Home Blog Page 331

பெண்கள் பிரசவத்திற்கு பிறகு தொப்பை வராமல் இருக்க பெல்ட் அணியலாமா? மருத்துவரின் தெளிவான விளக்கம்!!

0

கர்ப்பம் தரித்தல் என்பது எல்லா பெண்களுக்கு இருக்கும் பெரிய கனவாகும்.திருமணமான பெண்கள் தங்கள் கர்ப்பத்தை எதிர் நோக்கி காத்திருக்கின்றனர்.பெண்கள் கர்ப்பம் தரித்த பின்னர் மற்றும் குழந்தை பெற்ற பின்னர் உடல் சார்ந்து பல மாற்றங்களை எதிர்கொள்கின்றனர்.

பிரசவித்த பெண்களுக்கு முடி உதிர்தல்,தொப்பை போடுதல்,உடல் எடை அதிகரித்தல்,மன அழுத்தம் உண்டதால் போன்றபிரச்சனைகளை எதிர் கொள்கின்றனர்.பிரசவ காலத்திற்கு பிறகு பெண்களுக்கு இடுப்பு வலி பாதிப்பு அதிகமாக இருக்கிறது.

பெண்கள் குழந்தை பெற்ற பின்னர் பத்திய உணவு சாப்பிடுவதில் இருந்து பல விஷயங்களை பாலோ செய்து வருகின்றனர்.குழந்தை பெற்ற பிறகு தாய்ப்பால் கொடுப்பதில் இருந்து குழந்தை பராமரிப்பு வரையிலான பல விஷயங்களை செய்து வருகின்றனர்.

இப்படி எல்லா விஷயங்களிலும் அக்கறை காட்டும் பெண்கள் தங்கள் உடல் மீது அக்கறை செலுத்துவதில்லை.இதனால் உடலளவில் பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.இன்று பெரும்பாலான பெண்களுக்கு சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக் கொள்கின்றனர்.

இதனால் பிரசவத்திற்கு பிறகு தொப்பை ஏற்படுவது அதிகரித்து வருகிறது.இந்த தொப்பை குறைக்க மருத்துவர் பெல்ட் பயன்படுத்த அறிவுறுத்துகின்றனர்.பெல்ட் அணிவதால் வயிற்று தசைகள் இயல்பு நிலைக்கு வரும்.வயிறு மற்றும் இடுப்பு பகுதிக்கு இடையே உள்ள தசைகள் வலுப்படும்.இதனால் தொப்பை வராமல் இருக்கும்.

பெல்ட் அணிந்தாலும் எளிதான உடற்பயிற்சி செய்ய வேண்டியது முக்கியம்.சுகப் பிரசவத்தில் குழந்தை பெற்றவர்கள் மற்றும் சிசேரியன் மூலம் குழந்தை பெற்றவர்கள் என்று எப்படி குழந்தை பெற்றிருந்தாலும் நீங்கள் பெல்ட் பயன்படுத்துவதற்கு முன் நிச்சயம் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டியது முக்கியம்.

சிலர் பிரசவ தொப்பையை குறைக்க லிபோசெஷன் செய்கின்றனர்.பெல்ட் அணிதல்,கொழுப்பு அகற்றும் சிகிச்சை செய்தல் போன்றவை அவரவர் விருப்பம்.நீங்கள் எதை செய்வதாக இருந்தாலும் முதலில் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.

OCD என்றால் என்ன? ஓசிடி ஆபாத்தானதா? இதன் அறிகுறிகள் மற்றும் காரணங்கள்!!

0

உங்களில் பலர் OCD அதாவது Obsessive Compulsive Disorder என்ற பழக்கம் அதிகமாக இருக்கும்.இந்த OCD சாதாரண விஷயமாக இருந்தால்பிரச்சனை இல்லை.ஆனால் OCD தீவிரமாக இருந்தால் நிச்சயம் அது உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்திவிடும்.

OCD ஒரு மன நலன் சார்ந்த விஷயமாகும்.இந்த பிரச்சனை இருபவர்களால் தங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் போகும்.சிலர் அடிக்கடி கை மற்றும் கால்களை கழுவிக் கொண்டே இருப்பவர்கள்.சுத்தமாக இருப்பது முக்கியம்.ஆனால் அதீத சுத்தத்தை கடைபிடிப்பவர்களுக்கு OCD பிரச்சனை இருக்கும்.

எப்பொழுதும் ஏதாவது ஒரு விஷயம் சிந்தனையில் ஓடிக் கொண்டே இருக்கும்.இல்லாத விஷயங்கள் மற்றும் தேவையில்லாத விஷயங்களை பற்றி அதிகமாக யோசித்து மனதை குழப்பிக் கொள்வார்கள்.தேவையற்ற எண்ணங்கள் மனதில் அதிகமாக ஊடுருவினால் நிச்சயம் அது கவலை மற்றும் பயத்தை அதிகமாக்கிவிடும்.

OCD அறிகுறிகள்:

கட்டுப்படுத்த முடியாத உணர்ச்சிகள்

அடிக்கடி கை மற்றும் கால்களை கழுவுதல்

பொருட்களை அடிக்கடி ஒழுங்கமைத்தல்

அதீத சுத்தம்

OCD காரணங்கள்:

குடும்ப வரலாறு

மன அழுத்தம் அதிகமாதல்

மூளை செயல்பாட்டில் மாற்றம்

உங்கள் பெற்றோருக்கு OCD பிரச்சனை இருந்தால் உங்களுக்கும் இந்த பாதிப்பு வரலாம்.சுத்தமாக இருப்பது நல்ல விஷயம்.ஆனால் அதீத சுத்தமாக இருப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.நம் மனதில் தேவையில்லாத சிந்தனைகளை உருவாக்கி அதை பற்றியே எந்நேரமும் சிந்தித்து மன அழுத்தத்தை உண்டாக்கி கொண்டால் உடல் ஆரோக்கியம் மோசமாகிவிடும்.

உங்களுக்கு OCD பாதிப்பு இருந்தால் நீங்கள் தாமதம் செய்யாமல் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.மருத்துவரிடம் பிரச்சனைகளை விளக்கி உரிய சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டியது முக்கியம்.

இன்று பிரபஞ்சத்திடம் நீங்கள் என்ன கேட்டாலும் உங்களுக்கு கிடைக்கும்..!! அவ்வளவு சக்தி வாய்ந்த நாள் (4.4.2025) இன்று ..!!

0

ஒவ்வொரு நாளிற்கும், ஒவ்வொரு திதிக்கும், ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு சிறப்பம்சம் என்பது கண்டிப்பாக இருக்கும். அந்தந்த நாளிற்கு உரிய தெய்வ வழிபாடு மற்றும் பரிகாரத்தை நாம் செய்யும் பொழுது கண்டிப்பாக அதற்கான பலன் நமக்கு கிடைக்கும். அதேபோன்று “தேவதை வசிய நாள்” என்ற ஒரு சிறப்பம்சம் கொண்ட நாட்களும் உள்ளது. இந்த நாளை நாம் சரியாக பயன்படுத்திக் கொண்டால், கண்டிப்பாக நாம் வேண்டியது நடக்கும்.

இத்தகைய அதிர்ஷ்டம் நிறைந்த தேவதை வசிய நாள் நாளைய தினமான வெள்ளிக்கிழமை (4.4.2025) வருகிறது. இந்த நாளில் நமக்கு வேண்டியதை இந்த பிரபஞ்சத்திடம் கேட்கும் பொழுது, கண்டிப்பாக அதனை நிறைவேற்றி தரும் என்பது நம்பிக்கை.

இந்த நாளில் அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் வரக்கூடிய 4:44 மணியையும், மாலை நேரத்தில் வரக்கூடிய 4:44 மணியையும் தவற விடாதீர்கள். உங்களுக்கு எந்த தேவைகள் நிறைவேற வேண்டுமோ அதனை முன்கூட்டியே முடிவு செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பிரபஞ்சத்திடம் நமக்கு வேண்டியதை இன்றைய தினம் கேட்க இரண்டு வாய்ப்புகள் உள்ளது. இதில் ஒரு வாய்ப்பினை தவறவிட்டாலும் கூட, இரண்டாவது வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த நேரத்தில் நமக்கு தேவையான வழிபாட்டை செய்வதற்கு ஒரு பிரியாணி இலை மற்றும் ஒரு பேனா இருந்தால் போதும்.

இந்த வழிபாட்டு முறையை செய்வதற்கு எந்த ஒரு தீட்டு, சாங்கியம், சம்பிரதாயங்கள் என எதுவும் கிடையாது. அசைவம் சாப்பிட்டு இருந்தாலும், மாதவிடாய் காலங்களிலும் இதனை செய்து கொள்ளலாம். இதனை குடும்பத்தில் உள்ள ஒருவர் மட்டும்தான் செய்ய வேண்டும் என்ற விதிமுறைகள் கிடையாது. எனவே குடும்பத்தில் உள்ள அனைவரும் இதனை செய்து கொள்ளலாம்.

பணம், புகழ், ஆரோக்கியம், வேலை, படிப்பு, திருமணம், குழந்தை பேறு, வழக்குகளில் வெற்றி, வாழ்க்கையில் முன்னேற்றம் இது போன்ற எது சம்பந்தமாக நாம் வேண்டிக் கொண்டாலும் கண்டிப்பாக அது நிறைவேறும்.

உங்களுக்கு என்ன தேவைகள் நிறைவேற வேண்டுமோ அதனை மேலே குறிப்பிட்ட நேரத்தின் பொழுது, பிரியாணி இலையில் உங்களுக்கு வேண்டியதை நான்கு முறை எழுத வேண்டும். இப்பொழுது எழுதியதை வலது கையில் வைத்துக் கொண்டு, மனதார இந்த பிரபஞ்சத்திடம் நான்கு நிமிடம் வேண்டிக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு அந்த பிரியாணி இலையை ஒரு அகல் விளக்கு அல்லது மெழுகுவர்த்தியை கொண்டு எரித்து விட வேண்டும். இப்பொழுது எரித்த அந்த சாம்பலை வீட்டிற்கு வெளியே சென்று நமது உள்ளங்கையில் வைத்து ஊதி விட வேண்டும். இப்பொழுது நாம் வேண்டி எழுதிக் கொண்ட அந்த வேண்டுதலை, பிரபஞ்சத்திடம் அனுப்பியது போன்று அர்த்தம் கொள்ளப்படும்.

இந்த வழிபாட்டை செய்வதற்கு மேலே குறிப்பிட்ட நேரம் என்பது மிகவும் முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய ஒன்று.

டிரம்ப் விதித்த வரி இந்திய ஐடி துறையை பாதிக்குமா? வேலை இழப்பு அபாயம்!

0

டிரம்ப் விதித்த வரி இந்திய ஐடி துறையை பாதிக்குமா? வேலை இழப்பு அபாயம் உள்ளது என பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

டிரம்ப் அறிவித்த புதிய வரிகள் – இந்தியாவின் எதிர்காலம் என்ன?

அமெரிக்க முன்னாள் அதிபர் மற்றும் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், மீண்டும் இந்திய பொருளாதாரத்துக்கு எதிராக கடுமையான வரிகளை விதிக்க முடிவு செய்துள்ளார். குறிப்பாக, இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்குக் கொண்டு செல்லப்படும் சில முக்கிய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையில் பெரும் அதிர்ச்சியையும், வேலை இழப்பு அபாயத்தையும் ஏற்படுத்தும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க சந்தையில் இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை – ஒரு பார்வை

இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையானது (IT Sector), அமெரிக்க சந்தையை அதிகம் சார்ந்துள்ளது. இந்தியாவின் முன்னணி IT நிறுவனங்கள், அமெரிக்காவிலுள்ள பெரும் நிறுவனங்களுக்கு மென்பொருள் சேவைகளை வழங்கி வருகின்றன. டிரம்ப் அறிவித்துள்ள வரிகள் அமலில் வந்தால், அமெரிக்காவிலுள்ள வாடிக்கையாளர்கள், இந்திய நிறுவனங்களின் சேவைகளை பயன்படுத்துவதில் தயக்கம் காட்டலாம். இதனால், இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்புகள் குறையும் அபாயம் உள்ளது.

வேலை இழப்புகள் அதிகரிக்குமா?

பல்வேறு நிபுணர்கள், இந்த புதிய வரிகள் காரணமாக இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில் பெரிய அளவில் வேலை இழப்புகள் ஏற்படலாம் என்று கணிக்கின்றனர். சமீபத்திய வேலைவாய்ப்பு தரவுகளின்படி, Naukri JobSpeak Index மார்ச் 2025ல் 2.5% குறைந்துள்ளது. இதன் காரணமாக, பல்வேறு IT நிறுவனங்கள் பணிநீக்கம் செய்ய வேண்டிய சூழ்நிலையினை சந்திக்கலாம்.

இந்திய பொருளாதாரத்துக்கு இது ஒரு அதிர்ச்சி!

இந்தியாவின் IT துறை, நாட்டின் GDPயில் 7.4% பங்கை வகிக்கிறது. டிரம்ப் அறிவித்துள்ள வரிகள், இந்தியாவுக்கு ஆண்டுதோறும் பல கோடி டாலர் இழப்பை ஏற்படுத்தும் என்று Emkay Global Financial Services நிறுவனம் கூறியுள்ளது. இது, வேலைவாய்ப்புகளை மட்டுமல்லாமல், இந்தியாவின் மென்பொருள் ஏற்றுமதியை (Software Export) கடுமையாக பாதிக்கக்கூடும்.

தீர்வாக என்ன செய்யலாம்?

இந்த நெருக்கடியை சமாளிக்க, இந்திய IT துறை, தனது வாடிக்கையாளர்களை மாறுபடுத்த வேண்டும். அமெரிக்காவிற்கு மாற்றாக, ஐரோப்பா, ஜப்பான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் சந்தைகளை ஆய்வு செய்து அங்கு தனது சேவைகளை அதிகரிக்க வேண்டும். மேலும், உள்நாட்டு வளர்ச்சிக்காக இந்தியாவில் டிஜிட்டல் மாற்றத்திற்காக அதிக முதலீடுகளை செய்ய வேண்டும்.

தனியார் மற்றும் அரசின் கூட்டு முயற்சி

டிரம்ப் அறிவித்துள்ள வரிகள், இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். ஆனால், இந்தியா இதற்கான மாற்று வழிகளை ஆராய்ந்து, வேகமாக தனது வர்த்தக முன்னேற்றங்களை மாற்றி அமைத்தால், இந்த பிரச்சினையிலிருந்து மீண்டு வர முடியும். அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து செயல்பட்டால், இந்த நெருக்கடியை எளிதில் சமாளிக்கலாம்.

 

ஒரு முத்தத்துக்கு 50 ஆயிரம்! தொழிலதிபரை மடக்கிய ஆசிரியை

0

பெங்களூரு: தொழிலதிபரை காதல் வலையில் வீழ்த்தி பணம் பறிக்க முயன்ற மழலையர் பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை காதல் வலையில் வீழ்த்தி, அவரிடமிருந்து பணம் பறிக்க முயன்றதாக மழலையர் பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொழிலதிபர் மற்றும் ஆசிரியை இடையிலான தொடர்பு

பெங்களூருவில் தொழிலதிபராக இருக்கும் ராகேஷ் வைஷ்னவ், தனது மூன்றாவது மகளை நகரில் உள்ள ஒரு தனியார் மழலையர் பள்ளியில் சேர்த்தார். அங்கு பணியாற்றிய ஆசிரியை ஸ்ரீதேவி ருடகி (25), மாணவியின் தந்தை ராகேஷ் உடன் மகள் படிப்பு சம்பந்தமாக தொடர்பு ஏற்படுத்தினார். பள்ளி தொடர்பான விவகாரங்களில் பேசுவதன் மூலம் தொடங்கிய இந்த தொடர்பு, பின்னர் அவர்களின் தனிப்பட்ட செல்போன் உரையாடல்களாக வளர்ச்சி பெற்றது.

பணப்பரிமாற்றம் மற்றும் மிரட்டல்

இதனையடுத்து இருவருக்கும் இடையில் நெருக்கமான உறவு உருவாகிய நிலையில், ஸ்ரீதேவி, ராகேஷ் அவரை தனிப்பட்ட முறையில் சந்திக்க அழைத்தார். அவர்களின் இந்த சந்திப்பின் போது, ஸ்ரீதேவி ஒரு முத்தத்திற்கு 50,000 ரூபாய் கேட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அவர் ராகேஷ் அவர்களிடம் மேலும் 15 லட்சம் ரூபாய் கோரினார். ராகேஷ் பணம் வழங்க மறுத்தபோது, ஸ்ரீதேவி அவரை மிரட்டி, அவர்களின் தனிப்பட்ட புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக அவரை மிரட்டியுள்ளார்.

குற்றச்சாட்டு மற்றும் கைது

இந்த மிரட்டலால் அச்சமடைந்த ராகேஷ், முதலில் 1.9 லட்சம் ரூபாய் வழங்கினார். ஆனால், ஸ்ரீதேவி தொடர்ந்து பணம் கோர, ராகேஷ் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி, ஸ்ரீதேவி மற்றும் அவருடன் இணைந்திருந்த மேலும் இருவரை கைது செய்தனர். விசாரணையில், ஸ்ரீதேவி முன்பு மற்ற இருவரையும் இதேபோன்ற முறையில் மிரட்டியதற்காக வழக்குகள் உள்ளன என்பது தெரியவந்தது.

சமூகத்தில் விழிப்புணர்வு

இந்த சம்பவமானது, சமூகத்தில் நம்பிக்கையை துஷ்பிரயோகம் செய்வதை வெளிப்படுத்துகிறது. தொழிலதிபர் ராகேஷ் போன்றோர், தனிப்பட்ட தகவல்களை பகிர்வதில் கவனமாக இருக்க வேண்டும் என்பதையும், சந்தேகத்திற்கிடமான செயல்களில் ஈடுபடுபவர்களை உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்பதையும் இந்த சம்பவம் உணர்த்துகிறது.

அண்ணாமலை பதவிக்கு ஆப்பு வைத்த உட்கட்சி விவகாரம்!

0

தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்படும் ஒரு முக்கியமான விவகாரமாக அண்ணாமலையின் பாஜக மாநில தலைவர் பதவி மாற்றம் இன்று கடுமையான சர்ச்சைகளுக்கு உள்ளாகியுள்ளது. 2023-ல் அதிமுக-பாஜக கூட்டணி உடைந்ததற்கான முக்கிய காரணமாக இருந்த அண்ணாமலை மீண்டும் அதிமுக-பாஜக கூட்டணி உருவாகும் நிலையில் கடுமையான எதிர்ப்புக்கு ஆளாகி வருகிறார்.

1. ஒருங்கிணைந்த அதிமுக – பாஜக மீண்டும் அணி திரளுமா?

தமிழகத்தில் மீண்டும் அதிமுக-பாஜக கூட்டணியை மீண்டும் இணைக்க தமிழக பாஜகவினர் தீவிரமாக முயற்சி செய்கிறார்கள். இந்த முயற்சியின் ஒரு முக்கிய கட்டமாகவே அமித்ஷா – எடப்பாடி பழனிசாமி சந்திப்பு அமைந்துள்ளது. இந்த சந்திப்பில், எடப்பாடி பழனிசாமி அண்ணாமலை தலைமையில் கூட்டணி எப்படியும் சாத்தியமில்லை என உறுதியாக தெரிவித்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அதிமுக, அண்ணாமலையின் செயல்பாடுகளை கண்டித்ததோடு, அவரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன. ஆனால் அண்ணாமலையை மாநில தலைவர் பதவியிலிருந்து மாற்ற அதிமுகவினர் வைத்த கோரிக்கை காரணமல்ல என்றும் இதற்கு பின்னால் வேறு சில விவகாரங்களும் அவருக்கு எதிராக கிளம்பியுள்ளதாக கூறப்படுகிறது.

2. அண்ணாமலைக்கு எதிராக தமிழக பாஜகவினர் புகார்

அண்ணாமலையை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என தமிழக பாஜகவினரே தேசிய தலைமைக்கு புகார் அளித்துள்ளனர் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கேசவ விநாயகம், அண்ணாமலை கட்சி நிதியில் மோசடி செய்ததாக (corruption) புகார் பதிவு செய்துள்ளார். இதன் பின்னணியில், அண்ணாமலையின் செயல்பாடுகள் தொடர்பாக பல கோப்புகள் டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து, நயினார் நாகேந்திரன் பாஜக தலைமைக்கு நேரடியாக அண்ணாமலை தேர்தல் பணிகளை செய்ய விடாமல் தடுத்ததாகவும் (complaint) புகார் அளித்துள்ளார். மேலும், அண்ணாமலை மற்றும் அவரது அணியினர், திமுக அமைச்சர்களை மிரட்டி “collection” செய்ததாகவும், இதில் கோடிக்கணக்கான பணப்பரிவர்த்தனைகள் நடந்ததாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

3. அண்ணாமலைக்கு எதிராக பாஜகவின் மூத்த தலைவர்கள்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜகவின் முக்கிய ஆலோசகராக இருக்கும் கேடி ராகவன், தமிழக பாஜகவின் முன்னணி தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோர் அண்ணாமலை மீது புகார்கள் அளித்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

சமீபத்தில் நடந்த “அன்னபூர்ணா விவகாரம்” தொடர்பாக நிர்மலா சீதாராமனுக்கு எதிராக அண்ணாமலை நடவடிக்கை எடுக்க முயன்றது அவரை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியது. இதன் காரணமாக, அண்ணாமலை பாஜகவின் முக்கிய தலைவர்களால் புறக்கணிக்கப்படுவதாகவும் தெரிகிறது. இது மட்டுமல்லாமல் கடந்த மக்களவை தேர்தலின் போதும் சொந்த கட்சி வேட்பாளர்களுக்கு எதிராகவும் செயல்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

அண்ணாமலையின் எதிர்காலம்?

இதனால், அண்ணாமலையின் பாஜக தலைவர் பதவி நீடிக்குமா? அல்லது அவரை மாற்றி தமிழக பாஜகவில் புதிய தலைமை உருவாகுமா? என்பதே தற்போதைய அரசியல் சர்ச்சையாக மாறியுள்ளது. அந்த வகையில் மாநில தலைவர் பதவியிலிருந்து மாற்றப்பட்டு மத்திய அமைச்சராக வாய்ப்புள்ளது என்றும், ஆளுநராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

IPL 2025: முதல் போட்டியிலேயே செம்ம ஹிட் – டாப் 5 இளம் வீரர்கள் யார்?

0

IPL 2025 தொடரின் முதல் போட்டிகள் முடிவடையும்போது, சில இளம் வீரர்கள் அபாரமான ஆட்டத்தால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினர். யாரும் எதிர்பாராத விதமாக தங்கள் அணிகளுக்கு வெற்றி சேர்த்த இவர்கள், எதிர்கால IPL சூப்பர்ஸ்டார்கள் என்றே சொல்லலாம்.

1. அஸ்வினி குமார் – மும்பை இந்தியன்ஸ்

IPL 2025: முதல் போட்டியிலேயே செம்ம ஹிட் – டாப் 5 இளம் வீரர்கள் யார்?

மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அஸ்வினி குமார் தனது IPL அறிமுக போட்டியிலேயே பிரகாசித்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, அறிமுக IPL போட்டியிலேயே 4 விக்கெட் எடுத்த முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனை படைத்தார். இந்த பரவலான ஸ்பெல்லால், மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.

2. அனிகெட் வர்மா – சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

IPL 2025: முதல் போட்டியிலேயே செம்ம ஹிட் – டாப் 5 இளம் வீரர்கள் யார்?

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் அனிகெட் வர்மா, டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக 41 பந்துகளில் 74 ரன்கள் குவித்து அசத்தினார். இத்துடன், 3 போட்டிகளில் 12 சிக்ஸர்களுடன் 117 ரன்கள் சேர்த்து IPL ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

3. பிரியான்ஷ் ஆர்யா – பஞ்சாப் கிங்ஸ்

IPL 2025: முதல் போட்டியிலேயே செம்ம ஹிட் – டாப் 5 இளம் வீரர்கள் யார்?

பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிரியான்ஷ் ஆர்யா, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 23 பந்துகளில் 47 ரன்கள் அடித்து, தனது திறமையை வெளிப்படுத்தினார். தொடக்க வீரராக வந்த அவர், அதிரடியான தொடக்கத்தை வழங்கி அணிக்கு நல்ல மொமெண்டம் ஏற்படுத்தினார்.

4. விக்னேஷ் புதூர் – மும்பை இந்தியன்ஸ்

IPL 2025: முதல் போட்டியிலேயே செம்ம ஹிட் – டாப் 5 இளம் வீரர்கள் யார்?

மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் ரிஸ்ட் ஸ்பின்னர் விக்னேஷ் புதூர், CSK-க்கு எதிராக அசத்தலான பந்துவீச்சைக் காட்டினார். முக்கியமான தருணத்தில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, தனது அணிக்கு மிகப் பெரிய ஆதரவாக இருந்தார். அவரது திறமை எதிர்காலத்தில் இன்னும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி.

5. விராஜ் நிகம் – டெல்லி கேபிடல்ஸ்

IPL 2025: முதல் போட்டியிலேயே செம்ம ஹிட் – டாப் 5 இளம் வீரர்கள் யார்?

லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக டெல்லி தோல்வி நெருங்கிய தருணத்தில், இளம் பேட்ஸ்மேன் விராஜ் நிகம் அசத்தல் இன்னிங்ஸ் ஆடியுள்ளார். 15 பந்துகளில் 39 ரன்கள் அடித்து, தனது அணியை வெற்றிக்காக அழைத்துச் சென்றார். இதனால், அவரை டெல்லி ரசிகர்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

இளம் வீரர்கள் IPL-ல் கலக்குவாரா?

IPL 2025 தொடரில் இளம் வீரர்கள் தொடக்கமே சூடாக இருக்கிறது. இந்த வீரர்கள் தொடர்ந்தும் அசத்துவார்களா? அல்லது இன்னும் பல இளம் வீரர்கள் பீல்டில் இறங்கி புதிய சாதனைகள் படைக்குமா? என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகமாகிவிட்டன!

மீண்டும் ரஜினியை வைத்து ரிஸ்க் எடுக்கும் லைக்கா!.. இதாவது லாபம் கொடுத்தா சரி!…

0

Rajinikanth: இலங்கையை சேர்ந்த சுபாஷ்கரனுக்கு லண்டனில் சிம் கார்டு உள்ளிட்ட சில தொழில்கள் உள்ளது. ஆனால், சினிமா எடுப்பதில் ஆர்வம் கொண்ட சுபாஷ்கரன் கோலிவுட்டில் களமிறங்கி லைக்கா புரடெக்‌ஷன் என்கிற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை துவங்கினார். இந்த நிறுவனம் இயக்கிய முதல் படம் கத்தி. விஜய் நடித்து வெளியான இப்படம் வெற்றி பெற்றது. அதன்பின் இந்த நிறுவனத்துக்கு விஜய் கால்ஷீட் கொடுக்கவே இல்லை.

எனவே, மற்ற ஹீரோக்களை வைத்து படங்களை எடுத்தது லைக்கா. சின்ன பட்ஜெட்டில் உருவான படங்கள் இந்த நிறுவனத்துக்கு லாபத்தை கொடுத்தது. ஆனால், பெரிய ஹீரோக்களை வைத்து லைக்கா நிறுவனம் எடுத்த எல்லா படங்களுமே அந்த நிறுவனத்திற்கு நஷ்டத்தையே கொடுத்தது.

மீண்டும் ரஜினியை வைத்து ரிஸ்க் எடுக்கும் லைக்கா!.. இதாவது லாபம் கொடுத்தா சரி!...

ரஜினியை வைத்து எடுத்த தர்பார் மற்றும் வேட்டையன், கமலை வைத்து எடுத்த இந்தியன் 2, அஜித்தை வைத்து எடுத்த விடாமுயற்சி போன்ற எல்லா படங்களுமே நஷ்டத்தை கொடுத்தது. இதனால், லைக்கா நிறுவனம் மீண்டும் எழுமா என்கிற சந்தேகமே பலருக்கும் வந்தது. குறிப்பாக இந்தியன் 2 ம் மற்றும் விடாமுயற்சி படங்கள் லைக்காவுக்கு பல கோடி நஷ்டங்களை கொடுத்தது. அதேபோல், ரஜினி கெஸ்ட் ரோலில் நடித்து வெளியான லால் சலாம் படமும் தோல்வியடைந்தது.

எனவே, லைக்கா எப்படியாவது மேலே வரவேண்டும் என்கிற எண்ணம் தமிழ் சினிமா உலகினருக்கே வந்தது. இந்த எண்ணம் ரஜினிக்கும் வந்திருக்கிறது. எனவே, உங்களுக்கு ஒரு படம் நடித்து கொடுக்கிறேன் என சொல்லி இருக்கிறாராம். கூலி மற்றும் ஜெயிலர் 2 படம் முடிந்த பின் இந்த பட வேலை துவங்கும் என கணிக்கப்படுகிறது. கூலி, ஜெயிலர் 2 படங்கள் கண்டிப்பாக ஹிட் அடிக்கும். அந்த சூட்டோடு லைக்கா படத்தில் ரஜினி நடித்தால் கண்டிப்பாக பாடம் நல்ல விலைக்கு வியாபாரம் ஆகிவிடும். இதன் மூலம் லைக்காவுக்கு லாபம் கிடைக்கும் என கணக்கு போடுகிறாராம் ரஜினி. அதோடு, சம்பளத்தை படம் ரிலீஸான பின் வாங்கி கொள்ளலாம் என்கிற முடிவுக்கும் வந்திருக்கிறாராம் ரஜினி.

ரஜினியை வைத்து லைக்கா எடுத்த 3 படங்களும் ஓடவில்லை. இந்தமுறை இவர்களின் கூட்டனி வெற்றி பெறவேண்டும் என்பதே எல்லோரின் எண்ணமாக இருக்கிறது.

பழனிச்சாமிக்கு அடிபணிந்த அமித்ஷா!.. அண்ணாமலையை இப்படி டீல்ல விட்டாரே!….

0

சில வருடஙகளுக்கு முன் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டவர் அண்ணாமலை. இவர் கர்நாடகாவில் காவல் துறையில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர். எதிர்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தும் அவர் பெரிதாக எதையும் பேசாத நிலையில், அண்ணாமலையோ திமுகவுக்கு எதிராக பேசி ஸ்கோர் செய்தார். இதனால் மக்களால் கவனிக்கப்பட்டார் அண்ணாமலை.

இது திமுகவுக்கு தலைவலியை ஏற்படுத்தியது. மேலும், அண்ணாமலை இருக்கும் வரை நம்மை யாரும் மதிக்க மாட்டார்கள் என பழனிச்சாமியே யோசித்ததாக சொல்லப்பட்டது. எனவே, சமீபத்தில் அமித்ஷாவை சந்தித்து பேசியபோது அண்ணாமலையை தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து தூக்கினால் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் சேர்கிறோம் என பழனிச்சாமி சொன்னதாக செய்திகள் வெளியானது.

பழனிச்சாமிக்கு அடிபணிந்த அமித்ஷா!.. அண்ணாமலையை இப்படி டீல்ல விட்டாரே!....

எனவே, தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும், அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்கப்படவுள்ளதாகவும் செய்திகள் கசிந்தது. இதுபற்றி கருத்து சொன்ன அண்ணாமலை ‘என் பதவியை தாராளமாக எடுத்துக்கொள்ளட்டும். மாநில தலைவர் பதவி என்பது வெங்காயம் போன்றது. உரித்து பார்த்தால் அதில் ஒன்றும் இல்லை. நான் எப்போதும் பதவிக்காக அரசியலுக்கு வந்தவன் கிடையாது. பதவியை தூக்கிப்போட்டு வந்தவன்’ என பேசியிருந்தார். ஆனால், தேர்தல் முடியும் வரை அண்ணாமலையே பாஜக தலைவராக இருக்கட்டும் என சிலர் அமித்ஷாவுக்கு கோரிக்கை வைத்தனர்.

ஒருபக்கம் தமிழக பாஜக தலைவர் லிஸ்ட்டில் வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம், தமிழிசை சவுந்தர்ராஜன் உள்ளிட்ட சிலர் இருக்கிறார்கள். இந்நிலையில், தமிழக பாஜக தலைவராக யாரை நியமிக்கலாம் என்பது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக பாஜக தேர்தல் பொறுப்பாளர் கிஷண் ரெட்டி வருகிற 7ம் தேதி சென்னை வருகிறார். 7 மற்றும் 8ம் தேதி என 2 நாளும் அவர் சென்னையில் தங்கி அவர் ஆலோசனை செய்யவிருக்கிறார். நடக்கும் விஷயங்களை பார்க்கும்போது பழனிச்சாமி வைத்த கோரிக்கையை அமித்ஷா ஏற்றுக்கொண்டதாகவே பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளது.

கள்ளக்காதல் விவகாரம்!. தனது 3 குழந்தைகளையும் கொலை செய்த தாய்!.. அட கொடுமையே!..

0

கள்ளக்காதல் விவகாரத்தில் கணவரை மனைவியே கள்ளக்காதலனோடு சேர்ந்து கொலை செய்வதும், தனது குழந்தைகளை தாயே கொலை செய்வதும் என இது போன்ற செய்திகள் அவ்வப்போது வெளியாகி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுப்பதுண்டு. இரண்டு வாரங்களுக்கு முன்பு கூட கள்ளக்காதலுடன் சேர்ந்து தனது கணவனை துண்டு துண்டாக வெட்டி டிரம்ம்பில் போட்டு சிமெண்ட் போட்டு அடைத்த கோர சம்பவம் உத்திரபிரதேசத்தில் நடந்தது.

அதேபோல், அதே உத்திரபிரதேசத்தில் மனைவி இன்னொருவரை காதலிப்பது தெரிந்த கணவன் கள்ளக்காதலனுக்கே தனது மனைவியை திருமனம் செய்து வைத்த சம்பவமும் நடந்தது. காதலுனுக்காக கணவரை பெண்கள் கொலை செய்வது அதிகரித்து வருவதால் தான் இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் ஊடகங்களில் தெரிவித்தார்.

இந்நிலையில்தான், கள்ளக்காதல் விவகாரத்தில் தனது மூன்று குழந்தைகளையும் தாயே கொன்ற விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தெலுங்கான மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. தெலுங்கானாவில் வசிக்கும் ரஜிதா(35) என்பவருக்கு 3 திருமணமாகி 3 குழந்தைகள் இருக்கிறார்கள். சமீபத்தில் பள்ளி ரீ-யூனியன் சந்திப்பு நடந்திருக்கிறது. அங்கு ரஜிதா சென்றபோது சிறு வயதில் பள்ளியில் தன்னுடன் 10ம் வகுப்பு படித்த பலரையும் சந்தித்திருக்கிறார். அதில் ஒருவருடன் அவருக்கு காதலும் ஏற்பட்டிருக்கிறது.

எனவே, இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்திருக்கிறார்கள். ரஜிதாவின் கணவருக்கும் அவருக்கும் இடையே 20 வயது வித்தியாசம் என்பதால் தன்னுடைய வயதுடைய நபருடன் ரஜிதாவுக்கு காதல் ஏற்பட்டிருக்கிறது. அவருடன் சென்று வாழ தனது 3 குழந்தைகளும் தடையாக இருப்பதாக ரஜிஜா உணர்ந்திருக்கிறர். எனவே, 3 குழந்தைகளின் முகத்திலும் தலையனையை வைத்து அழுத்தி கொலை செய்துவிட்டு தயிர் சாதம் சாப்பிடும்போது மூச்சுத்திணறி இறந்துவிட்டார்கள் என நாடகம் ஆடியிருக்கிறார். ஆனால், போலீசாரின் விசாரணையில் உண்மை வெளியே தெரிந்துவிட இப்போது ரஜிதா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.