Home Blog Page 5786

எங்கே 1000 பள்ளிகள் : கெஜ்ரிவாலிடம் அமித்ஷா கேள்வி ! பிரச்சாரங்களால் சூடாகும் டெல்லி !

0

எங்கே 1000 பள்ளிகள் : கெஜ்ரிவாலிடம் அமித்ஷா கேள்வி ! பிரச்சாரங்களால் சூடாகும் டெல்லி !

டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் நடக்க இருப்பதால் அரசியல் தலைவர்கள் டெல்லியை முகாமிட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

டெல்லியில் இப்போது அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லி சட்டமன்றத்துக்கான தேர்தல் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி நடக்க இருக்கிறது. அதன் வாக்கு எண்ணிக்கை 11 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

இதனால் இந்த ஜனவரி மாதக் குளிரிலும் அரசியல் தலைவர்களின் பேச்சால் டெல்லி சூடாகியுள்ளது. பாஜக மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் முதல்வர் பதவிக்காகப் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று நடந்த கூட்டத்தில் பேசினார். அப்போது ‘டெல்லியில் ஆட்சிக்கு வந்தால் 1000 பள்ளிகளை திறப்பேன் என சொன்னார் அரவிந்த் கெஜ்ரிவால். அந்த பள்ளிகளைப் பார்க்க நான் ஆசைப்படுகிறேன். அவர்களால் காட்டமுடியுமா ? நன்றாக இருந்த பள்ளிகளைக் கெடுத்ததுதான் அவர்கள் செய்தது’ எனக் கூறினார்.

ஈரான் தாக்குதலால் அமெரிக்க வீரர்கள் மூளைக்காயம் ! பொய் சொன்னாரா ட்ரம்ப் ?

0

ஈரான் தாக்குதலால் அமெரிக்க வீரர்கள் மூளைக்காயம் ! பொய் சொன்னாரா ட்ரம்ப் ?

ஈரான் படைத்தளபதியை அமெரிக்கா கொன்றதை அடுத்து அமெரிக்க ராணுவ முகாம்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போர் மூளும் சூழல் உருவானது. அதற்குக் காரணம் அமெரிக்கப் படைகள் ஈரான் படைத்தளபதி சுலைமானியை டிரோன் தாக்குதல் மூலம் கொலை செய்தது. இதற்கு பதிலடியாக ஈரான் அமெரிக்காவின் ராணுவ முகாம்கள் மேல் தாக்குதல் நடத்தியது.

ஆனால் அந்த தாக்குதலில் அமெரிக்க வீரர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ‘ஆல் ஈஸ் வெல்’ எனக் கூறினார். ஆனால் இப்போது அந்த தாக்குதலில் அமெரிக்க ராணுவ வீரர்கள் 34 பேர் மூளைக் காயம் அடைந்ததாக அமெரிக்க ராணுவத்தின் தலைமையிடமான பெண்டகன் வட்டாரம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதில் பாதிக்கப்பட்ட 34 வீரர்களும் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் சிகிச்சைப் பெற்று மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.  சில வீரர்கள் அமெரிக்காவுக்குத் திருப்பி அனுப்பப் பட்டு விட்டார்கள். இந்நிலையில் இத்தனை வீரர்கள் காயமடைந்திருக்கும் நிலையில் ட்ரம்ப் அப்படி எதுவும் நடக்கவில்லை என சொன்னது குறித்து பொதுமக்கள் அவருக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கோரிக்கையை கிடப்பில் போட்டு விட்டு காரியத்தில் உறுதியாக இருப்பது நன்மையல்ல! மருத்துவர் ராமதாஸ் காட்டம்

0

கோரிக்கையை கிடப்பில் போட்டு விட்டு காரியத்தில் உறுதியாக இருப்பது நன்மையல்ல! மருத்துவர் ராமதாஸ் காட்டம்

5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை கிடப்பில் போட்டு விட்டு, பொதுத்தேர்வை நடத்துவதில் அரசு உறுதியாக இருப்பது கல்விக்கு செய்யும் நன்மையல்ல என்றும் இது மாணவர்களுக்கு செய்யும் தீமையாகும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இந்நிலையில் இதை எதிர்க்கும் விதமாக 5, 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யக் கோரி 28-ஆம் தேதி பாமக சார்பில் போராட்டம் அறிவித்துள்ளார்.மேலும் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

தமிழ்நாட்டில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக பள்ளிக்கல்வித்துறை செய்து முடித்து விட்டது. 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை கிடப்பில் போட்டு விட்டு, பொதுத்தேர்வை நடத்துவதில் அரசு உறுதியாக இருப்பது கல்விக்கு செய்யும் நன்மையல்ல… மாணவர்களுக்கு செய்யும் தீமையாகும்.

5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்ற யோசனை கடந்த 3 ஆண்டுகளாகவே முன்வைக்கப் பட்டு வரும் நிலையில், அதை பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்த்து வருகிறது. கல்வி உரிமைச் சட்டத்தில் 8-ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி வழங்கப்பட வேண்டும் என்ற பிரிவு சேர்க்கப்பட்டு இருந்தது. கட்டாயத் தேர்ச்சி வழங்குவதால் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாக ஒரு தரப்பினர் புகார்கள் கூறியதை அடுத்து, அது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு, 8-ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிப்பதை ரத்து செய்யலாம் என்று பரிந்துரைத்தது. அதன்படி 5 மற்றும் 8&ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முறையை ரத்து செய்ய தீர்மானித்த மத்திய அரசு, அதற்கான சட்டத்தை கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றியது. எனினும், அச்சட்டத்தை மாநில அரசுகள் கடைபிடிக்க வேண்டிய தேவையில்லை என மத்திய அரசே கூறியுள்ளது.

ஆனாலும், தமிழக அரசு தானாக முன்வந்து 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு நடப்பாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தவிருக்கிறது. மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்காகத் தான் பொதுத் தேர்வு நடத்துவதாக தமிழக அரசு கூறியிருக்கிறது. தமிழக அரசின் இந்த வாதத்தை ஏற்க முடியாது. அனைவருக்கும் பள்ளிக் கல்வி வழங்குதல் முதல்படி என்றால், கல்வித்தரத்தை உயர்த்துவது இரண்டாம் நிலையாகும். தமிழ்நாட்டில் முதல் வகுப்பில் சேரும் மாணவர்களில் 99.25 விழுக்காட்டினர் ஐந்தாம் வகுப்பையும், 98.70 விழுக்காட்டினர் எட்டாம் வகுப்பையும், 96.70 விழுக்காட்டினர் பத்தாம் வகுப்பையும் நிறைவு செய்கின்றனர். இவ்வாறாக முதல்படியை தமிழகம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்றால், அதற்கு காரணம் எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி வழங்கப்படுவது தான். இதனால் இன்றைய சூழலில் 30 வயதுக்குள் உள்ள இளைஞர்களில் 95 விழுக்காட்டினர் பத்தாம் வகுப்பை முடித்தவர்களாக உள்ளனர். மாறாக 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கொண்டு வரப்பட்டால், இந்த நிலை மாறி விடும். இத்தகைய பின்னடைவு தேவையா? என்று தமிழக அரசு சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கல்வித்தரத்தை உயர்த்துவது என்பது வரவேற்கப்பட வேண்டிய விஷயம் தான். ஆனால், அதற்கு முன்பாக அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை உறுதி செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் ஊரகங்களில் உள்ள தொடக்கப்பள்ளிகளில் 48% பள்ளிகள் ஈராசிரியர்களைக் கொண்ட பள்ளிகளாக உள்ளன. இவர்களில் ஓர் ஆசிரியர் பல நேரங்களில் நிர்வாகப் பணிகளுக்காக வெளியில் சென்று விடும் சூழலில், மீதமுள்ள ஓர் ஆசிரியர் தான் 5 வகுப்புகளுக்கும் பாடம் நடத்த வேண்டும். இத்தகைய சூழலில் பயிலும் குழந்தைகளுக்கு 5-ஆம் வகுப்பில் பொதுத்தேர்வு நடத்துவது மிகப்பெரிய மனித உரிமை மீறலாகும்.

நகர்ப்புறங்களில் ஒவ்வொரு ஆண்டு லட்சக்கணக்கில் கட்டணம் செலுத்தி, வெளிநாட்டு மகிழுந்தில் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பும் சூழல் நிலவும் அதே வேளையில், அரசு சார்பில் வழங்கப் படும் சத்துணவுக்காகவும், சீருடைகளுக்காகவும் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பும் ஏழ்மைச் சமுதாயம் கிராமப்புறங்களில் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அவர்களுக்கு கற்றல் என்பது முழு நேரப் பணி அல்ல. தாய் தந்தையருக்கு அவர்களது பணியில் உதவி செய்து விட்டு, பின்னர் கிடைக்கும் நேரத்தில் பள்ளிக்கு வந்து செல்வது தான் வழக்கம். இப்போதைய கல்வி முறையில் அவர்கள் பத்தாம் வகுப்பு வரையாவது படிப்பார்கள். பொதுத்தேர்வு கொண்டு வரப்பட்டால் அவர்கள் தொடக்கக்கல்வியைக் கூட முடிக்காமல் பெற்றோரின் தொழிலை செய்ய வேண்டிய சூழல் தான் ஏற்படும்.

இன்றையக் கல்விச் சூழல் மிகவும் மோசமான காலக்கட்டத்தை கடந்து கொண்டிருக்கிறது. ‘‘அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’’ என்ற பாரதியாரின் வரிகளுக்கு ஏற்க கல்விச் சேவை வழங்கிய காலம் மலையேறிக் கொண்டிருக்கிறது. கற்பித்தல் என்பது காசு கொட்டும் தொழிலாகி விட்டது. நீட் தேர்வில் தொடங்கி அனைத்து வகை நுழைவுத் தேர்வுகளும் கொண்டு வரப்படுவதன் நோக்கம் கல்வித்தரத்தை உயர்த்துவதற்காக அல்ல… மாறாக, அத்தேர்வுகளுக்கு தனிப்பயிற்சி வகுப்புகளை நடத்துவது ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் கூடுதலாக வருமானம் ஈட்டித் தரும் தொழில் என்பதால் தான். 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு கொண்டு வந்தால், அத்தேர்வுகளுக்காக தனிப்பயிற்சி வகுப்புகளை உருவாக்கலாம்; அதன்மூலம் வணிக வட்டத்தை விரிவுபடுத்தலாம் என்ற சிந்தனை தான் இதற்குக் காரணமாகும். இந்த வணிகச் சதி வலையில் தமிழகக் குழந்தைகளை ஆட்சியாளர்கள் சிக்க வைத்துவிடக் கூடாது.

நீட் தேர்வு எந்த அளவுக்கு அர்த்தமற்றதோ, அதேபோல் தான் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளும் அர்த்தமற்றவை. நீட் தேர்வை எதிர்க்கும் தமிழக அரசு இந்தத் தேர்வுகளையும் எதிர்க்க வேண்டும். அதன்படி 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வரும் 28-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை பாட்டாளி மாணவர் சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட மற்றும் வட்டத் தலைநகரங்களில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும். சென்னையில் வள்ளுவர்கோட்டம் அருகில் நடைபெறும் போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ஜி.கே. மணி தலைமையேற்று நடத்துவார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு முழுவதும் நடைபெறவுள்ள இப்போராட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி, பாட்டாளி மாணவர் சங்கம், பாட்டாளி இளைஞர் சங்கம் உள்ளிட்ட துணை அமைப்புகளின் நிர்வாகிகள், சமூகநீதியில் அக்கறை கொண்டவர்கள், கல்வியாளர்கள்,மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்வார்கள் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட அதிமுக பிரமுகர் ஜாமீனில் விடுதலை! அதிர்ச்சியளிக்கும் தகவல்

0

பொள்ளாச்சி பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட அதிமுக பிரமுகர் ஜாமீனில் விடுதலை! அதிர்ச்சியளிக்கும் தகவல்

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழகத்தையே அதிர்சிக்குள்ளாக்கிய பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதாக கூறி அதிமுக பிரமுகர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட முக்கிய குற்றவாளியான அதிமுக பிரமுகர் ஜாமீனில் விடுதளையாகியுள்ளது தமிழக மக்களை அதிர்சிக்குள்ளக்கியுள்ளது.

அதாவது பொள்ளாச்சியில் நடந்த இந்த சம்பவத்தில் காதல் என்ற பெயரில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி கற்பழித்ததுடன் அதை ஆபாசமாக மொபைலில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். பின்னர் அதை வைத்து கொண்டு மீண்டும் மீண்டும் அவர்களை மிரட்டி கற்பழித்ததுடன் அவர்களிடம் இருந்து நகை, பணம் என கொள்ளையும் அடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவர்களால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் இந்த சம்பவம் நடைபெற்ற பின்பு கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்று கொண்ட காவல் துறையினர் இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர் . இந்த விசாரணையின் போது தான் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அதாவது இந்த பாலியல் வழக்கில் பெரிய இடத்து இளைஞர்கள் பலரும் ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர்கள் காதல் என்ற பெயரில் இது போன்ற அப்பாவி இளம் பெண்களை ஏமாற்றி அவர்களுடைய பாலியல் வலையில் சிக்க வைத்து உள்ளனர் என்றும் இந்த விசாரணையின் மூலமாக தெரியவந்தது. இந்த வழக்கை விசாரித்த காவல் துறை அதிகாரிகள் குற்றவாளிகளான சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் உள்ளிட்டோரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

பின்னர் இந்த வழக்கானது அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சமூக ஆரவலர்களின் வேண்டுகோளின் படி சிபிஐ விசாரணைக்கு மாறியது. ஆரம்பத்திலிருந்து இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வந்த சிபிஐ இது குறித்து பல திடுக்கிடும் தகவல்களை கண்டறிந்தனர். இந்நிலையில் இது பற்றி புகார் அளித்த அந்தப் பெண்ணின் சகோதரனை இந்த பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபட்டவர்கள் தாக்கியதாகவும் கூறப்பட்டது . இதனால் குற்றவாளிகள் மீது இது குறித்து மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணையும் சிபிஐ அதிகாரிகளே மேற்கொண்டு வந்தனர். மேலும் இந்த அடிதடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாபு, செந்தில், வசந்தகுமார் மற்றும் மணிவண்ணன் உள்ளிட்டோர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

தற்போது சிபிஐ விசாரணையில் உள்ள இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு எதிராக ஆதாரங்கள் எதுவும் கிடைக்காததால் இந்த வழக்கு முன்னேற்றம் ஏதுமில்லாமல் இருக்கிறது. இதனையடுத்து சிபிஐ இந்த வழக்கை கைவிடுவதாக அறிவித்துள்ளது. இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணையானது வரும் 6 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது அன்றைய தினத்தில் இந்த வழக்கிற்கான இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பந்தப்பட்ட மற்றொரு வழக்கும் வரும் 5 ஆம் தேதி நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த வழக்கிலும் பல்வேறு மாற்றங்களும் திருப்பு முனைகளும் ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் அறிந்துள்ள இந்த குற்றத்திலேயே ஆதாரங்கள் இல்லையென வழக்கை கைவிடுவதாக அறிவித்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

50,000 பெண்களுக்கு சுயவேலைவாய்ப்புப் பயிற்சி

0

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தஞ்சாவூர் மண்டல அலுவலகம், தஞ்சாவூர் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் இணைந்து ஜனவரி 24 ஆம் தேதி தஞ்சாவூரில் பிரமாண்ட நிகழ்ச்சி ஒன்றை நடத்தின. 

     இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான திரு கர்னம் சேகர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.  இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் செயல் இயக்குநர்கள் திரு கே சுவாமிநாதன், திரு அஜய் குமார் ஸ்ரீவத்சவா, வங்கியின் பொது மேலாளர் திரு சுஷில் சந்திர மொகந்தா, தலைமை மண்டல மேலாளர் திரு கே எஸ் லஷ்மி நரசிம்மன் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். 

     தமிழகத்தைச் சேர்ந்த 11 முக்கிய மாவட்டங்கள், கேரளாவைச் சேர்ந்த திருவனந்தபுரம் ஆகியவற்றில் உள்ள ஐ ஓ பி-யின் பல்வேறு சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்களைச் சேர்ந்த 50,000 பெண் பயனாளிகளின் சாதனைகளை பாராட்டும் வகையில், இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.  தையல் தொழில், பின்னல் வேலை, அழகுக்கலை, அப்பளம், ஊறுகாய், மசாலாத் தூள் தயாரிப்பு, காகிதப் பைகள் தயாரிப்பு, கோழிப் பண்ணை, பால் பண்ணை, மண்புழு உர உற்பத்தி போன்ற விவசாயம் சார்ந்த தொழில்களில் பெண் பயனாளிகளுக்கு பல்வேறு மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

     பயிற்சிப் பெற்று தொழிலில் சிறந்து விளங்கும் பயனாளிகள் விழாவில் கவுரவிக்கப்பட்டனர்.  தங்களது வெற்றிக் கதைகளை அவர்கள் நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டனர்.  ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் பயனாளிகள் இதில் கலந்து கொண்டனர்.  பல்வேறு திட்டங்களின் கீழ், ரூ.3.26 கோடி மதிப்பிலான 200 கடன்கள் வழங்கப்பட்டன.  பயனாளிகள் தயாரித்த பொருட்களின் சுமார் 30 அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டன. 

தோனியின் இடத்தை நிரப்புகிறாரா ஸ்ரேயாஸ் ஐயர் ? பலமாகும் நடுவரிசை !

0

தோனியின் இடத்தை நிரப்புகிறாரா ஸ்ரேயாஸ் ஐயர் ? பலமாகும் நடுவரிசை !

இந்திய அணியின் இளம்வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து சிறப்பாக ஆடி ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் திறனை வளர்த்துக் கொண்டு வருகிறார்.

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி 20 போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு பின் வரிசையில் களமிறங்கி 29 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்த ஸ்ரேயாஸ் ஐயரின் அதிரடி ஆட்டம் முக்கிய காரணியாக அமைந்தது.

தோனிக்குப் பிறகு இந்திய அணி ஒரு தரமான பினிஷிங் வீரருக்காக காத்திருக்கிறது. அதற்காக ரிஷப் பண்ட் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரை பரிசோதித்து வருகிறது. ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடினாலும் அவரிடம் தொடர்ச்சியாக ரன் சேமிக்கும் திறன் குறைவாக உள்ளது. ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக் கொண்டு விளையாண்டு வருகிறார்.

ஒருநாள் போட்டிகள் மற்றும் டி 20 போட்டிகள் என அனைத்திலும் தன்னை நிரூபித்துக் கொண்டு இருக்கிறார். விராட் கோலி, ரோஹித் ஷர்மா ஆகியோர் சொதப்பும் போட்டிகளில் ஸ்ரேயாஸ் கலக்கி வருகிறார். இதன் மூலம் தோனியின் இடத்தை நிரப்புகிறார் என ரசிகர்கள் பாராட்ட ஆரம்பித்துள்ளனர். அதை உண்மை என நிரூபிக்கும் வகையில் இன்றைய போட்டியை தோனி ஸ்டைலில் சிக்ஸர் அடித்து முடித்தார் ஸ்ரேயாஸ்.

இதுவரை மொத்தமே 32 சர்வதேச போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கும் ஸ்ரேயாஸை ஜாம்பவான் தோனியுடன் ஒப்பிடுவது ஏற்க முடியாதது என்றாலும் ஸ்ரேயாஸிடம் தோனியாகும் எல்லாத் தகுதிகளும் இருக்கிறது என்றால் அது மிகையில்லை. எப்படியோ இந்தியாவின் பின் வரிசை பலமானால் போதும் என்பதே இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

ரஜினி + லோகேஷ் + கமல் ! கோலிவுட்டை வியப்பில் ஆழ்த்திய கூட்டணி !

0

ரஜினி + லோகேஷ் + கமல் ! கோலிவுட்டை வியப்பில் ஆழ்த்திய கூட்டணி !

ரஜினி நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாகவும் அதை கமல் தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

லோகேஷ் கனகராஜின் வளர்ச்சி தமிழ் சினிமா ரசிகர்களை வியக்க வைக்கும் அளவுக்கு நாளுக்கு நாள் எகிறிக்கொண்டு போகிறது. மாநகரம் படத்தில் மக்களுக்கு அறிமுகமில்லாத நடிகர்களை வைத்து இயக்கி ஹிட் அடிக்க வைத்த அவர், இரண்டாவது படத்தில் கார்த்தியுடன் சேர்ந்து கைதி எடுத்து சூப்பர் ஹிட்டைக் கொடுத்தார்.

ரஜினி + லோகேஷ் + கமல் ! கோலிவுட்டை வியப்பில் ஆழ்த்திய கூட்டணி !

அதனை அடுத்து தனது மூன்றாவது படத்தில் இப்போது தளபதி விஜய்யை இயக்கிக் கொண்டு இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடியும் முன்னரே 200 கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்யபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் மாஸ்டர் படம் முடியும் முன்னரே அடுத்த படத்தில் ரஜினியை இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தை கமல் தனது ராஜ்கமல் நிறுவனம் மூலம் தயாரிக்க இருக்கிறார் என்றும் அதில் அவரும் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. எப்படி ஆயினும் அதுதான் ரஜினி நடிக்கும் கடைசிப் படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த செய்தி வெளியானதில் கோலிவுட் ரசிகர்கள் ரஜினியையும் கமலையும் ஒன்றாக திரையில் பார்க்கும் நாள் என்று வருமோ என ஆர்வமாகக் காத்துக் கிடக்கின்றனர்.

வேலம்மாள் கல்லூரியில் கணக்கில் வராத 400 கோடி சொத்துகள்! பிரித்து மேய்ந்த புலனாய்வு துறையினர்!!

0

வேலம்மாள் கல்லூரியில் கணக்கில் வராத 400 கோடி சொத்துகள்! பிரித்து மேய்ந்த புலனாய்வு துறையினர்!!

தமிழகத்தில் பிரபலமான கல்விக் குழுமங்களில் வேலம்மாள் கல்லூரியும் ஒன்று. இக்கல்வி குழுமத்தில் நன்கொடை பெறுவதாக வந்த தகவலின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டது. இந்த கல்விக் குழுமத்தின் பெயரில் பள்ளிகள், கல்லூரிகள், ஆசிரமம் உட்பட அறுபது இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் முதல்கட்ட சோதனை நடத்தினர்.

வேலம்மாள் கல்வி நிறுவனத்தில் திடீரென வருமானவரி புலனாய்வு துறை அதிகாரிகள் நடத்திய முதல் கட்ட சோதனையில், சட்டப்படி கணக்கில் வராத 2 கோடி ரூபாய் பணமும், 400 கோடி ரூபாய் மதிப்பில் சொத்துகளும் உடனடியாக கண்டெடுக்கப்பட்டது. இந்த சோதனை நான்கு நாட்களாக நடத்தப்பட்டதாகும்.

சட்டத்திற்கு புறம்பான சொத்துக்கள் மீதான விசாரணை நடந்து வருகிறது. கல்வி நிறுவனங்கள் அதிகமான நன்கொடை வாங்கி வரும் சம்பவங்கள் நாளுக்குநாள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. பணத்தை கொள்ளை அடிக்கும் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமல்லாமல், இது போன்ற சம்பவங்களை அரசு உடனடியாக தடுத்து அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்கப்பட வேண்டும் என்பது பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

திக வினர் தொடை நடுங்கிகள்!! பிஜேபி ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து இதுதான்..? எச்.ராஜா அதிரடி பேச்சு!!

0

திக வினர் தொடை நடுங்கிகள்!! பிஜேபி ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து இதுதான்..? எச்.ராஜா அதிரடி பேச்சு!!

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், முதல் கையெழுத்தாக குறிப்பிட்ட இயக்கத்தின் அறக்கட்டளையை பொதுவுடைமை ஆக்குவோம் என்று எச்.ராஜா அதிரடியாக கூறியுள்ளார்.

சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா அவர்கள், தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் நாங்கள் போடும் முதல் கையெழுத்து திராவிட தந்தை பெரியாரின் அறக்கட்டளையை பொதுவுடைமையாக மாற்றப்படும் என்று தெரிவித்தார். அறக்கட்டளை என்பது ஒரு தனி மனிதனுக்கு சொந்தமாக இருக்க கூடாது என்றும், அது பொது மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும், பெரியார் பற்றி ரஜினி பேசிய சர்ச்சை பேச்சு குறித்த கேள்விக்கு: ஆரம்பத்தில் நாங்கள்தான் செய்தோம் என்று மார்தட்டிக் கொண்ட திகவினர் தற்போது அப்படியே மாற்றி நாங்கள் எதுவுமே செய்யவில்லை என்கிறார்கள். இதுபோன்ற சம்பவங்களின் மூலம் இந்துக்களின் எழுச்சியை காண முடிகிறது. இந்த எழுச்சியை பார்த்து திக அஞ்சுகிறது என்றும் திராவிடம் பேசுவோர் தொடை நடுங்கிகள் என்றும் கூறினார்.

நடிகர் ரஜினிகாந்த் பேசிய சர்ச்சையான பேச்சுக்கு எதிராக பல்வேறு திராவிட அமைப்புகளின் பெயரில் திருவல்லிக்கேணி மற்றும் கோவை காட்டூர் காவல் நிலையங்களில் வழக்கு தொடரப்பட்டன. இதையடுத்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்த 15 நாட்களுக்கு முன்னதாகவே சென்னை உயர்நீதி மன்றத்தை அணுகிய திராவிட இயக்கத்தினரை, காவல்துறையின் கால அவகாசம் முடியும் முன்பே நீதிமன்றத்தை அணுகியது ஏன்..? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதைத் தொடர்ந்து மனுக்கள் வாபஸ் பெற்றதால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டன.

காஷ்மீராக மாறி வருகிறது கேரளா: பாஜக பெண் எம்பியின் டுவிட்டால் பரபரப்பு!

0

கேரள மாநிலம் கொஞ்சம் கொஞ்சமாக காஷ்மீராக மாறி வருகிறது என பாஜக பெண் எம்பி ஒருவர் தனது டுவிட்டரில் கருத்தை பதிவு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பாஜகவினர் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பேரணிகள் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் கேரள மாநிலத்தில் உள்ள இந்துக்கள் அதிகமான அளவில் இருக்கும் பகுதி ஒன்றில் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பேரணி நடத்தியதாகவும் இதனை அடுத்து அந்த பகுதிக்கு கேரள அரசு குடிதண்ணீர் வழங்குவதை நிறுத்தி விட்டதாகவும் பெண் எம்பி ஷோபா தனது டுவிட்டர் பக்கத்தில் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் கேரளா மற்றொரு காஷ்மீர் ஆக மாறி வருவதாகவும் உடனடியாக இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த டுவிட்டுக்கு ஆதரவு தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவிக்கும் பல்வேறு தரப்பினர் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். சோபாவின் இந்த டுவிட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். மத நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் ஷோபா எம்பி தனது டுவிட்டரில் குறிப்பிட்டு இருப்பதாக அவர் அளித்த புகாரில் கூறியுள்ளார். இதன் அடிப்படையில் கேரளா போலீசார் ஷோபா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.