Home Blog Page 5697

கொரோனா எதிரொலி: நீட் தேர்வுகள் ஒத்திவைப்பு! -மத்திய அரசு

0

கொரோனா எதிரொலி: நீட் தேர்வுகள் ஒத்திவைப்பு! -மத்திய அரசு

கொரோன வைரஸ் பாதிப்பினால் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வுகளை ஒத்திவைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் இந்தியாவும் தொடர்ந்து பாதித்து வருகிறுது. இதுவரை இந்தியாவில் மட்டும் 724 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்புகளின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பின் காரமாண தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள காரணத்தால் பாண்டிச்சேரி மற்றும் தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்புவரை ஆல் பாஸ் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மத்திய அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வுகளை கொரோனா பாதிப்பின் காரணமாக அவசரமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வருகின்ற மே 3 ஆம் தேதி நடக்கவிருந்த நீட் தேர்வுகள், நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பதன் காரணமாக பள்ளிகளின் தேர்வுகள் ஒத்திவைத்தது போல் நீர் தேர்வின் தேதிகளும் ஒத்தி வைப்பதாக “மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்” தனது அறிக்கையில் இத்தகவலை வெளியிட்டுள்ளது

கொரோனா தொற்றினால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் கல்வி, வணிகம், வேலை, நிறுவனங்கள், போக்குவரத்து தடை போன்ற அனைத்து தரப்பும் கடுமையான முறையில் பாதித்துள்ளன. நாளுக்கு நாள் கொரோனாவின் அபாயம் அதிகரித்து வரும் நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 21 நாள் தேசிய ஊரடங்கு அதோடு முடியுமா அல்லது கொரோனா பாதிப்பால் மீண்டும் ஊரடங்கு உத்தரவு தொடருமா? என்ற கேள்வியும் சிலரிடம் எழுந்துள்ளது.

10 மாத குழந்தைக்கு கொரோனா தொற்று! கர்நாடகாவில் சிகிச்சை பெற்றுவந்த நபர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 3!

0

10 மாத குழந்தைக்கு கொரோனா தொற்று! கர்நாடகாவில் சிகிச்சை பெற்றுவந்த நபர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 3!

இந்தியா முழுக்க வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் ஒவ்வொரு மாநிலத்திலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் 10 மாத குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கர்நாடகாவின் தும்கூரு மாவட்டத்தில் நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த முதியவர் நேற்று உயிரிழந்தார். தும்கூரு மாவட்ட ஷிரா தாலுக்காவை சேர்ந்த இந்த முதியவர் வேலை காரணமாக அரபு நாடுகளுக்கு சென்றிருந்தார் கடந்த 5ஆம் தேதி ஜம்பர்க் கிராந்தி என்னும் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் டெல்லிக்கு சென்று, அங்குள்ள ஜியாமிய மசூதியில் வழிபாட்டில் கலந்து கொண்டு பின்னர் அவரது சொந்த ஊருக்கு திரும்பினார்.

இதனையடுத்து கடந்த 18 ஆம் தேதி அவருக்கு சளி மற்றும் காய்ச்சல் தொல்லை அதிகம் ஏற்பட்டதால் 19 ஆம் தேதி தும்கூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றுள்ளார். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதன் பின்னர் அவரை தனிமைப்படுத்தி தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். கர்நாடகாவில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

அவருடன் பழகிய நபர்களையும் தனிமையில் தங்கவைத்து கண்காணிக்கப்பட்டு மாதிரி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் நேற்று மட்டும் 9 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதேபோல் தமிழகத்திலும் 3 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. கர்நாடக முதியவரை தொடர்ந்து 10 மாத குழந்தை உட்பட இளம் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முக்கிய அறிவிப்பு: மின் கட்டணம் செலுத்தாவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படாது!

0

முக்கிய அறிவிப்பு: மின் கட்டணம் செலுத்தாவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படாது!

சரியான தேதியில் மின் கட்டணத்தை செலுத்த முடியாமல் போனால் மின் இணைப்பு துண்டிக்கப்படாது என்று தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டது, பின்னர் இந்தியா முழுக்க தேசிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் இந்தியாவின் மாநில எல்லைகள் முடக்கப்பட்டது. தமிழக மாவட்ட எல்லைகளும் முடக்கப்பட்டு யாரும் வெளியே வரவேண்டாம் என்று தீவிர கண்காணிப்பு பணியில் காவல்துறை ஈடுபட்டு வருகிறது.

தரைப் போக்குவரத்து கூட தடை செய்துள்ள காரணத்தால் மின் வாரிய ஊழியர்கள் வீடுகளுக்கு சென்று மின் கணக்கை குறிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மின் கட்டணம் கட்டாத வீடுகளின் மின் இணைப்பை துண்டிக்கப் போவதாக சமூக வலைதளங்களில் போலியான தகவல் பரவியதை அடுத்து, மின் பகிர்மன கழகம் தெளிவான விளக்கம் கொடுத்துள்ளது.

சரியான தேதிக்குள் மின் கட்டணத்தை செலுத்தாமல் இருந்தால், ஏப்ரல் 15 ஆம் தேதி வரை இணையத்தின் மூலம் செலுத்தலாம். மேலும் கட்டணம் செலுத்தாத வீட்டு மின் இணைப்புகள் துண்டிக்கப்படாது என்றும் மின் பகிர்மானக் கழகம் கூறியுள்ளது. தமிழகத்தின் சூழலை புரிந்து மின் பகிர்மான கழகம் வெளியிட்ட தகவல் பலரிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

The mechanics of casinogames at Box 24 Casino Mobile

0

Box 24 Casino is an incredible online casinos that offers a wide assortment of club games. The mechanics of the games are straightforward and straightforward, pursuing it an incredible decision for novices. The club likewise offers various deposit bonus rewards which can assist you with supporting your bankroll. By and large, Box 24 Casino is an extraordinary choice for those searching for tomfoolery and a simple online casino betting experience. See more at our lucky days casino review.

Gaming on mobile devices at Box 24 Casino Mobile

There’s no question that versatile gaming is on the ascent – and Box 24 Casino is at the front of this pattern. Our portable club box24 casino login australia offers a large number of live casino games, including spaces, blackjack, and roulette, from there, the sky is the limit. What’s more, with our state-of-the-art innovation, you can partake in a really vivid gaming experience on your cell phone or tablet.

So why not check portable gaming out today? With Box 24 Casino, you can partake in the entirety of your number one gambling club lucky days casino games on the go.

When it comes to playing gambling club slot games on the web, there are a couple of things you want to be aware of to capitalize on your experience. Above all else, it’s critical to comprehend the mechanics of how online club games work. The various club will offer various minor departures from similar essential games, so it’s critical to get to know the standards and interactivity of each game before you start playing.

Box 24 Live Casino is an incredible spot to begin your online casino club gaming venture. We offer a wide assortment of gambling club games from Evolution Gaming, including spaces, blackjack, roulette, and baccarat, and the sky is the limit from there. Besides, our simple to-utilize stage simplifies it to get started.

An app’s security

Box 24 Casino views player casino account security extremely in a serious way. The online gaming operations involves the most recent encryption innovation to guarantee that all private and monetary data remains careful and secure. Likewise, Box 24 Casino utilizes a severe enemy of extortion strategy to safeguard its players from any expected dangers. Big chances to shine Casino is focused on giving a no problem at all gaming climate for all its players.

Banks are offering customer support games

This is extraordinary information! It’s in every case great to see banks offering client care games, as it shows they’re focused on offering the most ideal support to their clients. I’m certain the games will be an extraordinary way for clients to reach out to bank staff and study what the bank needs to offer.

  • Banks are offering client service games that can be utilized to contact the casino.
  • Box 24 Casino offers an extensive variety of banking choices, including Visas, e-wallets, and more.
  • The club likewise offers a live visit administration that can be utilized to reach out to a client care representative.
  • Players can likewise utilize the online gambling club’s email support administration to reach out to the client care team

Promising Offers

Thank you for considering Box 24 Casino for your betting requirements. We value your advantage and might want to tell you that we generally have special offers accessible to our individuals. At this moment, we are offering a Welcome Bonus of up to $1,000 for all new members.

See this: https://www.thesun.co.uk/tech/17370169/decentraland-how-to-make-money-crypto/amp/

இந்தியாவிற்கு எதிராக செயல்பட்ட இளைஞர்! கொரோனா வைரஸை பரப்புவோம் வாருங்கள் அதிர்ச்சியை கிளப்பிய சம்பவம்!

0

இந்தியாவிற்கு எதிராக செயல்பட்ட இளைஞர்! கொரோனா வைரஸை பரப்புவோம் வாருங்கள் அதிர்ச்சியை கிளப்பிய சம்பவம்!

உலகமே கொரோனா பீதியில் பயந்துபோன ஆபத்தான சூழலில், கொரோனாவை பரப்புவோம் வாருங்கள் என்று முகநூலில் முஜீப் முகம்மது என்ற நபர் பதிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தினமும் அதிகரித்து வரும் நிலையில், பேஸ்புக்கில் “நாம் அனைவரும் சேர்ந்து வைரஸை பரப்புவோம் வாருங்கள்” என்று முஜீம் முகம்மது என்ற ஐடியில் இளைஞர் ஒருவர் பதிவிட்டது பலரிடம் எதிர்ப்பை உண்டாக்கியுள்ளது. வேண்டுமென்றே இப்படி செய்தாரா அல்லது பொய்யான ஐடியா என்று பலர் சோதனை செய்து உண்மையை வெளியிட்டனர்.

முகநூல் ஐடியை இணையதளவாசிகள் கண்டுபிடித்து வெளியிட்டனர். பெங்களூரில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் வேலை செய்யும் முஜீப் முகம்மது என்பவர்தான் இதை பதிவு செய்துள்ளார் என்பது தெரியவந்தது.
இதையடுத்து இவரது பதிவை பார்த்து அதிர்ச்சியடைந்த சமூக ஆர்வலர்கள் பலர் தங்களது கண்டனத்தை சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகின்றனர்.

https://twitter.com/Troll_Maafia/status/1243516880544989190?s=20

இந்நிலையில் தவறான தகவலை பரப்பிய ஐடியை சிலர் டுவிட்டர் மற்றும் முகநூலில் வெட்டவெளிச்சமாக்கி எதிர்ப்பையும், அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுப்பி வருகின்றனர். தகவலை அறிந்த இன்போசிஸ் நிறுவனம், நடந்த சம்பவம் உண்மையெனில் அந்த நபர் மீது நடவடிக்கை எடுப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தின் மூலம் உறுதியளித்துள்ளது.

கொரோனாவால் சீனா, அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் பெரும் உயிரிழப்பை சந்தித்து வருகின்றன. இதனைத் தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கொரோனாவை பரப்பலாம் வாருங்கள் என்று கூறிய நபரின் பேச்சு பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டன் பிரதமரையும் விட்டு வைக்காத கொரோனா! ஆய்வில் பாதிப்பு உறுதி

0

பிரிட்டன் பிரதமரையும் விட்டு வைக்காத கொரோனா! ஆய்வில் பாதிப்பு உறுதி

உலகம் முழுவதும் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. அந்தவகையில் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளும் இறப்புகளை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் கொரோனா பாதிப்பால் பிரிட்டனில் மட்டும் இதுவரை 578 நபர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 11,816 நபர்கள் கோரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 11 ஆம் தேதி, பிரிட்டன் சுகாதாரத்துறை துணை அமைச்சரும், கன்சர்வேடிவ் கட்சி எம்.பியுமான நடீன் டோரீஸ் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருந்தது உறுதி செய்யப்பட்டது. அவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள இந்த தகவலை நடீன் டோரீஸே உறுதிப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து பிரிட்டன் இளவரசர் சார்லஸ் அவர்களும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட இந்த இருவருமே பிரதமர் போரிஸ் ஜான்சனை சந்தித்தாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரிட்டன் பிரதமருக்கு இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அலுவலரின் ஆலோசனைக்கு ஏற்ப கொரோனா பாதிப்பு உள்ளதா என கண்டறிய பரிசோதனை செய்யப்பட்டது என்று பிரிட்டன் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.

இதனையடுத்து இன்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், கடந்த 24 மணி நேரமாக கொரோனா தொடர்பான லேசான அறிகுறிகள் தென்பட்டன. இந்நிலையில் தற்போது அது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அதனால் என்னை நானே தனிமைப்படுத்திக் கொள்வேன். நாம் இந்த வைரஸை எதிர்த்துப் போராட வேண்டும். மேலும் காணொளி காட்சி சந்திப்பின் மூலம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தலைமை ஏற்பேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பால் பல்வேறு நாடுகளில் வாழும் பெரும்பாலான பொது மக்கள் பாதிக்கபட்டு வரும் சூழ்நிலையில் தற்போது உலக நாடு ஒன்றின் பிரதமர் ஒருவரே கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது பொது மக்களிடம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞரின் அவசர முடிவால் ஆயுள் முடிந்தது! பரிசோதனையில் கொரோனா இல்லை என்பது உறுதி! நடந்தது என்ன.??

0

இளைஞரின் அவசர முடிவால் ஆயுள் முடிந்தது! பரிசோதனையில் கொரோனா இல்லை என்பது உறுதி! நடந்தது என்ன.??

கொரோனா பயத்தில் தான் இறந்துவிடுவோம் என்று நினைத்து தற்கொலை செய்துகொண்ட நபருக்கு, கொரோனா இல்லை என்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாலாசூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சில தினங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இருந்து ஏர் இந்தியா விமானத்தின் மூலம் டெல்லிக்கு வந்தார். அப்போது டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் எல்லோருக்கும் சோதனை செய்வது போல அந்த இளைஞருக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

மருத்துவ பரிசோதனையில் இளைஞருக்கு கொரோனா அறிகுறி இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு பரிசோதனைக்கான மாதிரிகள் எடுக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தனக்கு கொரோனா இருப்பதை நினைத்து மன உளைச்சலாகி இறந்து விடுவோம் என்று பயந்து போன இளைஞர், மருத்துவமனையின் 7 வது மாடிக்குச் சென்று தற்கொலை செய்துகொண்டார்.

இந்த தற்கொலை சம்பவத்திற்கு அதிகாரிகளே காரணம் என்று இளைஞரின் குடும்பத்தினர் ஆதங்கத்துடன் கூறினர். இதனையடுத்து அவரது உடலில் மருத்துவ பரிசோதனை செய்ததில் கொரோனா இல்லை என்று உறுதியானது. இளைஞரின் அவசர முடிவால் அவரது ஆயுளே முடிந்துபோன சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க கிராமத்து பெண் செய்த துணிச்சலான காரியம் : பாராட்டுக்களை அள்ளும் வைரல் வீடியோ!

0

உலகமே கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தங்கள் நாட்டு மக்களை பாதுகாக்க தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த பாரத பிரதமர் மோடி யாரும் வெளியில் வரவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொண்டார்.

இதனையடுத்து மாநில அரசுகள் துப்புரவு பணியாளர்களை வைத்து ஊரெங்கும் கிருமி நாசினி தெளித்து வந்தது. இதைப் பார்த்த பொதுமக்கள் அவரவர் வீடுகளை சுத்தம் செய்து மஞ்சள் தெளித்து பசும் சாணத்தால் பூசி மெழுகி பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா பகுதியை சேர்ந்த தெவ்ரியா கிராமத்தின் பஞ்சாயத்து தலைவரான கிஸ்மத் என்ற பெண் தானே களத்தில் இறங்கி துப்புரவு வேலைகளை செய்து வருகிறார். அவர் தனது கிராம மக்களுக்கு கையுறைகளையும் முககவசங்களையும் வழங்கி கொரோனாவில் இருந்து பாதுகாக்க விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்.

கொரோனா பரவலை தடுக்க கிராமத்து பெண் செய்த துணிச்சலான காரியம் : பாராட்டுக்களை அள்ளும் வைரல் வீடியோ!

அந்த பெண்மணி தன் ஊரெங்கும் கிருமிநாசினியை ஸ்பிரேயர் மூலம் தெளித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார். மேலும் ஸ்ரீராமருக்கு அணில் உதவியது போல தானும் அரசாங்கத்திற்கு உதவி செய்வதாக அதில் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்ட அந்த வீடியோ வைரலாக பரவி அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

கொரோனா தடுப்பு: 100 கோடி நிதியுதவி வழங்கிய பஜாஜ் நிறுவனம்..!!

0

கொரோனா தடுப்பு: 100 கோடி நிதியுதவி வழங்கிய பஜாஜ் நிறுவனம்..!!

இந்தியாவில் பரவி வரும் கொரோனாவை தடுக்க பல்வேறு தரப்பில் இருந்து நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிரபல மோட்டார் நிறுவனமான பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தற்போது கொரோனா மருத்துவ சிகிச்சைக்காக ரூ.100 கோடி வழங்கியுள்ளது.

சைனாவின் வூகான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் முன்னேறிய நாடுகளான அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஸ்பெயின், வடகொரியா, சுவிட்சர்லாந்து, இத்தாலி போன்ற நாடுகளிலும் வளர்ந்து வரும் நாடுகளான இந்தியா, பாக்கிஸ்தான் போன்ற நாடுகளிலும் தீவிரமாக பரவி வருகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்த உலகநாடுகளே திணறிவரும் வேளையில் இந்திய அரசு வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, தீவிர மருத்துவ சிகிச்சை, வெளி நாட்டில் இருந்து பயணிகளை தொடர்ந்து சிகிச்சை கண்காணிப்புக்கு உள்ளாக்குவது மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
கொரோனா தொற்று இருப்பதாக அறிகுறி இருப்பவர்களை உடனடியாக தனிமைப்படுத்தி அவசர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உலக நாடுகள் இந்த வைரஸ் பாதிப்பினால் அதிகபட்சமாக 24,000 உயிரிழிப்புகளை சந்தித்துள்ளது. குறிப்பாக இத்தாலி நாட்டில் அதிகபட்சமாக 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இந்தியாவில் மதுரையைச் சேர்ந்த ஒருவர் உட்பட 9 பேர் இறந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மிக வேகமாக பரவும் சூழல் இருப்பதால் காவல் துறையினர் மாவட்ட எல்லைகளையும் கிராம பகுதிகளையும் தீவிரமாக கட்டுக்குள் வைக்க முயன்று வருகின்றனர். ஊரடங்கு உத்தரவை மக்கள் புரிந்து ஒத்துழைப்பு தர வேண்டும் என்பது பலரின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

இந்நிலையில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை தனிமைப்படுத்தும் மருத்துவ அறைகளை தயார் செய்வதற்கும், மருத்துவ சிகிச்சைக்கு தேவையான அவசிய உபகரணங்களான உயிரை காக்கும் வென்டிலேட்டர்கள் மற்றும் சோதனை கருவிகளை வாங்குவதற்கும் 100 கோடி நிதி அளிக்கப்படுகிறது. அரசு மருத்துமனைகளிலும் மற்றும் அரசின் அனுமதியுடன் இயங்கும் தனியார் மருத்துவமனைகளின் தேவைக்கு இந்த நிதி உதவும் என்று நம்புவதாக பஜாஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பஜாஜ் நிறுவனத்தின் கொரோனா பாதுகாப்பு சேவைகள் சில:

  • புனே நகரத்தில் கொரோனாவால் பாதித்த நோயாளர்களை சிகிச்சை அளிக்க சுகாதார கட்டமைப்புகளை பஜாஜ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. மேலும் இதற்கான பணிகள் மேம்படுத்தி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
  • கொரோனாவுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வரும் போரில் 200 க்கும் மேற்பட்ட தனியார் தொண்டு நிறுவனத்துடன் பஜாஜ் நிறுவனம் இணைந்து பணியாற்ற உள்ளது.
  • நிதி உதவி மட்டுமல்லாமல் ஊரடங்கு உத்தரவால் உணவு இல்லாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் திட்டங்களை வகுத்து வருகிறது.
  • இந்த சேவையை கிராம் மற்றும் நகரப் பகுதிகளிலும் மேற்கொள்ளப் போவதாக பஜாஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

குட்டியூண்டு டிரஸ் போட்டு வீட்டுக்குள்ளே கிரிக்கெட் விளையாடும் கத்ரீனா கைஃப் : கொரோனா பீதியில் இந்த குளுகுளு வீடியோவை பார்த்து ரிலாக்ஸ் ஆகுங்க!

0

உலகமே கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தங்கள் நாட்டு மக்களை பாதுகாக்க தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த பாரத பிரதமர் மோடி யாரும் வெளியில் வரவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொண்டார்.

இந்த அறிவிப்பால் அரசியல் தலைவர்கள் தொழிலதிபர்கள் சினிமா நட்சத்திரங்கள் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. மேலும் பொது மக்களும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதை தவிர்த்து வேறு எந்த காரணத்திற்காகவும் வெளியில் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது போன்ற சூழலில் பிரபலங்கள் வீட்டில் இருந்தாலும் ஒவ்வொரு நாளும் தாங்கள் செய்யும் வேலைகளை வீடியோ அல்லது புகைப்படமாக எடுத்து சமூக வலை தளங்களில் பதிவேற்றி வருகின்றனர். வீட்டிலேயே முடங்கி கிடக்கும் அவர்களது ரசிகர்கள் இதனை பார்த்து கருத்துக்களை பதிவு செய்து பொழுது போக்குகின்றனர்.

பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் வெளியில் செல்ல முடியாமல் இருக்கும் ஒவ்வொரு நாளும் தான் செய்யும் வீட்டு வேலைகளை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார். அவர் ஃபிட்னஸ் ட்ரெயினிங் எடுப்பது, கிட்டார் வாசிப்பது, பாத்திரங்களை கழுவுவது என தினமும் ஒன்றை வீடியோ எடுத்து பதிவேற்றயுள்ளார்.

இந்த நிலையில் கத்ரீனா நேற்று வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் வீட்டை துடைப்பத்தால் கூட்டுவதை அவரது கமெண்ட் செய்து கொண்டே வீடியோ எடுக்கிறார். அந்த வீடியோவில் சின்ன ஷார்ட்ஸ் மற்றும் டாப்ஸ் அணிந்து கொண்டு துள்ளி குதித்து துடைப்பத்தை வைத்து கிரிக்கெட் ஆடுகிறார்.

இந்த குளுகுளு காட்சியை பார்த்த ரசிகர்கள் குதூகலமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/B-KHTu_hu9Y/?utm_source=ig_web_copy_link