள் உடல்நலத்தை பாதுகாக்க, மேலே கூறப்பட்ட தகவல்களை கவனத்தில் கொண்டு செயல்படுங்கள்.​

பாக்யராஜின் 2 திருமணங்களையும் எம் ஜி ஆர் நடத்தி வைத்தாரா!! அட.. உயிரோடு இருக்கும்போதே அடுத்த கல்யாணமா!!

0

பிரபல நடிகர் மற்றும் இயக்குனரான பாக்யராஜ் தன்னுடைய சினிமா வாழ்க்கையை துவங்கிய பொழுது அவருக்கு ஏற்பட்ட காதல் மற்றும் அவருடைய முதல் மனைவி குறித்து பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் தி ரியல் ஒன் youtube சேனலுக்கு பேட்டி அளித்திருக்கிறார்.

Youtube சேனல் பேட்டியில் சபிதா ஜோசப் தெரிவித்திருப்பதாவது :-

தமிழ் சினிமா துறையில் நடிக்க வந்த பொழுது நடிகை பிரவீனாவுக்கு தமிழ் தெரியாது என்றும் அவருக்கு தமிழ் கற்றுக் கொடுப்பதற்காக பழகத் தொடங்கிய பாக்கியராஜ் அவர்களுக்கும் நடிகை பிரவீனா அவர்களுக்கும் இடையே காதல் மலர பிரவீனா கதாநாயகியாக படங்களில் நடிக்க துவங்கினார் பாக்யராஜையும் நன்றாக பார்த்துக் கொண்டார்.

இப்படி இருக்கக்கூடிய சூழ்நிலையில் பாரதிராஜா உடன் வேலை பார்ப்பதற்கான வாய்ப்பு பாக்கியராஜ் அவர்களுக்கு கிடைக்கவே வேலையையும் பிரவீனாவையும் இரு கண்களாக தொடர்ந்து கவனித்து வந்திருக்கிறார். அசிஸ்டன்ட் டைரக்டரில் இருந்து இயக்குனர் ஆச சுவரில்லா சித்திரங்கள் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய இயக்குனர் கனவை நினைவாக்கியுள்ளார் பாக்யராஜ். அதன் பெண் தங்களுடைய காதல் விவகாரம் குறித்த எம்ஜிஆரிடம் சொல்ல அவரும் இவர்கள் இருவருக்கும் திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறார்.

திருமணம் ஆனதிலிருந்து இவர்களுக்கிடையில் குழந்தை பிறக்கவில்லை என்றாலும் இவர்களுடைய வாழ்க்கை நல்லபடியாக சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென நடிகை பிரவீனாவிற்கு மஞ்சள் காமாலை ஏற்படவே பாக்யராஜ் அவர்களுக்கு பூர்ணிமா உடன் நெருக்கம் ஏற்பட்டு காதலாக மலர்ந்தது. இந்த விஷயம் பிரவீனா அவர்களுக்கு தெரிந்தவுடன் மிகவும் வருத்தப்பட்டு இருக்கிறார். பிரவீனாவின் உடைய சொத்து அனைத்தும் பாக்யராஜ் அவர்களுக்கு வந்து சேர்ந்தது.பிரவீனா உடல் நலக்குறைவால் இறந்து போகவே அதன் பெண் பாக்கியராஜ் பூர்ணிமாவுடன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகவும் அந்த இரண்டாவது திருமணத்தையும் எம்ஜிஆர் தலைமையில் தான் நடைபெற்றது என்றும் தெரிவித்திருக்கிறார்.

காய்ச்சலை குணப்படுத்த ஊதுபத்தியால் 18 குழந்தைகளுக்கு சூடு! 1 வயது குழந்தை உயிரிழந்த கோர சம்பவம் 

0

காய்ச்சலை குணப்படுத்த நம்பிக்கையற்ற வழியில் 18 குழந்தைகள் ஊதுபத்தியால் எரித்த சம்பவத்தில் ஒருவயது குழந்தை உயிரிழந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தின் கொப்பல் மாவட்டத்தில் நம்பிக்கையற்ற மரபுகளை பின்பற்றி, காய்ச்சல் கொண்ட குழந்தைகளை குணமாக்கும் என்ற எண்ணத்தில் குழந்தைகளின் மீது ஊதுபத்தி (தூபம்) வைத்து எரித்தது சோகமான நிகழ்வாகும். இந்த நிலையில், ஓர் ஏழு மாத குழந்தை உயிரிழந்த, சம்பவம் வெளிச்சத்துக்குத் வந்தது.

இந்த கொடூர சம்பவம் கடந்த மாதம் வித்தலாபுர் கிராமத்தில் நடந்தது. அங்கு, குழந்தையின் தாயார் தனது குழந்தைக்கு காய்ச்சல் வந்ததை குணமாக்க ஊதுபத்தி தீ வைத்து அதன் சாம்பல் மற்றும் வலி மூலம் கடவுளின் அருளைப் பெற முடியும் என நம்பி இந்த செயலுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். ஆனால், குழந்தை உயிரிழந்தது.

இதனைத் தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் நடத்தும் விசாரணையில், இதுவே தனிப்பட்ட சம்பவமல்ல என்பது உறுதி செய்யப்பட்டது. மொத்தம் 18 குழந்தைகள், இதே போன்று தூபம் வைத்து எரிக்கப்பட்டு காயங்களுடன் காணப்பட்டனர் என்பது தெரிய வந்துள்ளது.

கிராமங்களில் வேரூன்றிய நம்பிக்கைகள்:

  • சில கிராம மக்கள், ஊதுபத்தி அல்லது தூபத்தால் சருமத்தை எரித்தால் நோய்கள் வெளியேறும், கடவுள் திருப்தி அடைவார் என நம்புகிறார்கள்.

  • இதே நம்பிக்கையால், பல பெற்றோர் தங்களது சொந்தக் குழந்தைகளையே இப்படி கொடூரமாக காயப்படுத்தியுள்ளனர்.

அதிகாரிகள் நடவடிக்கையில்:

  • குழந்தை உயிரிழந்த பிறகு, மாவட்ட நிர்வாகம் சம்பவத்தை சிறந்த முக்கியத்துடன் எடுத்துக் கொண்டது.

  • மாவட்ட கலெக்டர், 18 சம்பவங்களிலும் பெற்றோருக்கு எதிராக மருத்துவ வழக்குகள் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார்.

  • சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு பிரிவு, இந்த கிராமங்களில் தொடர்ந்து கண்காணிப்பு செய்து வருகின்றனர்.

விழிப்புணர்வு நடவடிக்கைகள்:

  • கனககிரி தாலுகா நிர்வாகம், கிராம மக்களுக்கு நவீன மருத்துவம், குழந்தை பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு பிரச்சாரங்களை துவக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

  • அதிகாரிகள் கூறுகையில்: “சட்ட நடவடிக்கையை மட்டும் அல்ல, நீண்ட கால கல்வி மற்றும் சமூக ஈடுபாட்டின் மூலம் இந்தப் பழைய நம்பிக்கைகளை முற்றிலுமாக ஒழிக்க முயற்சி செய்யப்படும்” என தெரிவித்துள்ளனர்.

இந்த வன்முறைச் சம்பவங்கள் முன்னதாக சுட்டிக்காட்டப்பட்டும், உரிய ஆதாரங்கள் கிடைக்காத காரணத்தால் கடந்து சென்றன. தற்போது மருத்துவமனைகளில் தொடரும் கண்காணிப்பும், சமூக அணுகலும் இந்த கொடூர நிலைமையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.

அதிகாரிகள், இதே போன்ற இன்னும் பல சம்பவங்கள் இரகசியமாக இருக்கக்கூடும் என பயப்படுகின்றனர். தற்போது, பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படுவதுடன், பொறுப்பு உடையவர்களுக்கு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொடூர சம்பவம் நவீன உலகில் கூட கிராமப்புறங்களில் நம்பிக்கையற்ற வழிகளால் எத்தனை குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர் என்பதை உணர்த்துகிறது. சமூகமாக நாம் விழிப்புடன் இருக்க, இதைப் போன்ற நிலைகளை எதிர்த்துப் பேச வேண்டும்.

பிரதமர் மோடியை வாழ்நாளில் மறக்க மாட்டேன்!.. கூட்டணியில் இணைகிறதா தேமுதிக!…

0

மறைந்த நடிகர் விஜயகாந்தால் உருவாக்கப்பட்டதுதான் தேமுதிக. துவக்கத்தில் தனியாக போட்டியிட்டாலும் அதன்பின் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சட்டசபையில் எதிர்கட்சி தலைவராக அமர்ந்தார் விஜயகாந்த். ஆனால், அதிமுக அமைச்சர்களுடன் சண்டை போட்டு நாக்கை துருத்தி அவர் கோபப்பட்ட வீடியோ வெளியிட்டு அவரின் இமேஜை டேமேஜ் செய்தார்கள்.

அதன்பின் பாஜகவுடன் கூட்டணியிலும் தேமுதிக இணைந்திருந்தது. அப்போது டெல்லி சென்றிருந்த விஜயகாந்தை கன்னத்தில் தடவி பிரமதர் மோடி அன்பு காட்டிய வீடியோவும் அப்போது வைரலானது. உடல்நலக்குறைவால் விஜயகாந்த் மரணமடைந்துவிட அதற்கு பின்னர் நடந்த தேர்தல்களிலும் தேமுதிக பாஜக உள்ள கூட்டணியிலேயே இருந்தது.

தற்போது அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில் தேமுதிக என்ன முடிவெடுக்கும் என தெரியவில்லை. தற்போது தேமுதிக விஜயகாந்தின் மனைவி பிரேமலதா தலைமையில் செயல்பட்டு வருகிறது. எப்படியும் அவர் அதிமுக – பாஜக கூட்டணியில்தான் இணைவார் என பலரும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், நாங்கள் யாருடனும் கூட்டணி பற்றி பேசவில்லை என பிரேமலதா கூறியிருந்தார்.

modi
modi

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பற்றி பேசிய பிரேமலதா விஜயகாந்த் ‘பிரதமர் மோடிக்கும் கேப்டன் விஜயகாந்துக்கும் இடையில் இருந்த உறவு அரசியலை தாண்டியது. கேப்டனை தமிழ்நாட்டு சிங்கம் என பிரதமர் அழைப்பார். இருவரது நட்பு, பரஸ்பர மரியாதையிலும் அன்பிலும் கட்டப்பட்ட மிகவும் அரிதான ஒன்று.

கேப்டனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த போது ஒரு சகோதரனைப் போல கவலைப்பட்டு அடிக்கடி தொடர்பு கொண்டு அவரின் உடல்நலம் பற்றி விசாரித்தார்’ என பேசியிருக்கிறார். பிரேமலதா பேசியிருப்பதை பார்க்கும்போது கண்டிப்பாக பாஜக கூட்டணியில் தேமுதிக இணையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

அண்ணாமலை சாமி!. முடியல சாமி!.. நடிகர் தம்பி ராமையா என்னா சொல்றார் பாருங்க!…

0

ஏ.எல்.எல் முருகன், தமிழிசை சவுந்தர்ராஜன் ஆகியோருக்கு பின் தமிழக பாஜக தலைவர் பதவி வகித்தவர் அண்ணாமலை. 2021ம் வருடம் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். இவர் கர்நாடகாவில் காவல் துறையில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர். தமிழகத்தில் பாஜக என்கிற ஒரு கட்சி இருக்கிறது என்பதை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தவர் இவர்தான். எதிர்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தும் அவர் பெரிதாக எதையும் பேசாத நிலையில், அண்ணாமலையோ திமுகவுக்கு எதிராக பேசி ஸ்கோர் செய்தார். இதனால் மக்களால் கவனிக்கப்பட்டார் அண்ணாமலை.

இது திமுகவுக்கு தலைவலியை ஏற்படுத்தியது. மேலும், அண்ணாமலை இருக்கும் வரை நம்மை யாரும் மதிக்க மாட்டார்கள் என பழனிச்சாமியே யோசித்ததாக சொல்லப்பட்டது. சமீபத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தபோது அண்ணாமலை மாற்றப்பட்டு தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டர். தற்போது அண்ணாமலைக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே, இனிமேல் அண்ணாமலை டெல்லியில் அரசியல் செய்வார் என பாஜகவினர் சொல்கிறார்கள்.

இந்நிலையில், குணச்சிதிர மற்றும் காமெடி நடிகருமான தம்பி ராமையா அண்ணாமலை பற்றி பேசியபோது ‘ அண்ணாமலை தம்பியை நான் வியந்து பார்க்கிறேன். என்னடா இது ஒரு சாதாரண விவசாயி மகனா பிறந்து ஐ.பி.எஸ் படிக்கிறதே பெரிய விஷயம். அத சாதரணமா பண்ணிட முடியாது. ஆளு வாட்டசாட்டமா இருக்கணும். அறிவா இருக்கணும். 9 வருஷம் வேலை செஞ்சிட்டு அந்த புள்ள மிஸ்டர் கிளீன் இமேஜ்ல இருக்கான். திடுதிப்புன்னு தேசிய கட்சி. அங்க கொட்ட போட்ட 60,70 வயது ஆளெல்லாம் இருக்காங்க.. அவங்கள் எலலம் அடிச்சி துவம்சம் பண்ணிட்டு உள்ள வந்து நிக்குறாரு.. அடேங்கப்பா இவர மாதிரி நாம சாதிக்க முடியாதுடா சாமி.. கட்சியை 14 சதவீதம் ஏத்தி வச்சிருக்காரு அந்த புள்ள’ என பாராட்டி பேசியிருக்கிறார்.

எனக்கு சொந்தமா மூளை இருக்கு!.. பழனிச்சாமி அட்டாக் பண்னும் சீமான்!…

0

எல்லோரும் எதிர்பார்த்தது போலவே 2026 சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்திருக்கிறது. சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அமித்ஷாவும் இதை உறுதி செய்துவிட்டார். 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் இந்திய ஜனநாயக கூட்டணி இணைந்து தமிழகத்தில் போட்டியிடும். தேசிய அளவில் மோடி தலைமையில் தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும் தேர்தலை நாங்கள் சந்திக்கவுள்ளோம்’என கூறினார்.

மேலும், யார் யாருக்கு எத்தனை தொகுதி ஆட்சி அமைப்பது யார் என்பது பற்றியெல்லாம் பின்னர் முடிவு செய்வோம். இந்த கூட்டணியால் அதிமுக – பாஜக இருவருக்குமே பலன் கிடைக்கும்’ என சொல்லி இருக்கிறார்.

eps

இனிமேல் பாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என சொன்ன பழனிச்சாமி இப்போது தனது கொள்கையை மாற்றிக்கொண்டிருப்பது விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. வருமான வரித்துறை சோதனையை காட்டி மிரட்டியே அதிமுகவை அமித்ஷா அடிபணிய வைத்திருக்கிறார் என திமுகவினர் பேசி வருகிறார்கள்.

இந்நிலையில், இதுபற்றியும், கூட்டணி பற்றியும் சீமானிடம் செய்தியாளர்கள் கேட்டபோது ‘நான் தனித்துதான் போட்டியிடுவேன். பாஜகவுடன் நான் கூட்டணி என என்னை ஏன் பிடித்து தள்ளுகிறீர்கள்?. நான் யாருடைய அறிவுரையையும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு சொந்தமாக மூளை உள்ளது. சிந்திக்கும் ஆற்றம் உள்ளது. தற்காலிக தோல்விக்காக நிரந்தர வெற்றியை இழக்க நான் தயாராக இல்லை. எங்கள் பயணம் எங்கள் கால்களை நம்பியே. அடுத்தவர் தோள்களை நம்பி இல்லை’ என பேசியிருக்கிறார். சீமான் சொல்வதை பார்க்கும்போது 2026 சட்டமன்ற தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கண்டிப்பாக திமுகவுக்கு சாதகமாகவே அமையும் என கணிக்கப்படுகிறது.

விஜய் போட்ட கண்டிஷன்!. ரூட்டை மாற்றிய எடப்பாடி பழனிச்சாமி!.. நடந்தது என்ன?…

0

TVK Vijay: திமுகவை தோற்கடிப்பதற்காகவே அரசியல் கட்சி துவங்கியது போலவே இருக்கிறது விஜயின் செயல்பாடு. ஏனெனில், கட்சி துவங்கியது முதலே அவர் திமுகவை மட்டுமே தொடர்ந்து விமர்சித்து வருகிறார். முதல் கட்சி மாநாட்டிலும் சரி, கட்சி துவங்கி ஒரு வருடம் முடிந்த விழாவிலும் சரி, கட்சி பொதுக்கூட்டத்திலும் சரி அவர் முழுக்க முழுக்க திமுகவை மட்டுமே டார்கெட் செய்து பேசி வருகிறார். அதிமுக பற்றி அவர் எங்கும் பேசவில்லை.

மன்னராட்சிக்கு மக்கள் முடிவு கட்டுவார்கள்.. ஊழல் அரசியலை ஒழிப்பேன் என்று தொடர்ந்து பேசி வருகிறார். இதில் திமுகவை மன்னராட்சி என அவர் சொல்வதே பெரும் விவாதங்களை கிளப்பியது. திமுகவில் அப்பா – மகன் – பேரன் என தொடர்ந்து முதல்வர் பதவிக்கு வருவது விஜய்க்கு பிடிக்கவில்லை. எனவேதான் அவர் அரசியல் கட்சியே துவங்கியதாக பார்க்கப்படுகிறது.

அதோடு, தங்களோடு கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சியிலும் பங்கு.. அதிகாரத்திலும் பங்கு என அறிவித்தார் விஜய். எனவே, காங்கிரஸ், விடுதலை சிறுத்தை, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் தங்கள் பக்கம் வருவார்கள் என விஜய் எதிர்பார்த்தார். ஆனால், அப்படி எதுவும் நடப்பதாக தெரியவில்லை. எனக்கு ஆசை காட்டி திமுக கூட்டணியிலிருந்து பிரிக்க பார்க்கிறார்கள் என திருமாவளவன் கூறினார். எனவே, அதிமுகவுடன் தவெக இணையும். இதைத்தவிர விஜய்க்கும் வேறு வழியில்லை என பலரும் நினைத்தார்கள்.

ஆனால், பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைப்பது உறுதியாகிவிட்டது. எனவே, விஜய் தனித்துவிடப்படுவாரா என்கிற எண்ணமும் பலருக்கும் எழுந்துள்ளது. ஏனெனில், நாம் தமிழர் கட்சி சீமானும் விஜயுடன் இணைவார் என தோன்றவில்லை. இந்நிலையில்தான் அரசியல் விமர்சகர் பழ.கருப்பையா செய்தியாளர்களிடம் பேசியபோது ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துகொண்டார்.

விஜயுடன் கூட்டணி போட வேண்டும் என்பதே பழனிச்சாமியின் எண்ணமாக இருந்தது. ஆனால், முதல்வர் பதவியை ஆளுக்கு இரண்டரை வருடம் என பிரித்து கொள்வோம் என விஜய் சொன்னதை பழனிச்சாமி ஏற்கவில்லை. ஏதேனும் ஒரு கட்சியின் கூட்டணி வைத்தால் மட்டுமே திமுகவை தோற்கடிக்க முடியும் என்பதால் பாஜக பக்கம் போய்விட்டார்’ என பேசியிருக்கிறார்.

பதவி எனக்கு கர்ச்சீப்!.. ஒருத்தர்கிட்டயும் போய் நிற்கமாட்டேன்!.. கூட்டணிக்கு எதிர்ப்பு காட்டும் ஜெயக்குமார்?!

0

போன அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் ஜெயக்குமார். தினமும் காலை செய்தியாளர்களை சந்தித்து அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் குரலாக அதிமுகவின் நிலைப்பாட்டு பேசி வந்தவர். குறிப்பாக அப்போதையை எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு இவர்தான் பதில் சொல்லி வந்தார்.

2021 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்து தோல்வியை சந்தித்தது. வழக்கமாக வட சென்னை தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெறும் ஜெயக்குமாரும் தோல்வி அடைந்தார். அதன்பின் சில மாதங்களில் அதிமுக தலைவர்கள் பற்றி அண்ணாமலை அவதூறாக பேச கோபமடைந்த பழனிச்சாமி பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார் ‘பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் நாங்கள் தோற்றுப்போனோம். ராயபுரம் தொகுதியில் நான் தோற்றதே இல்லை. அந்த தொகுதியில் முடி சூடா மன்னனாக இருந்தேன். ஆனால், பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் அந்த தொகுதியில் வசிக்கும் சிறுபான்மையினர் ஓட்டுக்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை’ என ஓப்பனாக பேசினார்.

இப்போது அதே அதிமுகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணி அமைத்திருக்கிறது. சமீபத்தில் சென்னை வந்த அமித்ஷா அதிகாரப்பூர்வமாகவே இதை அறிவித்துவிட்டார். ஆனால், இதுவரை ஜெயக்குமார் இது பற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ஒருபக்கம் அதிமுக – பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயக்குமார் அதிமுகவிலிருந்து விலகியதாக செய்திகள் பரவியது.

jayakumar
jayakumar

இந்நிலையில், இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார் ‘நான் அதிமுகவிலிருந்து விலகிவிட்டதாக வதந்தி பரப்புகிறார்கள். என் குடும்பமே திராவிட வரலாறு கொண்டது. தன்மானத்துடன் வாழ்ந்த குடும்பம் எங்களுடையது. பதவிக்காக யார் வீட்டு வாசலிலும் நான் நின்றது இல்லை. எனக்கு அடையாளத்தை கொடுத்தது அதிமுகதான். எனவே, சாகும் வரை அந்த கட்சியில் இருப்பேன். பதவி தோளில் போடும் துண்டு என்றார் அண்ணா. ஆனால், எனக்கு அது கர்ச்சீப்’ என சொல்லி இருக்கிறார். அதோடு, எடப்பாடி பழனிச்சாமியின் பெயரை அவர் எங்கேயும் சொல்லவில்லை.

பதவிக்காக யார் வீட்டு வாசலிலும் போய் நின்றதில்லை என சொல்லியிருப்பதன் மூலம் அதிமுக – பாஜக கூட்டணிக்கு ஜெயக்குமார் எதிர்ப்பு தெரிவிக்கிறார் என பேச துவங்கிவிட்டார்கள்.

இமயமலையில் அண்ணாமாலை!. ரஜினி ஸ்டைலில் பாபா முத்திரை!.. வைரல் போட்டோ!…

0

2021ம் வருடம் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டவர் அண்ணாமலை. இவர் கர்நாடகாவில் காவல் துறையில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர். தமிழகத்தில் பாஜக என்கிற ஒரு கட்சி இருக்கிறது என்பதை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தவர் இவர்தான். எதிர்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தும் அவர் பெரிதாக எதையும் பேசாத நிலையில், அண்ணாமலையோ திமுகவுக்கு எதிராக பேசி ஸ்கோர் செய்தார். இதனால் மக்களால் கவனிக்கப்பட்டார் அண்ணாமலை.

இது திமுகவுக்கு தலைவலியை ஏற்படுத்தியது. மேலும், அண்ணாமலை இருக்கும் வரை நம்மை யாரும் மதிக்க மாட்டார்கள் என பழனிச்சாமியே யோசித்ததாக சொல்லப்பட்டது. எனவே, சமீபத்தில் அமித்ஷாவை சந்தித்து பேசியபோது அண்ணாமலையை தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து தூக்கினால் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் சேர்கிறோம் என பழனிச்சாமி சொன்னதாக செய்திகள் வெளியானது.

சமீபத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தபோது அண்ணாமலை மாற்றப்பட்டு தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டர். நயினார் நாகேந்திரன் தலைவராக பொறுப்பேற்ற விழாவில் கலந்துகொண்டு அண்ணாமலை கிளம்பிய போது அங்கிருந்த பாஜக தொண்டர்கள் ‘அண்ணா எங்களை விட்டு போகாதீங்க அண்ணா’ என அழுதபடியே அவரின் காரை மறித்துக்கொண்டனர். இதனால் சில நிமிடங்கள் அங்கிருந்து அவரால் செல்ல முடியவில்லை. தற்போது அண்ணாமலைக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே, இனிமேல் அண்ணாமலை டெல்லியில் அரசியல் செய்வார் என பாஜகவினர் சொல்கிறார்கள்.

annamalai

இந்நிலையில், அண்ணாமலை இமயமலைக்கு ஆன்மிக பயணம் மேற்கொண்டுள்ளார். ரஜினி ஸ்டைலில் வெள்ளை நிற பைஜாமா அணிந்தபடி பாபா முத்திரையை காட்டி அண்ணாமலை போஸ் கொடுக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.