Home Blog Page 5708

பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்த காதல் ஜோடி; வாழ முடியாமல் ரயில் தண்டவாளத்தில் தலைவைத்த கோர சம்பவம்!

0

பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்த காதல் ஜோடி; வாழ முடியாமல் ரயில் தண்டவாளத்தில் தலைவைத்த கோர சம்பவம்!

பெற்றோரை எதிர்த்து வீட்டைவிட்டு ஓடி காதல் திருமணம் செய்த தம்பதிகள் தண்டவாளத்தில் தற்கொலை செய்துகொண்ட கோர சம்பவம் அரங்கேறியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே உள்ள பூங்குளம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த உமாபதி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது மகளான நந்தினி குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த ராமதாஸ் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இரும்பு பட்டறையில் வேலை செய்துவந்த ராமதாசு நந்தினியின் காதலுக்கு இருதரப்பு பெற்றோலும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, பெற்றோர்களை எதிர்த்து வீட்டைவிட்டு வெளியேறிய காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் நேற்று இரவு ஆம்பூர் அருகேயுள்ள பச்சகுப்பம் பகுதியின் தார்வழி தண்டவாளத்திற்கு சென்றனர். அங்கு தண்டவாளத்தில் இருவரும் படுத்து கடைசியாக செல்பி எடுத்துவிட்டு, தற்கொலை செய்து கொள்வதற்காக ரயில் வரும்வரை அங்கேயை படுத்திருந்தனர்.

இந்நிலையில், சென்னையில் இருந்து பெங்களூரு சென்ற ரயில் இருவர் மீதும் ஏறியதில் உடல் துண்டாகிய நிலையில் காதல் ஜோடி இறந்தனர். மறுநாள் காலை ரயில் தண்டவாளத்தின் அருகே இருந்த பிணத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தண்டவாளத்தின் அருகே இருந்த செல்போனில் காதல் ஜோடி இறப்பதற்கு முன்பு தண்டவாளத்தில் படுத்துக்கொண்டே எடுத்த செல்பி புகைப்படமும் அதில் பதிவாகி இருந்தது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோர் சொல் கேட்டிருந்தால் இப்படி நடந்திருக்குமா என்று அங்கு கூடிய பொதுமக்கள் கருத்து கூறியதாக சொல்லப்படுகிறது.

கொரோனாவை ஒழிப்போம் மக்களை காப்போம்: தொண்டர்களுக்கு அறைகூவல் விடுத்த விஜயகாந்த்!

0

22.03.2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு கொரோனாவை ஒழிப்போம் மக்களை காப்போம் என்று கோஷம் எழுப்புவதன் மூலமாக நம் விழிப்புணர்வை தேசத்திற்கு தெரியபடுத்த வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

பாரத பிரதமர் மாண்புமிகு நரேந்திரமோடி அவர்கள் நேற்று (19.03.2020) தொலைக்காட்சியின் மூலமாக இந்திய மக்கள் அனைவருக்கும் கொரோனா விழிப்புணர்வுக்காக 22ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் விழிப்புணர்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக நாம் வரவேற்கிறோம். மக்கள் விழிப்புணர்வு பெற்று கொரோனா கொடிய நோயால் யாரும் பாதிப்படையாமல், முன்னெச்செரிக்கையோடு இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் அனைத்து முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளுக்கும் மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

கொரோனாவை ஒழிப்போம் மக்களை காப்போம்: தொண்டர்களுக்கு அறைகூவல் விடுத்த விஜயகாந்த்!

22.03.2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு தங்களுடைய வீட்டு வாசலில் கைதட்டி மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்கவேண்டும் என்று பாரத பிரதமர் கூறியுள்ளார். அதை தேமுதிக சார்பாக நாம் கடைபிடிக்கும் விதமாக அவரவர்கள் வீட்டு வாசலில் நின்று கை தட்டியும், டாக்டர்களுக்கு மனமார்ந்த நன்றியையும் தெரிவித்து, கொரோனாவை ஒழிப்போம், மக்களை காப்போம் என்று கோஷம் எழுப்புவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அடிக்கிற வெயிலுக்கு ஆடை எதற்கு.? தனது ஜில் ஜில் புகைப்படத்தை இணையத்தில் வெளியிடப்பட்ட ஸ்ரீரெட்டி.!! (படம் உள்ளே)

0

அடிக்கிற வெயிலுக்கு ஆடை எதற்கு.? தனது ஜில் ஜில் புகைப்படத்தை இணையத்தில் வெளியிடப்பட்ட ஸ்ரீரெட்டி.!! (படம் உள்ளே)

சினிமா துறையில் பிரபலம் ஆனதை விட பாலியல் புகாரின் மூலம் மிகவும் பிரபலம் ஆனவர் நடிகை ஸ்ரீரெட்டி.

ஆந்திர சினிமாவில் பல்வேறு இயக்குனர் மற்றும் நடிகர்கள் மீது அடிக்கடி பாலியல் புகாரை கூறியதால் தெலுங்கு சினிமா இயக்குனர்கள் இவரை ஓரம்கட்டினர். கோலிவுட், டோலிவுட் என்று எந்த வகையிலும் இவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போனது.

தமிழ் சினிமா நடிகர் ராகவா லாரன்ஸ் மீது வைத்த பாலியல் புகார் இணையத்தில் பெரும் சர்ச்சையாக பேசப்பட்டது. இதனையடுத்து தமிழக அரசியல் கட்சி நபர் ஒருவருடன் டிக்டாக் வீடியோவில் அருகில் நெருக்கமாக இருந்த சர்ச்சையும் பேசப்பட்டது. பின்னர், நேரடியான பேட்டி ஒன்றில் நடிகர் விஷாலை பற்றி ஒருவிதமாக அனகோண்டா என்று இரட்டை அர்த்தத்தில் சிரித்து பேசினார்.

ஒரு கட்டத்தில் பாலியல் புகார் தொடர்பாக நடு ரோட்டில் அரை நிர்வாணமாக அமர்ந்து போராட்டம் செய்தார் அதுவும் இணையத்தில் சர்ச்சையை கிளப்பியது. தற்போது தனது சமூக வலைதளத்தில் தன்னைடைய மார்பகத்தை பற்றிய விளக்கத்துடன் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

அடிக்கிற வெயிலுக்கு ஆடை எதற்கு.? தனது ஜில் ஜில் புகைப்படத்தை இணையத்தில் வெளியிடப்பட்ட ஸ்ரீரெட்டி.!! (படம் உள்ளே)

அதில், தன்னுடைய மார்பகம் செயற்கையாக உருவாக்கப்பட்டதல்ல என்றும் இயற்கையாக மெருகேற்றியது என்றும் விளக்கம் அளித்துள்ளார். அடிக்கிற கோடை வெயலில் ரசிகர்களை சூடேற்றுவது போல் படத்தை வெளியிட்ட ஸ்ரீரெட்டியை, இவருக்கு வேறு வேலையே கிடையாதா என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

110 விதியின் கீழ் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்: கடலூருக்கு அடித்த அதிர்ஷ்டம்!

0

கடலூர்; அன்னன்கோயில், புதுக்குப்பம் மற்றும் முடசலோடை உள்ளிட்ட கிராமங்களில் ரூ. 19.5 கோடியில் புதிய திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார்.

இன்று சட்டப்பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்துள்ளார் அவை பின் வருமாறு:-

கடலூர் மாவட்ட மீனவ கிராமங்களான அன்னன்கோயில், புதுக்குப்பம் கிராமங்களில் உள்ள மீன் இறங்குதளங்கள் ரூ.10 கோடியில் புனரமைக்கப்படும் என்றும் முடசலோடை கிராமத்தில் மீன் இறங்குதளம் கூடுதல் படகுகள் நிறுத்துவதற்கு ஏதுவாக ரூ. 9.50 கோடியில் விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

பழவேற்காடு ஏரியின் முகத்துவாரம் இயற்கை காரணங்களால் மூடாதவாறு இருக்க ரூ. 27 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

தூத்துக்குடி மாவட்ட மீன்பிடி துறைமுகத்தின் படகு அணையும் தளத்தை ரூ.25 கோடியில் விரிவுபடுத்தி கூடுதல் படகுகள் நிறுத்த வசதி ஏற்படுத்தப்படும்.

ராமநாதபுரம் – மண்டபம் வடக்கு மற்றும் தெற்கு) கிராமங்களில் ரூ.20 கோடியில் மீன் இறங்கு தளங்கள் அமைக்கப்படும்.

காஞ்சிபுரம் – புது குப்பம், உய்யாலி குப்பம் கிராமங்களில் ரூ.17 கோடியில் மீன் இறங்குதளம் அமைக்கப்படும்.

தமிழக மீனவர் நலன்களுக்காக இந்த திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மேலும் பல்வேறு பகுதிகளுக்கும் தொலைநோக்கு பார்வையிலான திட்டங்களை அறிவித்து எதிர்கட்சிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

நள்ளிரவில் கோயிலில் புகுந்த திருடனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!வேலூர் அருகே நடந்த பரபரப்பு சம்பவம்.!!

0

நள்ளிரவில் கோயிலில் புகுந்த திருடனுக்கு காத்திருந்த அதிர்ச்சி! வேலூர் அருகே நடந்த பரபரப்பு சம்பவம்.!!

நள்ளிரவில் கோயிலில் புகுந்து சாமி சிலைகளை மர்ம நபர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகேயுள்ள சேங்குன்றம் கிராமத்தில் நூறு ஆண்டுகள் பழமையான காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஐம்பொன் மற்றும் கருங்கல்லால் வடிவமைக்கப்பட்ட சாமி சிலைகளிக்கு பூஜை வழிபாடுகள் அப்பகுதி மக்களால் செய்யப்பட்டு வருகிறது.

இந்த கோயில் திருவிழா கடந்த வாரம் சிறப்பாக நடைபெற்ற நிலையில், நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் கோயிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்துள்ளனர். அதில் பணம் இல்லாத காரணத்தால் ஏமாற்றத்தில் ஆத்திரமடைந்து மூலவர் மற்றும் உற்சவர் சிலையை கீழே தள்ளி சேதப்படுத்தியுள்ளனர். அருகிலிருந்த சூலத்தை பிடுங்கி எறிந்ததோடு சாமி சிலைகளை கீழே தள்ளி சூரையாடிவிட்டு தப்பித்துள்ளனர்.

இந்நிலையில் காலைப் பொழுது விடிந்தவுடன் கோயிலைப் பார்த்த அப்பகுதி மக்கள் பெருத்த அதிர்ச்சியுடன் குடியாத்தம் போலீசாருக்கு இச்சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு புகார் தெரிவித்தனர். புகாரின் அடிப்படையில் சாமி சிலைகளை திட்டமிட்டு சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திடீரென கோயில் சிலைகளை சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

கரோனாவை எதிர்க்க கேரள அரசு எடுத்த அதிரடி முடிவு! தனித்துவமாக செயல்படும் பினராயி விஜயன்.?

0

கரோனாவை எதிர்க்க கேரள அரசு எடுத்த அதிரடி முடிவு! தனித்துவமாக செயல்படும் பினராயி விஜயன்.?

கரோனோ வைரஸை எதிர்கொள்ள ரூ.20,000 கோடி நிதியை ஒதுக்குவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் அதிரடியாக கூறியுள்ளார்.

சீனாவின் வூகான் நகரில் உருவான கரோனா வைரஸ் உலகத்தின் பல்வேறு நாடுகளுக்கு பரவி 7000 மேற்பட்டோரை பலிவாங்கியுள்ளது. இதனால் பாதுகாப்பு நடவடிக்கையை அந்தந்த நாட்டு அரசுகள் தங்களது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் கட்டாய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் வேகமாக பரவி வரும் கரோனா வைரஸ் தொற்றுக் கிருமிக்கு இதுவரை மூவர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் மட்டும் இதுவரை 200 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளது மட்டும் அல்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழகம் போன்ற தென் மாநிலங்களில் கரோனா தொற்று அறிகுறி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பிரதமர் நரேந்திரமோடி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர் நடிகைகள் விழிப்புணர்வு மற்றும் கரோனாவில் தன்னை பாதுகாத்துக் கொள்ளும் நடவடிக்கைகளை பேசியும், வீடியோவாக வெளியிட்டும் வருகின்றனர்.

கரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க கேரள முதல்வர் பினராயி விஜயன் 20,000 கோடியை அறிவித்துள்ளார். இதன்மூலம் குடும்பஸ்ரீ திட்டத்தின் கீழ் வரும் குடும்பங்களுக்கு ரூ.2000 கோடிக்கு கடன் வழங்குவதோடு, கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்திற்கு ரூ.2000 கோடி ஒதுக்கப்படுகிறது. முதியோர்களுக்கு முன்கூட்டியே இரண்டு மாத ஓய்வூதிய தொகை அவர்களது வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படும். இந்த திட்டத்திற்காக ரூ.1320 கோடி ஒதுக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை குடும்பங்களுக்கு ரூ.1000 வழங்கப்படும். பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் அரசு சார்பில் உணவகங்கள் திறக்கப்பட்டு மாநிலம் ரூ.20 க்கு உணவு வழங்கப்படும். இதற்காக 50 கோடி ரூபாய் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறைக்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மின்சாரம், தண்ணீர் கட்டணம் செலுத்த ஒருமாத கால அவகாசம் வழங்குவதாகவும், ரேசன் பொருட்கள் ஒரு மாதம் இலவசமாக வழங்கப்படும் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

விரட்டிய கொரோனா; அரைகுறை ஆடையுடன் மொட்டை மாடிக்கு ஓட்டம் பிடித்த கத்ரீனா : வெளியான வீடியோவை பார்த்து வாய் பிளந்த நெட்டிசன்கள்!

0

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவிவருகிறது. இதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களை மூட வலியுறுத்தி உள்ளது.

இந்த அறிவிப்பால் சினிமா சூட்டிங்களும் நிறுத்தப்பட்டு சினிமா நட்சத்திரங்கள் வீட்டிலேயே முடக்கும் நிலை ஏற்பட்டது. தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டிய நடிகர்கள் ஜிம்முக்கு செல்ல முடியாத சூழலில் உள்ளனர்.

இதுபோல் வெளியில் செல்ல முடியாத நிலையில் தங்களது உடலழகை எப்படி பராமரிப்பது என்று பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தனது பிட்னஸ் டிரெய்னருடன் கவர்ச்சியான உடையில் உடற்பயிற்சி செய்யும் காட்சிகள் உள்ளது.

இதனை பார்த்த பாலிவுட் நட்சத்திரங்கள் தாங்களும் அவ்வாறு செய்யப்போவதாக கருத்து கூறியுள்ளனர். இதைப் பார்த்த நெட்டிசன்கள் கத்ரீனாவின் அழகை புகழ்ந்துள்ளனர்.

https://www.instagram.com/p/B9zMwQJBoz_/?utm_source=ig_web_copy_link

டிரென்ட் ஆகும் படையப்பா நீலாம்பரி கொரோனோவில் இருந்து தப்பிக்க வழி இதுதான்

0

டிரென்ட் ஆகும் படையப்பா நீலாம்பரி கொரோனோவில் இருந்து தப்பிக்க வழி இதுதான்

இன்றைக்கு உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ள பெயர் கொரோனா. இந்த வைரஸ் தொற்றுக்கான மருந்து கண்டுபிடிக்காத நிலையில் இதிலிருந்து தப்பிக்க ஒரே வழியாக உலகம் முழுவதும் கூறப்படுவது மக்களை தனிமைப்படுத்தி நோய் பரவுவதை தடுப்பது மட்டுமே.

இதனை அடுத்து இந்தியாவிலும் பல்வேறு கட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டு வருதிறது.நேற்று இரவு இந்திய மக்களிடையே உறையாற்றிய இந்திய பிரதமர் மோடி அவர்களுள் மக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
மேலும் வரும் ஞாயிறுக் கிழமை அன்று மக்கள் தாங்களாகவே ஊரடங்கை ஒரு பரீட்சார்த்த முறையில் கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை தற்போது மீம் கிரியேட்டர்கள் கையில் எடுத்துள்ளனர். அவர்களுக்கு தனிமை என்றவுடன் நினைவுக்கு வந்தது படையப்பா பட நீலாம்பரி கதாப்பாத்திரம். படையப்பா படத்தில் நீலாம்பரி கதாப்பாத்திரத்தில் நடித்த ரம்யாகிருஷ்ணன் அவர்கள் ரஜினியை காதலித்து இருப்பார். ஆனால் ரஜினி அவரை விரும்பாத காரணத்தால் அவர் தன்னை பல ஆண்டுகள் தனிமைப்படுத்திக் கொண்டு வாழ்வார்.

அதைப் போலவே நாமும் நம்மை தனிமைப்படுத்திக் கொண்டு வாழ்ந்தால் கொரோனோ தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என மீம்ஸ் போட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

திருமாவளவனை வறுத்தெடுத்த நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பரபரப்பு விவாதம்

0

திருமாவளவனை வறுத்தெடுத்த நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பரபரப்பு விவாதம்

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து விதி 370 ஆனது நீக்கப்பட்டு இந்தியா முழுவது ஒரே மாதிரியான சட்டம் கொண்டுவரப்பட்டு சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த தினமான அக்டோபர் 30 ஆம் நாள் நிறைவேற்றப்பட்டது. இதனை காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்த்த நிலையில் அனைத்தையும் சமாளித்து பாஜக அரசு இந்த சட்டத்தை கொண்டுவந்துள்ளது‌.

இந்த பிரச்சனையை பாக்கிஸ்தான் தீவகரமாக கையிலெடுத்து ஐநா சபை வரை கொண்டு சென்றது ஆனாலும் இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என அனைவரையும் சமாதானப் படுத்தியது இந்தியா.

இந்த பிரச்சனையை இன்று வரை தொடர்ந்து பேசிவருபவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் அவர்கள். அவர் நேற்று நாடாளுமன்றத்தில் இந்த பிரச்சனை பற்றி பேசினார். இதனால் மிகுந்த கொபம் கொண்ட மத்திய பொருளாதாரத் துறை அமைச்சர் நிர்மலாசீதாராமன் அவைத்தலைவரிடம் நான் சிறிது நேரம் தமிழில் பேச வாய்ப்பளியுங்கள் என கோரினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அவர் திருமாவளவன் அவர்களே இந்த சட்டம் நடைமுறைக்கு வரும் வரை ஜம்மு காஷ்மீரில் பெண்களுக்கு உரிமை வழங்கப்படாததை குறித்து இதுநாள் வரை நீங்கள் பேசாதது ஏன்? இன்றைக்கு தலித்துக்களின் உரிமை பற்றி பேசும் உங்களுக்கு ஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டத்தை டாக்டர் அம்பேத்கர் எழுதமறுத்தார் என்பது உங்களுக்கு தெரியாதா? என மிகவும் காட்டமான வார்த்தைகளில் பதிலளித்தார்.

ஒரே நாளில் கோடீஸ்வரன்.! 7 வயது சிறுவனுக்கு அடித்த 7 கோடி ஜாக்பாட்..!! இதுதான் காரணமாம்?

0

ஒரே நாளில் கோடீஸ்வரன்.! 7 வயது சிறுவனுக்கு அடித்த 7 கோடி ஜாக்பாட்..!! இதுதான் காரணமாம்?

இந்திய குடும்பத்தைச் சேர்ந்த சிறுவனுக்கு துபாய் லாட்டரி சீட்டில் ஒரு மில்லியன் டாலர் ஜாக்பாட் அடித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட கனகராஜ் என்பவர் கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்துடன் துபாயில் அஜ்மன் என்ற பகுதியில் குடிபெயர்ந்து அங்கு தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி இந்தியாவுக்கு தனது குடும்பத்துடன் வரும்பொழுது, துபாய் டியூடி பஃரி ரபேல் என்ற பிரபலமான லாட்டரி டிக்கெட் ஒன்றை தன் 7 வயது மகனுக்காக வாங்கி கொடுத்துள்ளார்.

இந்நிலையில், அவர் வாங்கிய லாட்டரி டிக்கெட்டின் குலுக்கல் நேற்றைய முன்தினம் நடைபெற்றது. அதில் கனகராஜ் தன் மகனுக்காக வாங்கிய லாட்டரியில் ஒரு மில்லியன் டாலர் பரிசு விழுந்து சிறுவனுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. இதைக்கேட்டு இன்ப அதிர்ச்சி அடைந்த சிறுவனின் குடும்பத்தினர் நேரில் சென்று அதைப் பெற்றுக் கொண்டனர்.

பணத்தை பெற்றுக் கொண்ட கனகராஜிடம் இதுகுறித்து கேட்டபோது, நான் ஏற்கனவே வாங்கிய இடத்தில் தனது தொழல் சார்ந்து அலுவலகம் ஒன்றை கட்டப்போவதாக கூறியுள்ளார். சிறுவனுக்காக வாங்கிய லாட்டரியில் மில்லியன் டாலர் ஜாக்பாட் அடித்த சம்பவம் பலரது வாயை பிளக்க வைத்துள்ளது.