Home Blog Page 5668

முதல் இடத்தில் தல அஜித்..! பிறந்த நாளை கொண்டாட விவேகம் எடுத்த ரசிகர்கள்! இணையத்தில் தெறிக்கும் அதகளம்.!!

0

முதல் இடத்தில் தல அஜித்..! பிறந்த நாளை கொண்டாட விவேகம் எடுத்த ரசிகர்கள்! இணையத்தில் தெறிக்கும் அதகளம்.!!

நடிகர் அஜித்குமார் பிறந்தநாள் வருகின்ற மே மாதம் ஒன்றாம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது ரசிகர்கள் இப்போதே சமூக வலைதளங்களில் தலையில் தூக்கிவைத்து ஆரம்பித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் நடிகர் அஜித்குமார். தற்போது அவர் நீண்ட தூரம் பைக்கில் பயணம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.
தற்போது இயக்குனர் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக ஹீமா குரேஷியும், வில்லனாக கார்த்திகேயாவும் நடித்து வருகின்றனர். கொரோனா பாதிப்பின் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு எந்த ஷூட்டிங்கும் நடைபெறாமல் இருக்கிறது.

இந்நிலையில் நடிகர் அஜித் ஹைதராபாத்தில் இருந்து விமானத்தின் மூலம் வராமல் சென்னைக்கு வந்த சம்பவம் சினிமா மற்றும் ரசிகர்கள் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. நடிகர் அஜித்தின் ரசிகர்கள் அவரது பிறந்தநாளை முன்னிட்டு இணையத்தில் வாழ்த்து மற்றும் மீம்ஸ்களை உருவாக்கி தெறிக்கவிடுகின்றனர். தமிழ் சினிமாவிம் தவிர்க்கமுடியாத நடிகர்களாக அஜித்தும், விஜய்யும் நல்ல நண்பர்களாக இருந்து வந்தாலும் இவரது ரசிகர்கள் இடையே பெரும் இணைய சண்டை தொடர் கதையாக இருந்து வருகிறது.

கொரோனா பாதிப்பிற்காக 1 கோடிக்கும் மேல் அஜித் முதலில் உதவி செய்திருந்தார். இதில் மத்திய, மாநில அரசுகளுக்கும் சினிமாவை நம்பி இருக்கும் தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட்டது. இதனையடுத்து சமீபத்தில் நடிகர் விஜய் 1.30 கோடி நிதியுதவி அளித்த நிலையில் அஜித்தின் வழியை விஜய் பின்பற்றுவதாக ரசிகர்கள் சண்டை போட்டு வருகின்றனர். தற்போது இந்த போட்டி மனப்பான்மை குறைந்து மக்களுக்கு செய்த உதவியை இருபக்க ரசிகர்கள் பாராட்டியும் வருகின்றனர். மேலும் சமூக வலைதளங்களில் நடிகர் அஜித் பிறந்தநாள் மற்றும் குடும்ப படங்கள் முதலிடத்தை பிடித்துள்ளன. குறிப்பாக அலோ ஆப்-ல் அஜித் பற்றிய தகவல்கள் முதலிடத்தை பிடித்துள்ளன.

மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 7 ஆண்டுகள் சிறை! அமலுக்கு வந்த அவசர சட்டம்.!!

0

மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 7 ஆண்டுகள் சிறை! அமலுக்கு வந்த அவசர சட்டம்.!!

இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு தீவிரமாக பரவி வருகிறது. இதனை தடுக்க மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்கள் இரவும், பகலுமாக ஈடுபட்டு வருகின்றனர். இப்படி பணியாற்றும் மருத்துவர்களின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. குறிப்பாக சொல்லப்போனால் PEE என்று சொல்லக்கூடிய உடைகளை அணிந்து கடும் சிரமத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இதனை அணிவதற்கே குறிப்பிட்ட நேரம் தேவைப்படும் ஆகவே பணிக்கு முன்னதாகவே அதிக நேரம் ஒதுக்கி இந்த ஆடையை அணிந்து மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.

கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து உயிர் இழக்கும் மருத்துவர்களின் நிலை மோசமான சூழலாக இருந்து வருகிறது. சில இடங்களில் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும் டாக்டர்கள் மீது தாக்குதலும் நடத்தப்படுகிறது. இதனால் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவியதை தொடர்ந்து, மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டி மருத்துவ சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து மருத்துவர்களுக்கான அவசர பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு நேற்று நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டத்திற்கு குடியுரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சட்டத்தின் படி மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தியது உறுதி செய்யப்பட்டால் சில மணி நேரங்களில் தாக்குதல் நடத்தியவர் ஜாமீனில் வெளியே வராதபடி கைது செய்யப்படுவார் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 7 ஆண்டுகள் சிறைதண்டனை 5 லட்சம் வரை அபராதம் விதிக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சட்டம் நேற்று முதல் நடைமுறையில் அமல் ஆகிறது. இது தொடர்பான அறிவிப்பும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அம்மா உணவகங்களில் சாப்பாடு இலவசம்! சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு!

0

அம்மா உணவகங்களில் சாப்பாடு இலவசம்! சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு!

ஊரடங்கு உத்தரவால் உணவு பாதிப்பை தடுக்க சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் மூன்று வேளையும் இலவச உணவு வழங்க சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக இரண்டாம் கட்ட ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இதனால் வைரஸ் பரவலை தடுக்க சமூக இடைவெளி, முக கவசம், தினசரி கைகளை சோப்பு போட்டு கழுவுதல் மற்றும் உங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுதல். மேலும் அத்தியாவசிய தேவையின்றி யாரும் வெளியே வர வேண்டாம் என்று தமிழக அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

இதனால் வேலை மற்றும் வருமானம் இல்லாத தினக்கூலிகள், கட்டுமான தொழிலாளர்கள், அமைப்புசாரா ஊழியர்கள் மற்றும் விவசாயிகள் உணவுக்கே பெரிதும் பாதித்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகள், தனியார் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் போன்றோர் மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றனர். இப்படி வழங்குவதன் மூலமாக கொரோனா தொற்ற பரவல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் இதற்கு கட்டுப்பாடுகளை சென்னை மாநகராட்சி வகுத்துள்ளது.

மேலும் ஊரடங்கால் பலர் உணவிற்கு தவிக்கும் ஆபத்தான சூழலை கருத்தில் கொண்டு சென்னையில் இயங்கும் அம்மா உணவகங்களில் 3 வேளையும் இலவசமாக உணவு வழங்குமாறு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இது மக்களிடையே ஓரளவு மகிழ்ச்சியை ஏற்படுத்தியதோடு பலரது பசியை போக்கும் வழிமுறையாக பார்க்கப்படுகிறது. இந்த இலவச உணவுமுறை ஊரடங்கு முடியும் வரை செயல்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆபத்தில் உதவிய ரஜினிகாந்த்.! 1500 பேருக்கு அத்தியாவசிய பொருளுதவி.!! இயக்குனர்கள் சங்கம் பாராட்டு

0

ஆபத்தில் உதவிய ரஜினிகாந்த்.! 1500 பேருக்கு அத்தியாவசிய பொருளுதவி.!! இயக்குனர்கள் சங்கம் பாராட்டு

நடிகர் ரஜினிகாந்த் கேட்காமலேயே அத்தியாவசிய பொருளுதவி செய்த காரணத்திற்காக இயக்குனர்கள் சங்கம் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன் காரணமாக இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சியும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. சமூக பரவலாக மாறக்கூடாது என்பதால் அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. சினிமா படப்பிடிப்புகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதால் அதில் பணிபுரியும் உறுப்பினர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக கடந்த மாதம் பெஃப்சியில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் உதவுமாறு அதன் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் வைத்திருந்தார். இதையடுத்து பலரும் உதவி புரிந்தனர். அப்போது நடிகர் ரஜினியும் 50 லட்சம் உதவி வழங்கினார். ஆனால் தமிழக முதல்வர் நிதிக்கும், பிரதமர் நிவாரண நிதிக்கும் நிதியுதவி வழங்கவில்லை.

இந்நிலையில் பெஃப்சி தொழிலாளர்கள் 1500 பேருக்கு 10 கிலோ எடை கொண்ட அரிசி மூட்டைகள் மற்றும் 6 கிலோ எடை கொண்ட அத்தியாவசிய பொருட்கள் உட்பட வழங்கினர்.
இதற்காக ரஜினியை பாராட்டி இயக்குனர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது;

இன்றைய ஆபத்தான கொரோனா பாதிப்பில் வேலையின்றி வீட்டில் இருக்கும் சினிமா ஊழியர்கள், இயக்குனர்களின் கலை குடும்ப உறுப்பினர்களுக்கு  நீங்கள் அனுப்பிவைத்த நிவாரண பொருட்களை கிடைக்கப் பெற்றோம். கேட்காமலேயே சகோதர கலைக் குடும்பத்திற்கு வாரிக்கொடுத்த உங்கள் கொடையுள்ளத்தை பாராட்ட வாத்தைகள் இல்லை. போற்றுகிறோம். தங்கள் நலமும் புகழும் உயரட்டும், குடும்பம் நீடூழி வாழட்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமி தாக்கப்பட்டதன் காரணம் இது தான் : வெளியானது அதிர்ச்சி பின்னணி!

0

கடந்த சில நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிராவில் சாதுக்கள் இருவர் சில சமூக விரோதிகளால் அடித்துக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது மேலும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது.

இதற்கிடையில் மாஹாராஷ்டிர அரசு தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி சம்பந்தப்பட்ட கொலைகாரர்களை கைது செய்தனர். இந்த கொலைகாரர்கள் கைது செய்யப்பட்டாலும் அவர்கள் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டதால் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது.

இதனையடுத்து பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் இதற்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர். இதனால் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட மதவாத அமைப்புகளும் காங்கிரஸ் கூட்டணி கட்சியினருக்கும் பெரும் கருத்து மோதல்கள் உருவானது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிராவில் சாதுக்கள் இருவர் சில சமூக விரோதிகளால் அடித்துக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது மேலும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது.

இதற்கிடையில் மாஹாராஷ்டிர அரசு தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி சம்பந்தப்பட்ட கொலைகாரர்களை கைது செய்தனர். இந்த கொலைகாரர்கள் கைது செய்யப்பட்டாலும் அவர்கள் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டதால் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது.

இதனையடுத்து பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் இதற்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர். இதனால் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட மதவாத அமைப்புகளும் காங்கிரஸ் கூட்டணி கட்சியினருக்கும் பெரும் கருத்து மோதல்கள் உருவானது.

இந்த நிலையில் பிரபல செய்தி தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளர் அர்னாப் கோஸ்வாமி கேள்வி ஒன்றை எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிகழ்ச்சி நடந்த பிறகு பத்திரிக்கையாளர் அர்னாப் கோஸ்வாமி தனது மனைவியுடன் வீட்டிற்கு வரும் வழியில் சில குண்டர்களால் தாக்கப்பட்டார்.

அர்னாபும் அவரது மனைவியும் தாக்கப்பட்டதால் இந்த விவகாரம் நாடு முழுவதும் வேகமாக பரவியது, அதோடு அப்படி என்ன கேள்வியை கேட்டு விட்டார் என்றும் தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தனர். அந்த விவாத நிகழ்ச்சியில் அர்னாப் ‘இதே இடத்தில் இரண்டு சாதுக்களுக்கு பதிலாக இரண்டு கிருஸ்துவ மதபோதகர்கள் கொல்லப்பட்டிருந்தால் சோனியா என்ன பதில் அளிப்பார்’ என்று கேட்டிருந்தார்.

இந்த விவகாரம் தற்போது டுவிட்டரில் வேகமாக ட்ரெண்டாகி வருகிறது. மேலும் அர்னாப் கோஸ்வாமியை தாக்கியது யார் என்ற தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/ArnabGoswamiRtv/status/1253282509384810497?s=19

கொரோனாவுக்கு கடைசி நாள் குறித்த அதிசய சிறுவன்! குட்டி ஜோசியரின் இறுதி கணிப்பு பலிக்குமா.?

0

கொரோனா தொற்று நோயின் கடைசி நாளை தனது ஜோசியத்தின் மூலம் கணித்த சிறுவனின் பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பரவி பல லட்சம் மக்களை பாதித்துள்ளது. இதுவரை உலகம் முழுவதும் 26 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 84 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அமெரிக்கா, இத்தாலி, பிரான்சு, ஸ்பெயின், பிரிட்டன், வடகொரியா, இந்தியா போன்ற நாடுகள் அதிக பாதிப்பை சந்தித்து வருகின்றன.

இந்த வைரஸ் தொற்று குறித்து கடந்த 8 மாதங்களுக்கு முன்பே அமெரிக்காவில் வசிக்கும் அதிசய சிறுவன் தனது ஜோதிட கணிப்பின் மூலம் கணித்து கூறியுள்ளார். மேலும் இந்த கொரோனா வைரஸ் வருகிற மே மாதம் இறுதி நாட்களில் அழிய தொடங்கும் என்று யூடியூப் இணையத்தில் கூறியுள்ளார். அதாவது, அடுத்த மாத இறுதிக்குள்ள கொரோனா தொற்றுக்கு எதிரான மருந்துகள் செயல்பாட்டிற்கு வரும் என்றும், இதன் மூலம் அந்த நோய் படிப்படியாக அழியும் என்றும் கணித்து கூறியுள்ளார்.

மேலும் அடுத்த மாத இறுதியில் இந்தியாவில் வைரஸ் தாக்குதல் குறைந்து மற்ற நாடுகளுக்கு இந்தியா எடுத்துக்காட்டாக விளங்கும் என்றும் கூறியுள்ளார். இந்த நோயால் ஏற்பட்ட பொருளாதார இழப்பானது இந்த ஆண்டின் இறுதியில் இருந்து படிப்படியாக மாறி அடுத்த ஆண்டின் இறுதி கட்டத்தில் சரியாகும் என்று தெரிவித்துள்ளார்.

சிறுவன் அபிக்யாவின் கணிப்புகள் நூறு சதவீதம் உண்மை இல்லை என்று பலர் கூறி வருகின்றனர். ஆனால் இவரது கடந்தகால கணிப்புகள் ஓரளவு உண்மைதான் என்றும் நம்பப்படுகிறது. இதனால் அவரது பேச்சு உலகளவில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும் படிக்க : டாக்டர் வில்சனை விவகாரத்தில் கிறிஸ்துவ மத சிக்கல் உள்ளது : சர்ச்சையை கிளப்பும் அரசியல் விமர்சகர்!

மேலும் படிக்க : பத்திரிக்கையாளர் பனிமலருக்கு நிர்வாண படத்தை அனுப்பிய பிரபலம்! சர்ச்சையை கிளப்பும் பனிமலர்

மேலும் படிக்க : ஊரடங்கு நேரத்தில் கல்விக் கட்டணம் செலுத்த நெருக்கடி.! திமுக முன்னாள் அமைச்சரின் கல்லூரியில் நடக்கும் கெடுபிடி.!!

பத்திரிக்கையாளர் பனிமலருக்கு நிர்வாண படத்தை அனுப்பிய பிரபலம்! சர்ச்சையை கிளப்பும் பனிமலர்

0

பத்திரிக்கையாளர் பனிமலருக்கு நிர்வாண படத்தை அனுப்பிய பிரபலம்! சர்ச்சையை கிளப்பும் பனிமலர்

பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி பின்னர் பல்வேறு சேனல்களில் பணியாற்றிய பனிமலர் தற்போது அரசியல் கட்சி ஒன்றின் ஆதரவு பெற்ற தொலைக்காட்சியில் முக்கிய பொறுப்பு வகித்து வருகிறார்.

கோயம்பத்தூர் பகுதியை சேர்ந்தவரான பனிமலர் திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் விவாகரத்து வாங்கி தனியாக வசித்து வருகிறார். பெரியார்வாதியான இவர் சமீபத்தில் ஒரு முறை பெரியார் இருந்திருந்தால் அவரையே திருமணம் செய்திருப்பேன் என கருத்து தெரிவித்து சர்ச்சையை கிளப்பினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து அவ்வப்போது சமூக வலைதளங்களில் சாதி மறுப்பு மற்றும் மதச்சார்பின்மை என்ற பெயரில் இவர் பதிவிடும் கருத்துக்கள் தொடர்ந்து ஒரு சாராரையே விமர்சனம் செய்து வருவதால் அந்த தரப்பினர் இவருடைய கருத்துக்கு எதிராக விமர்சனம் செய்து பதிவிடுவதும் தொடர்கதையாக நடந்து வருகிறது.

சமீபத்தில் பெண்கள் தங்கள் பணிபுரியும் இடங்களில்தங்களுக்கு நேர்ந்த பாலியல் சம்பந்தமான அச்சுறுத்தல் மற்றும் கொடுமைகளை மீடு நிகழ்வின் மூலம் சமூக வலைத்தளங்கள் மற்றும் பொதுவெளியில் வெளியிட்டு வந்தனர். அப்போது பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராக பணியாற்றிய பனிமலர் தான் பணியாற்றிய நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் இருந்தவர் மீது குற்றம் சுமத்தியிருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த குற்றசாட்டானது அப்போதுகடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது மற்றுமொரு குற்றசாட்டை பனிமலர் அவருடைய முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதாவது அவரது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு பல நாட்களாக ஒருவர் தொடர்ந்து நிர்வாண புகைப்படங்களை அனுப்பி வந்துள்ளார் இதனையடுத்து அவரின் பெயரை குறிப்பிடாமல் பொதுவெளியில் அவர் மீது குற்றம் சுமத்தியுள்ளார். முகநூலில் பதிவிட்டுள்ளதில் அவர் கூறியுள்ளதாவது.

ஆண்கள் நிர்வாணப் படம் அனுப்புவதன் உளவியலை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. அதைப் பார்த்து மயங்கி உங்களிடம் பெண்கள் பேசுவார்கள் என நம்புகிறீர்கள் எனில் சாரி பிரதர்ஸ், எங்களுக்கு அருவருப்பைத் தவிர வேறொன்றும் ஏற்படப்போவதில்லை. இயல்பிலேயே ஆண்களின் உடல் பார்த்து மயக்கம் ஏற்படும்படி பெண்கள் உருவாக்கப்படவில்லை என படித்திருக்கிறேன்(விதிவிலக்குகள் இருக்கலாம்). உங்கள் உறுப்பு ஆண்மை இல்லை என்ற தெளிவு எங்களிடம் இருக்கிறது, அதைத்தாண்டி தன்னுடைய செயல்களால் பேராண்மை மிக்க ஆண்கள் பலரை தினமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம், அதில் எல்லோரிடமுமே நாங்கள் காதல் கொள்வதோ, கலவி கொள்வதோ இல்லை, அப்படி இருக்க நீங்கள் லிஸ்டிலேயே இல்லை. ஒழுக்கமும், நற்செயல்களுமே ஒருவரை ஈர்க்கும், அநாகரிகம் ஈர்க்காது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ள நிலையில் சம்பந்தப்பட்ட நபர் யார் என பலரும் அவரிடம் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.இதுவரை பனிமலர் இதை அனுப்பியது யார் என்பது பற்றி எதையும் குறிப்பிடவில்லை என்பதால் அது பெரிய இடமாக இருக்குமோ என்ற சந்தேகமும் எழுகிறது. இந்நிலையில் இது உண்மையா அல்லது விளம்பரத்திற்காக அவரே கிளப்பி விட்டதா என்ற வகையிலும் பலர் இதற்கு பதிலளிக்கும் விதமாக பதிவிட்டு வருகின்றனர்

நான் இருக்கேன் நிம்மதியா இருங்க.! சொன்ன சொல் மாறாத முதல்வர்.!!

0

நான் இருக்கேன் நிம்மதியா இருங்க.! சொன்ன சொல் மாறாத முதல்வர்.!!

தாய்க்கு மருத்துவ உதவி தேவை என்று கூறிய இராணுவ வீரரின் அவசர கோரிக்கையை தமிழக முதல்வர் நிறைவேற்றி அசத்தியுள்ளார்.

நாடு முழுவதும் 2 ம் கட்ட ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து வருகிறது. பொதுமக்கள் வீட்டில் இருந்து அரசுக்கு ஒத்துழைப்பு தருமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் குஜராத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணிபுரிந்து வரும் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இணையத்தின் மூலம் ஒரு கோரிக்கை வைத்திருந்தார்.

அவர் டுவிட்டரில் வைத்த கோரிக்கை பின்வருமாறு; ஐயா நான் மத்திய பாதுகாப்பு படையில் குஜராத் அகமதாபாத்தில் பணியில் உள்ளேன். எனது தாயார் 89 வயதில் வீட்டில் தனியாக உள்ளார். தற்போது அவருக்கு உடல்நிலை சரியில்லை எனக்கு தந்தையும் இல்லை, சகோதரனும் இல்லை ஆகவே எனது தாயாருக்கு மருத்துவ உதவி தேவை என்று கூறியிருந்தார்.

இதற்கு முதல்வர் தரப்பில் உடனடியாக பதில் அளிக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது; தங்கள் தாயாருக்கு தேவையான மருந்துகள் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. மேலும் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் காய்ச்சல், இருமலோ, மூச்சுத்திணறல் உள்ளிட்ட எந்த பிரச்சினைகளும் இல்லை. எனவே தாங்கள் தைரியமாகவும், நிம்மதியாகவும் இருங்கள் என்று முதல்வர் தரப்பில் உடனடி செயல்பாடு மூலம் அசத்தியுள்ளனர். மருத்துவ சிகிச்சை அளித்த நிபுணர்களுடன் சமூக இடைவெளியுடன் மாஸ்க் அணிந்தவாறு புகைப்படத்தையும் அனுப்பி வைத்தனர்.

இதற்கு நன்றியுடன் பதில் அனுப்பிய இராணுவ வீரர், மிக்க நன்றி ஐயா நான் எதிர்பாராத உதவியும் ஆதரவும் அளித்த முதல்வருக்கு நன்றி என்ற வார்த்தை மட்டும் போதாது என் கண்ணீரை காணிக்கை ஆக்குகிறேன் Jaihind என்று தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பையடுத்து பரவும் பன்றி காய்ச்சல்! விஞ்ஞானிகள் அளித்த விளக்கம்

0

கொரோனா பாதிப்பையடுத்து பரவும் பன்றி காய்ச்சல்! விஞ்ஞானிகள் அளித்த விளக்கம்

கோவிட் 19 என்றழைக்கப்படும் கொரோனா வைரஸ் பரவலால் உலக நாடுகள் அனைத்தும் கடும் அச்சத்தில் உள்ளன. இவ்வாறு உலக அளவில் பரவி வரும் இந்த கொரோனா வைரஸால் இதுவரை 25,50,000 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த வைரஸ் பாதிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கையானது 1,60,000 க்கு மேல் உயர்ந்துள்ளது. இதனால் பெரும்பாலான உலக நாடுகள் அனைத்தும் சமூக விலகலை கடைபிடிக்கும் விதமாக ஊரடங்கை அறிவித்துள்ளன. உலகின் பெரும்பாலான நாடுகளும் ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ள நிலையில் எல்லா தொழில்களும் முடங்கியுள்ளன.

இந்நிலையில் இந்தியாவில் இந்த வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையானது 21 ஆயிரத்தை தொட்டுள்ளது. இந்தியாவில் இந்த வைரஸ் பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கையானது 681 ஆக உள்ளது. சிகிச்சையில் குணமடைந்து 4257 நபர்கள் வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் இந்த கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு நாடு முழுவதும் ஏற்கனவே ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி பொது மக்களிடம் சமூக விலகலை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

இதனையடுத்து ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுளதால் அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து மற்ற தொழில்கள் அனைத்தும் முடங்கியுள்ளன. இதில் குறிப்பாக ஆடு, கோழி மற்றும் பன்றி இறைச்சி விற்பனையாளர்கள் மற்றும் விவசாயிகள் அதிகளவில் இந்த ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவில் அதிகளவு பன்றி வளர்ப்பு நடக்கும் மாநிலமான அசாமில், ஜோர்ஹாட், சிப்சாகர், லக்கிம்பூர், தேமாஜி மற்றும் நாகான் ஆகிய மாவட்டங்களில் கிளாசிக்கள் ஸ்வைன் ஃப்ளூ பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு வாரத்துக்குள் மட்டும் 1300 பன்றிகள் உயிரிழந்துள்ளன.

இந்த கிளாசிக்கள் ஸ்வைன் ஃப்ளு பன்றிகளுக்கு மட்டுமே தோன்றும் காய்ச்சல் எனவும் சாதாரண ஸ்வைன் ஃப்ளூ அல்லது எச்1 என்1 போன்ற காய்ச்சல்கள் போல மனிதர்களுக்கு பரவாது என்றும் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.இந்த வைரஸ் காய்ச்சல் ஆண்டுதோறும் இந்த காலங்களில் பன்றிகளைத் தாக்குவது வழக்கமான ஒன்று தான் என்றும் இந்த ஆண்டு இதன் தாக்கம் அதிகமாக இருப்பதால் அதிகளவிலான பன்றிகள் இறப்புகள் ஏற்பட்டுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பன்றி இறைச்சியை உண்பதால் பரவாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா ஒழிப்புக்கான புதிய மந்திரம்! மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

0

கொரோனா ஒழிப்புக்கான புதிய மந்திரம்! மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் அதை தடுப்பதற்காக என்ன செய்ய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட தகவலை ஆதாரமாக கொண்டு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் “கொரோனா ஒழிப்புக்கான உலக சுகாதார நிறுவனத்தின் புதிய மந்திரம்: கேளுங்கள்… மதியுங்கள்!” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

கொரோனா வைரஸ் என்ற கண்ணுக்குத் தெரியாத கொடிய அரக்கன் தமிழ்நாட்டையும், இந்தியாவையும் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகத்தையும் ஆட்டிப் படைத்து வருகிறான். அவனை ஒழித்து, உலகையும், உலக மக்களையும் காப்பதற்காகத் தான் உலக நாடுகளும், அவற்றுடன் இணைந்து உலக சுகாதார நிறுவனமும் பாடுபட்டு வருகின்றன.

நோய்ப்பரவலைத் தடுப்பதற்கான முதன்மைக் கடமை சமூக இடைவெளியை பராமரிப்பது ஆகும். அதற்காகத் தான் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. மத்திய, மாநில அரசுகளும் இதே கருத்தை தான் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், ஒரு மாத ஊரடங்கு நிறைவடைந்துள்ள நிலையில், மக்களிடையே ஒருவிதமான சலிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதன் வெளிப்பாடு தான் மக்கள் வீடுகளை விட்டு, வீதிகளுக்கு வந்து நடமாடத் தொடங்கியுள்ளனர்.

அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் நிலைமை இன்னும் மோசமடைந்துள்ளது. ஊரடங்கு ஆணையை நீக்க வேண்டும்; தங்களை சுதந்திரமாக நடமாட அனுமதிக்க வேண்டும் என்று அந்த நாடுகளில் உள்ள மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்தப் போராட்டங்களை அரசுகள் ஒடுக்கி வருகின்றன.

இந்த புதிய சூழலை உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை செயலாளர் மருத்துவர் டெட்ராஸ் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். அதேநேரத்தில் இது சரியல்ல என்பதையும் விளக்கியுள்ளார். இனி அவரது வார்த்தைகள்…
‘‘கொரோனா ஒழிப்பில் நாம் எதிர்கொண்டு வரும் மிகப்பெரிய அபாயங்களில் ஒன்று கொரோனா பரவலைத் தடுக்க போதுமானவற்றை நாம் செய்து விட்டோம் என்ற தவறான மனநிறைவு காரணமாக மக்களிடையே ஏற்பட்டுள்ள அலட்சிய உணர்வு தான். ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள நாடுகளில், பல வாரங்களாக வீடுகளுக்குள்ளேயே அடைந்து கிடக்கும் மக்களிடையே ஒருவிதமான விரக்தி ஏற்பட்டிருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. தங்களின் வாழ்க்கையும், வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் போது, மக்கள் தங்களின் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பவேண்டும் என்றே விரும்புவர். உலக சுகாதார நிறுவனமும் அதையே விரும்புகிறது. ஆனால், நினைத்தது போன்று நாம் பழைய நிலைக்கு சென்று விட முடியாது. ஆரோக்கியமான, பாதுகாப்பான, எந்த சூழலையும் எதிர்கொள்வதற்கு ஏற்ற உலகத்தை உருவாக்கி விட்டு தான் நாம் பழைய நிலைக்கு செல்ல முடியும். அதற்கு அரசும், மக்களும் நிறைய செய்ய வேண்டும்’’ என்று டெட்ராஸ் கூறியுள்ளார்.
‘‘One of the greatest dangers we face now is complacency. People in countries with stay-at-home orders are understandably frustrated with being confined to their homes for weeks on end. People understandably want to get on with their lives, because their lives and livelihoods are at stake. That’s what WHO wants too. And that’s what we are working for, all day, every day. But the world will not and cannot go back to the way things were. There must be a “new normal” – a world that is healthier, safer and better prepared’’

கொரோனா பரவல் தொடங்கிய காலத்தில் அனைத்து நாட்டு மக்களும் ஊரடங்கி இருந்திருந்தால் கொரோனா இந்த அளவுக்கு பரவியிருக்காது. மாறாக ஊரடங்க மறுத்த மக்கள் சுதந்திரமாக நடமாடவும், வணிகம் செய்து பொருளீட்டவும் தான் விரும்பினர். அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் நிலைமை இந்த அளவுக்கு மோசமடைந்ததற்கு இந்தப் போக்கு தான் காரணமாகும்.
இந்த நிலைமையை மாற்றி, அறிவுப்பூர்வமான அணுகுமுறையை கடைபிடித்தால் மட்டுமே கொரோனாவை ஒழிக்க முடியும் என்றும் உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. அதற்கான புதிய மந்திரத்தையும் அதன் தலைமை இயக்குனர் வெளியிட்டுள்ளார்.

‘‘கொரோனா பாதித்த ஒவ்வொருவரையும் கண்டறிய வேண்டும்; தனிமைப்படுத்த வேண்டும்; சோதனை செய்ய வேண்டும்; அக்கறையுடன் கவனித்துக் கொள்ள வேண்டும்; அவர்களுடன் தொடர்பில் இருந்தோரை கண்டுபிடித்து தனிமைப்படுத்த வேண்டும். இப்பணியில் மக்களை பங்கேற்கச் செய்து, கற்பித்து, அதிகாரமளிக்க வேண்டும். மக்களுக்கு அதிகாரமளிக்காமல், அவர்களின் பங்களிப்பின்றி கொரோனா வைரசுக்கு எதிரான இந்த போர் பயனளிப்பதாக இருக்காது’’ என்பது தான் உலக சுகாதார நிறுவன தலைமை இயக்குனரின் வழிகாட்டுதல் ஆகும்.
‘‘Find every case; Isolate every case; Test every case; Care for every case; Trace and quarantine every contact; And educate, engage and empower your people. The fight cannot be effective without empowering people and without the full participation of our people.’’

எனவே, இனியும் மக்கள் அலட்சியம் காட்டாமல் உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரைகளையும், வழிகாட்டுதல்களையும் மதித்து நடப்போம்; கொரோனாவை விரட்டியடிப்போம் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.