பிரசவத்திற்கு பிறகு இறந்த கர்ப்பிணி… சிகிச்சையின் போது மருத்துவர்கள் செய்த தவறு… அரசின் அதிரடி நடவடிக்கையால் பரபரப்பு..!!

0
51

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பல லட்சம் மக்களை கொன்று குவித்து வருகிறது. இந்த நோய் தொற்றில் இருந்து மக்களை காக்க மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் சுகாதாரத்துறையினர் கஷ்டபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த இளம் கர்ப்பிணி பெண் திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபா அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு முன்பாக அனுமதிக்கப்பட்டார். அங்கு மகப்பேறு முடிந்த சிறிது நேரத்தில் கர்ப்பிணி பெண்ணும் குழந்தையும் உயிரிழந்துள்ளனர்.

இதனால் தாய் மற்றும் சேயின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அவர்களின் உடலை உறவினர்கள் தங்கள் குடும்ப வழக்கப்படி தகனம் செய்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அந்த கர்ப்பிணிக்கு கொரோனா பரிசோதனையின் முடிவுகள் வந்தது. அந்த சோதனையில் அப்பெண்ணுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது உறுதியானது.

மருத்துவமனையில் அந்த கர்ப்பிணிக்கு எந்த ஒரு பாதுகாப்பு உபகாரணங்களும் இன்றி சிகிச்சையளித்த 10 மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் உடனடியாக தனிமைப்படுத்தி கொரோனா பாதிப்பு குறித்த மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் இறந்த கர்ப்பிணியின் இறுதிச்சடங்கில் 40-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டுள்ளனர். நோய் தொற்று ஏற்பட்டுள்ளது தெரியாமல் வழக்கமான முறையிலேயே சடங்கு சம்பிரதாயங்கள் நடைபெற்றுள்ளது.

பொதுவாக மருத்துவமனைகளில் மகப்பேறு காலத்தில் கர்ப்பிணிகளுக்கு, பிரசவத்திற்கு ஒரு வாரம் முன்னதாக கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த பரிசோதனை முடிவுகள் வருவதற்கு முன்பாக இறந்த பெண் மற்றும் குழந்தையின் உடலை வழங்கியதால் இந்த சிக்கல் உருவாகியுள்ளது என்று சொல்லப்படுகிறது.

தற்போது 25 க்கும் அதிகமான மருத்துவ ஊழியர்கள் மற்றும் 40க்கும் அதிகமான உறவினர்களையும் சரியான நேரத்தில் தனிமைப்படுத்தியுள்ளனர். மேலும் நோயாளிகளை காப்பாற்ற வேண்டிய மருத்துவர்களே சமயோஜிதமாக செயல்படவில்லை என்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Parthipan K