Home Blog Page 5743

ரயில்வே ஸ்டேஷனில் மொபைல் சார்ஜ் செய்ய சூப்பர் மிஷின்: பயணிகள் நிம்மதி

0

ரயில்வே ஸ்டேஷன் போன்ற பொது இடங்களில் மொபைல் சார்ஜ் செய்ய வேண்டுமென்றால் ஒரு இடத்தில் சார்ஜ் போட்டுவிட்டு அதன் பக்கத்திலேயே உட்கார்ந்து இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது இதில் மொபைல் திருடு போகவும் அதிக வாய்ப்பு உள்ளது

இந்த நிலையில் புனே ரயில்வே ஸ்டேஷனில் ஒரு டிஜிட்டல் சார்ஜிங் மிஷன் வைக்கப்பட்டுள்ளது இதில் நாம் மொபைலை சார்ஜ் செய்ய வேண்டுமென்று முடிவு செய்து விட்டால் அதிலுள்ள தொடுதிரையில் உள்ள ஆப்சன்களை பயன்படுத்தி ரூபாய் 10 மட்டும் கட்டணம் செலுத்தி ஒரு ரசீதைப் பெற்றுக் கொள்ளலாம்

அதன் பின்னர் அது இந்த மெஷினில் உள்ள ஒரு சிறிய அறை திறக்கும். அதில் நாம் மொபைலை இன்சர்ட் செய்துவிட்டு அதை மூடி விடலாம். அதன் பின்னர் ஒரு மணிநேரம் கழித்து நமக்கு வழங்கப்பட்ட பிரின்டிங் ரசீதில் உள்ள பார்கோடு காட்டினால் நமது மொபைல் இருக்கும் சிறிய அறை திறக்கும்.

நாம் சார்ஜ் செய்யப்பட்ட மொபைலை எடுத்துக்கொள்ளலாம் இடைப்பட்ட ஒரு மணி நேரத்தில் நாம் அந்த ரயில்வே நிலையத்தின் எங்கு வேண்டுமானாலும் சென்று வரலாம் மொபைல் தொலைந்து விடும் என்ற அச்சம் ஒரு சதவீதம் கூட இருக்காது

இவ்வாறு பாதுகாப்பான முறையில் சார்ஜ் செய்ய டிஜிட்டல் மிஷினை வைத்துள்ளதற்கு பயணிகள் புனே ரயில்வே நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துள்ளனர் இந்த மெஷின் விரைவில் சென்னை உள்பட அனைத்து நகரங்களுக்கும் கொண்டுவர வேண்டும் என பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டர் என்னை இந்த பாம்புதான் கடித்தது! மருத்துவரை தெறிக்க விட்ட நோயாளி !

0

டாக்டர் என்னை இந்த பாம்புதான் கடித்தது! மருத்துவரை தெறிக்க விட்ட நோயாளி !

ராமநாதபுரம் மாவட்டத்தில் தன்னைக் கடித்த பாம்பைக் கையோடு மருத்துவமனைக்கு  எடுத்து சென்ற நபரால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஒரு காலத்தில் பாம்பு ஒரு மனிதரைக் கடித்துவிட்டால் அவ்வளவுதான். அவரைப் பிழைக்க வைப்பது கடினம் என்ற சூழல் இருந்தது. ஆனால் இப்போது நவீன வசதிகள் பெருகிவிட்ட நிலையில் எத்தகைய பாம்பு கடித்திருந்தாலும் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் அவர்களைக் காப்பாற்றி விடலாம் என்ற சூழ்நிலை உருவாகிவிட்டது. ஆனால் ஒரு வினோதமான பாம்புக் கடி சம்பவம் ராமநாதபுரத்தில் நடந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சேது. கூலித் தொழிலாளியான இவர் தன் வீட்டின் வெளியே நின்ற கட்டுவிரியன் பாம்பை அடிக்க முயன்றுள்ளார். அப்போது பாம்பு அவரைக் கடித்துள்ளது. இதனை அடுத்து அக்கம்பக்கத்தினர் சேர்ந்து அந்த பாம்பை அடித்துக் கொன்றுவிட்டு அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

டாக்டர் என்னை இந்த பாம்புதான் கடித்தது! மருத்துவரை தெறிக்க விட்ட நோயாளி !

தொண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அங்கு சேதுவிற்கு முதலுதவி மட்டும் அளித்துவிட்டு மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். அந்த மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர், அவரிடம் உங்களைக் கடித்தது என்ன வகைப் பாம்பு எனத் தெரியுமா எனக் கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் அருகில் இருந்த பையில் கைவிட்டு கட்டுவிரியன் பாம்பையே எடுத்துக் காட்டியுள்ளார். பாம்பை பார்த்த மருத்துவர்களும் செவிலியர்களும் அலறியடித்து ஓட, மருத்துவமனையே பரபரப்பானது. அதன் பின் அவர் அது இறந்த பாம்பு என சொன்ன பிறகே அவர்கள் சமாதானமாகி அவருக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.

நான் கூட புர்கா அணிந்துகொள்ள தயார்:புர்கா சர்ச்சையில் வாய்திறந்த ரஹ்மான் !

0

நான் கூட புர்கா அணிந்துகொள்ள தயார்:புர்கா சர்ச்சையில் வாய்திறந்த ரஹ்மான் !

தன் மகள் அணிந்திருக்கும் புர்கா தொடர்பாக எழுந்திருக்கும் சர்ச்சைக்கு முதல் முறையாக மௌனம் கலைத்து பதில் சொல்லியுள்ளார் ஏ ஆர் ரஹ்மான்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஏ ஆர் ரஹ்மான் ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் 10 ஆவது ஆண்டுவிழாவில் கலந்துகொண்டார். அவருடன் அவரது மூத்த மகள் கதீஜா ரஹ்மானும் கலந்துகொண்டார். இருவருக்கும் இடையிலான கேள்வி பதில் செஷன் ரசிகர்களைக் கவர்ந்திழுக்க வேறு விதமான ஒரு சர்ச்சையும் கிளம்பியது.

கதீஜா புர்கா ஆடை அணிந்து இருந்ததால் ஏ ஆர் ரஹ்மானை பிற்போக்குவாதியாக சித்தரித்து நிறைய விமர்சனங்கள் எழவே, அதற்குப் பதிலளித்த கதீஜா ரஹ்மான் ‘இது நான் தேர்ந்துகொண்ட பாதை… இதற்கும் எனது தந்தைக்கும் சம்மந்தம் இல்லை. நான் எடுக்கும் முடிவுகளுக்கு என் தந்தை எப்போதும் உறுதுணையாகவும், என்னை ஊக்கப்படுத்தியும் வந்துள்ளார்’ எனக் கூறினார்.

இந்த புர்ஹா விவகாரம் அத்தோடு முடிய இப்போது ஒரு வருடம் கழித்து மீண்டும் புதிய வடிவில் சர்ச்சை உருவாகியுள்ளது. புகழ்பெற்ற எழுத்தாளரான தஸ்லிமா நஸ்ரின் ‘ எனக்கு ஏ ஆர் ரஹ்மானை மிகவும் பிடிக்கும். ஆனால் அவரது மகளை பார்க்கும் போதுதான் ஒருவிதமான புழுக்கத்துக்கு ஆளாகிறேன்.’ எனத் தெரிவிக்க மீண்டும் சர்ச்சைகள் உருவாகின. இதற்கு சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகியது.

இந்நிலையில் இப்போது மீண்டும் கோபமாக கதீஜா ரஹ்மான் அவருக்குப் பதிலளித்துள்ளார். அதில் ‘ஒருவருடத்திற்குள்  மீண்டும் இந்த விஷ்யம் டாப்பிக்காக ஆகியுள்ளது. தஸ்லிமா நஸ்ரின் அவர்களே, என் உடையால் நீங்கள் புழுக்கம் அடைந்ததற்காக என்னை மன்னித்துவிடுங்கள். வெளியே சென்று நல்ல காற்றை சுவாசியுங்கள். கூகுளில் சற்று பெண்ணியம் என்றால் என்னவென்று தேடிப் பாருங்கள். ஒரு பெண்ணை இழுத்து அவரின் அப்பாவுக்கு பிரச்சினை கொடுப்பது பெண்ணுரிமை இல்லை. அதேப்போல நான் எனது புகைப்படத்தை உங்களுக்கு அனுப்பி கருத்து கேட்கவில்லையே’ தடாலடியாக பதிலளித்துள்ளார்.

இந்நிலையில் இந்த சர்ச்சைக் குறித்து இதுவரைப் பேசாமல் இருந்த ரஹ்மான் இப்போது முதல்முறையாக பேசியுள்ளார். ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் ‘நாம் சந்திக்கும் பிரச்சினைகளின் வழியாகவே நமது பிள்ளைகளையும் அழைத்துவரவேண்டியுள்ளது.. அப்போது தான்  நம்முடைய பிரச்சினை எதுவென்று அவர்களுக்குத் தெரியும். நல்லது கெட்டதைத் தெரிந்து கொண்ட பின் எது சரியென்ற முடிவை அவர்கள் எடுப்பார்கள். கதிஜா இன்ஸ்டாகிராமில் பதிவு செய்ததைப் பார்த்தேன். அதற்கு முன்னர் நாணும் அவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

ஏனன்றா முக்காடுக்குப் பின்னால் இருப்பவர் கதிஜா. அது அவருடைய முடிவாக இருக்கவேண்டும் என்று விரும்பினேன்.  ஒரு ஆண் புர்கா அணியக்கூடாது. இல்லையென்றால் நான் தாராளமாக ஒரு புர்காவை அணிந்துகொள்வேன். அதன் மூலம் கடைக்குச் செல்வதற்கும், வாழ்வின் பல விஷயங்களை உணர்வதற்கும் அது உதவியாக இருக்கும்.’ எனக் கூறியுள்ளார்.

சிறப்பு வேளாண் மண்டல சட்டமசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல்! விவசாயிகள் மகிழ்ச்சி..!!

0

சிறப்பு வேளாண் மண்டல சட்டமசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல்! விவசாயிகள் மகிழ்ச்சி..!!

காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்க அமைச்சரவை ஒப்புதலுக்கு பிறகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் மசோதா தாக்கல் செய்திருந்தார். இதனால் காவிரி டெல்டா பகுதிகளில் இரும்பு ஆலை, அலுமினியல் உருக்காலை, மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன் வாயு எடுக்கும் திட்டங்களுக்கு எந்த வகையிலும் அனுமதிக்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது.

சிறப்பு வேளாண்மண்டல சட்ட மசோதா நிறைவேற்றத்தால் தமிழக காவிரி டெல்டா விவசாய நிலங்கள் கார்ப்பரேட் கம்பெனிகளிடம் இருந்து பாதுகாப்பதுடன் மேலும், நல்ல விளைச்சல் கிடைக்கபோவதும் மற்றும் விவசாயிகளின் எதிர்கால வாழ்வாதாரம் உயரப்போவதும் உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து, காவிரி டெல்டா பகுதிகளை உள்ளடக்கிய தஞ்சை, புதுக்கோட்டை, நாகை, திருவாரூர், கடலூர், அரியலூர், திருச்சி போன்ற மாவட்டங்களின்விவசாய நிலப் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்த சட்டமசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். தொழில் நகரமான சில இடங்களை தமிழக அரசு
சிறப்பு வேளாண் மண்டல பகுதியாக அறிவிக்கவில்லை. இதை, டெல்டா பகுதிகளில் சில இடங்களை சேர்க்காமல் இருப்பதாக சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேள்விகேட்டதும் குறிப்பிடத்தக்கது.

த்ரிஷா தன் சம்பளத்தைத் திருப்பி தர வேண்டும்: தயாரிப்பாளர் ஜி சிவா ஆதங்கம் !

0

த்ரிஷா தன் சம்பளத்தைத் திருப்பி தர வேண்டும்: தயாரிப்பாளர் ஜி சிவா ஆதங்கம் !

த்ரிஷா, அவர் நடித்துள்ள பரமபதம் விளையாட்டு எனும் படத்தின் புரோமோஷன் பணிகளில் கலந்து கொள்ளாவிட்டால் சம்பளத்தைத் திருப்பி தர வேண்டும் எனக் கூறியுள்ளார்.

சமீபகாலமாக நாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் கோலிவுட்டில் அதிகமாக உருவாகியுள்ளன. அந்த வகையில் உருவாகும் கதைகளை வைத்திருக்கும் தயாரிப்பாளர்கள் நேராகப் போவது ரசிகர்களுக்கு பரிச்சயமுள்ள கதாநாயகிகளிடம்தான். ஏனென்றால் கதாநாயகி மையப்படுத்திய கதை என்றால் அது எப்போதும் ரிஸ்க்தன். அதனால் ரசிகர்களுக்கு தெரிந்த முகமாக இருந்தால் அவர்களை வைத்து படத்துக்கு புரோமோஷன் செய்ய முடியும் என்பதால்தான்.

அப்படிதான் புது முக இயக்குனரான திருஞானம் என்பவர் த்ரிஷாவை வைத்து பரமபதம் விளையாட்டு எனும் படத்தை இயக்கி தயாரித்துள்ளார். இந்த படம் பிப்ரவரி 28 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதை முன்னிட்டு இன்று அந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் நடந்தது. இதில் படத்தில் நடித்த நடிகையர் அனைவரும்  கலந்து கொண்டனர். ஆனால் கதாநாயகியான த்ரிஷா மட்டும் வரவில்லை. இது அங்கு வந்திருந்தவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

த்ரிஷா தன் சம்பளத்தைத் திருப்பி தர வேண்டும்: தயாரிப்பாளர் ஜி சிவா ஆதங்கம் !

இந்நிலையில் விழாவுக்கு வந்திருந்த தயாரிப்பாளர் ஜி சிவா பேசும் போது ‘தயாரிப்பாளர் திருஞானம் எனது நீண்டகால நண்பர். அவர் இந்த படத்தை மிகவும் கஷ்டப்பட்டு எடுத்துள்ளார். பெரிய நடிகர்களை வைத்து எடுக்கப்படும் படத்திலேயே போட்ட காசை திரும்ப எடுக்க முடியவில்லைஇந்த படத்தை திரிஷாவால் மட்டும்தான் ப்ரமோட் பண்ண முடியும். அவரைத் தவிர மற்ற அனைவரும் புதுமுகங்களாகவும் ரசிகர்களுக்கு அறிமுகம் இல்லாதவர்களாகவும இருக்கின்றனர். இன்றைய விழாவில் அவர் கலந்து கொள்ள முடியாததற்கு ஏதேனும் காரணங்கள் இருக்கலாம். அடுத்த வாரம் படத்தின் ரிலீஸின் போது அவர் கண்டிப்பாக இந்த படத்திற்கு விளம்பரம் செய்து தர வேண்டும். அப்படி இல்லையென்றால் திரிஷா தான் வாங்கிய சம்பளத்தில் பாதியை கொடுக்க வேண்டும். மேலும் தயாரிப்பாளர்கள் நடிகர், நடிகையர்களிடம் ஒப்பந்தம் போடும்போதே விளம்பரப் பணிகளையும் சேர்த்து ஒப்பந்தம்ச் செய்ய வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

எழுப்பிய சுவருக்கு பதிலாக வீட்டையே கட்டியிருக்கலாம்! ஆலோசனை கொடுத்த சீமான்!!

0

எழுப்பிய சுவருக்கு பதிலாக வீட்டையே கட்டியிருக்கலாம்! ஆலோசனை கொடுத்த சீமான்!!

வருகிற 24 ஆம் தேதி இந்தியாவிற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வருகை தர இருப்பதால் இந்தியாவின் பல இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி ஆக்ரா மற்றும் குஜராத் சபர்மதி ஆசிரமம் போன்ற பகுதிகளை டிரம்ப் பார்வையிட இருக்கிறார்.

அதிபர் டிரம்ப்பை பிரம்மாண்டமாக வரவேற்க 1 லட்சத்திற்கும் அதிகமானோரை குஜராத் அரசு ஏற்பாடு செய்துள்ளது. பல கிலோமீட்டர் தூரத்திற்கு வரிசையாக நின்று வரவேற்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்நிலையில், குஜராத் பகுதியில் குடிசைகளாக உள்ள இடங்களை மறைக்கும் விதமாக 7 அடி உயரம் காம்பவுண்ட் சுவர் எழுப்பியுள்ளனர்.

சுவர் எழுப்பிய சம்பவம் ஊடகங்களில் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து சர்ச்சையாகி வருகிறது. குறிப்பாக எதிர்கட்சிகள் பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளன. டிசிட்டல் இந்தியாவில் இப்படித்தான் சுவர் எழுப்பி மறைப்பதா என்று சமூக வலைதளங்களிலும் விமர்சனம் தொடர்ந்து வருகிறது. குடிசைகளை மறைக்க அவசர அவசரமாக சுவர் எழுப்புவது நாட்டில் உள்ள ஏழ்மை நிலையை மறைப்பதற்குத்தான் என்று சீமான் பேசியுள்ளார். மேலும் இந்த சுவர்களை கட்டும் செங்கற்களை வைத்து அந்த ஏழைகளுக்கான வீடுகளையே கட்டித்தரலாம் என்று ஆலோசனை தரும் வகையில் நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம்: ரஜினிகாந்த் கோரிக்கை மனு

0

தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம்: ரஜினிகாந்த் கோரிக்கை மனு

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை செய்துவரும் கமிஷன், ரஜினிகாந்தை நேரில் அழைத்து விசாரணை செய்ய சமீபத்தில் சம்மன் அனுப்பியது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது ரஜினிகாந்த் தரப்பில் இருந்து மனு ஒன்று கமிஷனிடம் அளிக்கப்பட்டுள்ளது

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக கேட்க வேண்டிய கேள்விகளை எழுத்துப்பூர்வமாக தன்னிடம் கேட்டால் எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்க தயார் என்று ரஜினிகாந்த் தரப்பில் இருந்து மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு குறித்து விரைவில் விசாரணை கமிஷன் முடிவெடுக்கும் என தெரிகிறது.

முன்னதாக தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து கருத்து கூறிய ரஜினிகாந்த் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் சமூக விரோதிகளால் ஏற்பட்டது என்று கூறினார்.

சமூக விரோதிகள் என்று யாரை ரஜினிகாந்த் குறிப்பிட்டார் என்பதை அவரிடம் விசாரணை செய்ய வேண்டும் என சீமான் உள்ளிட்டோர் எழுப்பிய கோரிக்கைகளை அடுத்தே விசாரணை கமிஷன் ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

’இந்தியன் 2’ விபத்து குறித்து சிம்புவின் சாட்டையடி அறிக்கை!

0

கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கி வந்த ’இந்தியன் ட2’ படத்தின் படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு 3 பேர் பலியாகினர் என்பது தெரிந்ததே. இந்த விபத்தில் இருந்து கமல், ஷங்கர், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நூலிழையில் உயிர் பிழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த விபத்து குறித்து பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் சிம்பு இதுகுறித்து காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

’இந்தியன் 2’ படப்பிடிப்பில் நேர்ந்த விபத்தை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது. எத்தனை கனவுகளோடு விபத்தில் சிக்கியவர்களின் சினிமா பயணம் ஆரம்பித்திருக்கும்? அவர்களின் குடும்பத்தின் கனவுகளும் சேர்ந்தே தொலைந்து போய்விட்டதே என்பதை நினைக்க நினைக்க கண்களில் நீர் முட்டிக் கொண்டு வருகிறது.

இறந்துபோன தொழிலாளர்கள், உதவி இயக்குநர்களின் குடும்பத்திற்கு என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஈடுசெய்ய முடியாத இந்த இழப்பைத் தாங்கும் பலத்தை இறைவன் தர வேண்டிக் கொள்கிறேன். இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும். மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் நலமுடன் வீடு திரும்ப அந்த ஆண்டவன் துணை நிற்கட்டும்.

இனியொரு போதும் இப்படியொரு இழப்பு வேண்டாம். தொழிலாளர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்குமான பாதுகாப்பை இன்னும் கவனமாக கையாள வேண்டும் என்பதை அமைப்புகள் உறுதிசெய்ய வேண்டும். பணமோ, வார்த்தைகளோ உயிரிழப்பை ஈடுசெய்துவிட முடியாது. அதனால் பணியின் போது ஒவ்வொருவரும் தங்கள் உயிரின் மீது கவனம் வைத்து பாதுகாப்பை உறுதிசெய்துகொண்டு வேலை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்

இவ்வாறு சிம்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

துப்பறிவாளன் 2’ படத்தில் இருந்து மிஷ்கின் நீக்கமா? அதிர்ச்சி தகவல்

0

விஷால், பிரசன்னா நடித்து வந்த துப்பறிவாளன் 2’ என்ற படத்தை இயக்கி வந்த இயக்குனர் மிஷ்கின் திடீரென இந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்தை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் முடித்துக் கொடுக்க மிஷ்கின் ஒப்பந்தம் செய்திருந்த நிலையில் ஏற்கனவே ஒரு சில கோடிகள் தயாரிப்பாளர் விஷாலிடம் இருந்து மிஷ்கின் வாங்கி உள்ளார்

இந்த நிலையில் மேற்கொண்டு இந்த படத்தை முடிக்க ரூபாய் 40 கோடி தேவை என விஷாலிடம் மிஷ்கின் கேட்டதாகவும் இதனால் அதிர்ச்சி அடைந்த விஷால், துப்பறிவாளன் 2’ படத்திலிருந்து மிஷ்கினை விலக்கிவிட்டதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் மீதமுள்ள சில காட்சிகளை மட்டும் விஷாலே இயக்கி இந்த படத்தை முடிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூறப்படுவதால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

விஷால் தற்போது ‘சக்ரா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் அவர் ‘துப்பறிவாளன் 2’ படத்தின் இயக்குனர் பணியை மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது.

சதத்தை தவறவிட்ட வில்லியம்ஸன்:ஆறுதல் அளித்த இஷாந்த் சர்மா! இரண்டாவது நாளில் நியுசிலாந்து ஆதிக்கம் !

0

சதத்தை தவறவிட்ட வில்லியம்ஸன்:ஆறுதல் அளித்த இஷாந்த் சர்மா! இரண்டாவது நாளில் நியுசிலாந்து ஆதிக்கம் !

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளின் முடிவில் நியுசி 216 ரன்கள் சேர்த்துள்ளது.

நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. அதன் பின் நடந்த ஒருநாள் தொடரை நியுசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று வெல்லிங்க்டன் மைதானத்தில் தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற நியுசிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன் படி களமிறங்கிய இந்திய அணயில் மயங்க் அகர்வால் (34), ரஹானே (46) மற்றும் முகமது ஷமி (21) ஆகியோரைத் தவிர அனைவரும் சொதப்பியதால் இந்திய அணி 165 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அபாரமாக வீசிய டிம் சவுத்தி மற்றும் ஜேமீஸன் ஆகியோர் தலா 4 விக்கெட்களைக் கைப்பற்றினர்.

சதத்தை தவறவிட்ட வில்லியம்ஸன்:ஆறுதல் அளித்த இஷாந்த் சர்மா! இரண்டாவது நாளில் நியுசிலாந்து ஆதிக்கம் !

இதையடுத்து இன்று தங்கள் இன்னிங்ஸை துவங்கிய நியுசிலாந்து அணி நிதானமாக விக்கெட்களைப் பறிகொடுக்காமல் விளையாடியது. அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 89 ரன்களில் அவுட் ஆகி சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். மற்றொரு வீரரான ராஸ் டெய்லர் 44 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் நியுசிலாந்து 216 ரன்கள் சேர்த்து 5 விக்கெட்களை இழந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவை விட 51 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

இந்தியா சார்பில் இஷாந்த் ஷர்மா 3 விக்கெட்டும், ஷமி மற்றும் அஷ்வின் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.