Home Blog Page 5792

கொரோனா வைரஸ் ரஷ்யா கூறிய அதிர்ச்சி தகவல்: உலக நாடுகள் கவலை

0

சீனாவை அச்சுறுத்தி வரும் கொரானோ என்ற வைரஸ் தற்போது அமெரிக்கா உள்பட பல நாடுகளில் பரவி விட்டது. குறிப்பாக ஜப்பான் தென் கொரியா தாய்லாந்து ஆகிய நாடுகளில் இந்த வைரஸின் தாக்கம் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. சீனாவில் மட்டும் இந்த வைரஸ் தாக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் உலக நாடுகள் கொரானோ வைரஸ் தங்கள் நாடுகளில் தாக்குவதை தடுப்பதற்காக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் கொரானோ வைரசை கட்டுப்படுத்த தடுப்பூசியை கண்டுபிடிக்க குறைந்தது ஆறு மாதங்கள் ஆகும் என்றும் அது வரை இந்த வைரஸ் பரவாமல் பாதுகாக்க வேண்டியது அந்தந்த நாடுகளின் அரசுகளின் கடமை என்றும் ரஷ்ய நாட்டின் சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த வைரைஸை கட்டுப்படுத்தும் தடுப்பூசி கண்டுபிடிக்க ஆறு மாதங்கள் ஆகும் என ரஷ்யா கூறியிருப்பதால் உலக நாடுகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளன. மேலும் இந்த வைரசை தடுக்க தடுப்பூசி கண்டுபிடிக்க அதிகமான நிதி தேவைப்படுவதாக கூறப்படுவதால் ஆறு மாதங்களுக்கு மேலாகவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இப்போதுதான் இந்த வைரஸ் மக்களிடையே பரவ ஆரம்பித்து இருப்பதால் அது எந்தவகையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று இன்னும் மருத்துவர்களுக்கு புரியாத புதிராக இருக்கிறது. எனவே இந்த வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடித்து ஆக வேண்டிய கட்டாய நிலையில் உலக நாடுகளின் மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ 1971 துக்ளக் பத்திரிகை: பெரியார் ஆதரவாளர்களின் பதில் என்ன?

0

நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் துக்ளக் ஆண்டு விழாவில் கலந்து கொண்ட போது 1971ஆம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற ஊர்வலத்தில் ராமர் சீதை படங்கள் அவமதிக்கப்பட்டதாகவும் பெரியார் முன்னிலையிலேயே இது நடைபெற்றதாகவும் தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பெரியாரின் ஆதரவாளர்கள் ரஜினிகாந்த் நடக்காத ஒன்றை தெரிவித்துள்ளார் என்றும் அதனால் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இந்த நிலையில் தற்போது ஊடகம் ஒன்றில் 1971ஆம் ஆண்டு வெளிவந்த துக்ளக் இதழின் புகைப்படம் வெளிவந்து உள்ளது. அதில் சேலம் பேரணி குறித்த விரிவான கட்டுரை ஒன்று ’கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது.

இந்த கட்டுரையில் சேலத்தில் பெரியார் தலைமையில் நடந்த மூடநம்பிக்கை ஊர்வலத்தில் ராமர் சிலை அவமதிக்கப்பட்டதாகவும் திமுக தவிர வேறு எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இந்த ஊர்வலத்தை அனுமதித்து இருக்காது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் நேற்று மன்னிப்பு கேட்க முடியாது என்று அதற்கு ஆதாரமாக அவுட்லுக் இதழை காண்பித்தபோது துக்ளக் இதழை அவர் காண்பிக்க வேண்டும் என பெரியார் ஆதரவாளர்கள் வலியுறுத்தினார்கள். தற்போது அந்த ஆதாரம் வெளிவந்துள்ளது. இதனையடுத்து பெரியாரின் ஆதரவாளர்கள் இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவார்களா? அல்லது வேறு ஏதேனும் ஆதாரங்கள் கேட்டு பிரச்சனை நீட்டித்துக் கொண்டு போவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

விஜய் அஜித் பாதைக்கு மாறும் சந்தானம்: புதிய வெற்றி கிடைக்குமா?

0

அஜித், விஜய், சூர்யா போன்ற நடிகர்கள் கடந்த சில ஆண்டுகளாக ஆக்சன் படங்களில் மட்டுமே நடித்து வருகின்றனர். இந்த நிலையில் இதுவரை ஹீரோவாக நடித்தாலும் காமெடி கதையை மட்டுமே தேர்வு செய்து நடித்து வந்த சந்தானம் முதல் முறையாக ஒரு ஆக்சன் படத்தில் நடிக்க உள்ளார்.

இயக்குனர் ஜான்சன் என்பவர் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் சந்தானம் இந்த படத்தில் ஒரு ஆக்சன் ஹீரோவாக அவதாரம் எடுப்பதாகவும் இது ஒரு வடசென்னையை மையமாக வைத்து கேங்ஸ்டர் படம் என்றும் கூறப்படுகிறது.

இயக்குனர் ஜான்சன் ஏற்கனவே சந்தானம் நடித்த ‘ஏ1’ என்ற வெற்றிப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு கேங்ஸ்டர்கள் வடசென்னையில் மோதும் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் சந்தானம் ஒரு பிரிவு கேங்ஸ்டர் லீடராக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்காக அவர் சண்டை பயிற்சியில் தற்போது ஈடுபட்டு வருவதாகவும் ஆக்சன் காட்சிகளில் டூப் இல்லாமல் நடிக்க அவர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. சந்தானத்தின் இந்த முயற்சி வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ரஜினியுடன் போனில் பேசிய சுப்பிரமணியம் சுவாமி: என்ன பேசினார்கள்?

0

தந்தை பெரியார் குறித்து சமீபத்தில் நடைபெற்ற துக்ளக் விழாவில் சர்ச்சைக்குரிய வகையில் ரஜினிகாந்த் பேசியதாக அவரை அரசியல் கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இருப்பினும் தான் பேசியது உண்மைதான் என்றும் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்கவோ மன்னிப்புக் கேட்கவோ முடியாது என்றும் நேற்று ரஜினிகாந்த் பேட்டி அளிக்க ரஜினியின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ரஜினிகாந்த் உள்பட நடிகர்கள் அரசியலுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நேற்று ரஜினியின் இந்த பேட்டி குறித்து தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

ரஜினி தனது நிலையில் உறுதியாக நின்றால் அவருக்காக நீதிமன்றத்தில் வாதாட தயார் என்றும் ராமர் மற்றும் சீதையை பெரியார் இழிவுபடுத்தியது உண்மைதான் என்றும் இந்த விஷயத்தில் ரஜினிக்குதான் உதவ முடிவு செய்துள்ளாதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் தன்னிடம் போனில் பேசியதாகவும் இந்த பிரச்சினை குறித்து அவரிடம் தான் சில அறிவுரைகள் கூறியதாகவும் அவருக்காக எந்த உதவி வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பதாக கூறியதாகவும் மீண்டும் ஒரு டுவிட்டில் சுப்பிரமணியம் சுவாமி குறிப்பிட்டுள்ளார். ரஜினியை கடும் எதிரியாக கடந்த சில வருடங்களாக கருதி வந்த சுப்பிரமணியம் சாமி அவருக்கு திடீரென உதவி செய்யும் அளவுக்கு நண்பர் ஆகிவிட்டதற்கு ஒருவகையில் பெரியார் தான் காரணம் என ரஜினி ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

சிங்கப்பூரின் பிரம்படி பற்றி உங்களுக்கு தெரியுமா..?

0

சிங்கப்பூரின் பிரம்படி பற்றி உங்களுக்கு தெரியுமா..?

பெண்ணை தவறான முறையில் பழித்து குற்றங்கள் செய்து சிங்கப்பூர் போலீசிடம் சிக்கினால், கை கால்களைக் கட்டி குனிய வைத்து , பின் புறத்தில் வலிமையான குச்சியால் அடி பின்னிவிடுவார்கள்,
ஒவ்வொரு அடியும் ஒவ்வொரு ஜென்மம் வலிக்கும் அளவிற்கு வச்சி செய்துவிடுவார்கள்.

நாலு பிரம்படிக்கு பதிலா அபராதம் 5 லட்சம் சிங்கப்பூர் டாலர் கட்டுகிறாயா என்றால், பிரம்படிக்கு பயந்து கொண்டு உடனே கட்டி விடுவார்கள். பிரம்படி மீது அந்தளவிற்கு எல்லோருக்கும் பயம்.

அந்த பிரம்பானது மூங்கில் போன்ற ஒரு மரத்தின் குச்சி 1.5 இன்ச் தடிமனாகவும் 4 அடி நீளமாகவும் இருக்கும். அடிப்பதற்கு ஒரு நாள் முன்பு ஊற வைப்பார்கள் அப்பதான் குச்சி உடையாமல் இருக்குமாம்.

தண்டனைக்கு உரியவர்களை முழு நிர்வாணமாகக்  கட்டி வைத்து மேலே சிறுநீரகத்தை பாதுகாக்கும் தடுப்பு வைத்து அடிப்பார்கள். முதல் அடியிலேயே பெரும்பாலானோர் மயக்கம் அடைந்து விடுவார்கள். பின்பு மயக்கம் தெளிய வைத்து தெளிய வைத்து அடிப்பார்கள். மொத்தமாக 24 அடி அடிக்கலாம் என சட்டம் அனுமதி வழங்கியுள்ளது.

4 அடி என்றால் ஒரே காவல் அதிகாரியே அடிப்பார்.  அதற்கும் மேல் என்றால் இரண்டு மூன்று பேர்  மாறிக் கொள்வார்கள். உச்சக்கட்ட விசையோடு ஓங்கி அடிக்க வேண்டும் என்பதே விதி. மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்திலே தடி இறங்கும்.

மயக்கம் தெளிய வைக்க அல்லது மருத்துவரீதியாக வலுவாக இருக்கிறாரா எனப் பரிசோதிக்க மருத்துவர் உடன் இருப்பார். 4 அடிகளுக்கு மேல் வாங்கினாலே பின்பக்க தசை கிழிந்து விடும். 5 அடிகளுக்கு மேல் என்றால் ஒரு வருடம் நடக்கவே முடியாது. புண் ஆறினாலும் தழும்புகள் மறையாது.

பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வது சிங்கபூரிலே இல்லை.  ஏன்னா இந்த அடி தான். ரவுடித் தனம், திருட்டு, கருப்பு பணம், கொள்ளை என்று அனைத்தையும் ஒழித்தது  இந்த அடிதான். 24 அடி வாங்கியவன் வாழ் நாளிலே திரும்ப ஒழுங்காக நடக்கக் கூட முடியாது.

தமிழ் நாட்டிலும் இதுபோன்ற சட்டங்களை கொண்டு வந்தால் சமூகத்தில் நடக்கும் தவறுகள் நிச்சயமாக குறையும். இந்த பிரம்படி சட்டம் தமிழ்நாட்டில் ஒரு வருஷம் நடைமுறையிலே இருந்தாலே போதும் தமிழ்நாடும் குற்றங்கள் குறைந்த சிங்கப்பூராகி விடும்…!!                

இப்பவே இப்படியா?அப்ப அரசியல்ல இறங்குனா? ரஜினிய வச்சு செய்யும் பெரியாரிஸ்ட்கள்!

0

இப்பவே இப்படியா?அப்ப அரசியல்ல இறங்குனா? ரஜினிய வச்சு செய்யும் பெரியாரிஸ்ட்கள்!

துக்ளக் விழாவில் பேசி சர்ச்சையைக் கிளப்பிய ரஜினி அதற்கு விளக்கம் அளிக்கிறேன் என்று இன்று பேசி மீண்டும் சர்ச்சையைப் பெரிதாக்கியுள்ளார்.

துக்ளக் 50 ஆவது ஆண்டுவிழாவில் பேசிய ரஜினி ‘சேலத்தில் 1971 ஆம் ஆண்டு பெரியார் நடத்திய ராமர் மற்றும் சீதை ஊர்வலம் பற்றி சிலக் கருத்துகளைப் பேசி சர்ச்சைகளைக் கிளப்பினார். அதற்குப் பெரியாரியவாதிகள் மற்றும் திமுகவினர் ஆதாரப்பூர்வமான விளக்கங்களை வெளியிட்டு மறுப்புத் தெரிவித்தனர். மேலும் மன்னிப்புக் கேட்காவிட்டால் ரஜினியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்தனர்.

இதனால் இன்று தனது வீட்டில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த ரஜினி ‘நான் கற்பனையாக எதையும் பேசவில்லை. இந்து குழுமத்தின் ப்ரண்ட்லைன் ஆங்கில நாளிதழ் வெளியிட்ட செய்தியினை வைத்துதான் பேசினேன். நான் கேட்டவற்றை மற்றவர்கள் சொன்னதை வைத்துதான் பேசினேன். அதனால் நான் யாரிடமும் மன்னிப்புக் கேட்கமுடியாது என்பதை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்தார்.

ரஜினியின் இந்த பேச்சில் ‘பிரண்ட்லைன் இந்து குழுமத்தைச் சேர்ந்தது என்பது தகவல் பிழையாகும். மேலும் ரஜினி சுட்டுக்காட்டிய கட்டுரை 2017 ஆம் ஆண்டு வெளியானது. ஆகவே 1971 ஆம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்வைப் பற்றி அப்போது வெளியான நாளிதழ்களில் இருந்து ஆதாரம் காட்டாமல் 2017 ல் வெளியான கட்டுரையை ஆதாரம் காட்ட்வேண்டியது ஏன் உள்ளிட்ட கேள்விகள் எழுகின்றன.

இப்பவே இப்படியா?அப்ப அரசியல்ல இறங்குனா? ரஜினிய வச்சு செய்யும் பெரியாரிஸ்ட்கள்!

இதையடுத்து ரஜினியின் இந்த பேச்சை அடுத்து திமுக மற்றும் திகவினர் எதிர்வினைகள் உக்கிரமாக ஆரம்பித்துள்ளனர். இணைய உலகத்தில் கோலோச்சும் அவர்கள் சூப்பர்ஸ்டார் அல்ல #சூப்பர்சங்கிரஜினி, #ரஜினிஒருமெண்டல் உள்ளிட்ட ஹேஷ்டேக்குகளை உருவாக்கி ட்ரண்ட் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

அதே சமயம் ரஜினிக்கு ஆதரவாக பாஜகவினர் பெரியாருக்கு எதிரான ஹேஷ்டேக் ஒன்றை உருவாக்கியும் உள்ளனர். எப்படியோ பாஜகவுக்கு ஆதரவாக இறங்கிய ரஜினியின் இமேஜ் டோட்டலாக தமிழ்நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக காலியாகிக் கொண்டிருக்கிறது. சில வருடங்களுக்கு முன் விஜயகாந்த் தன் உளறல் பேச்சுகளால் சமூகவலைதளங்களில் நடத்தப்பட்டதை போல ரஜினி நடத்தப்படுவாரோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

#ரஜினிஒருமெண்டல், #சூப்பர்சங்கிரஜினி

உபர் ஈட்ஸ் நிறுவனத்தை வாங்கிய சொமாட்டோ ! எவ்வளவுக்குத் தெரியுமா ?

0

உபர் ஈட்ஸ் நிறுவனத்தை வாங்கிய சொமாட்டோ ! எவ்வளவுக்குத் தெரியுமா ?

உபர் ஈட்ஸ் நிறுவனத்தின் இந்திய வர்த்தகங்களை சொமாட்டோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்தியாவின் பிரபல உணவு டெலிவரி நிறுவனங்களாக ஸ்விக்கி, ஸ்மொட்டா மற்றும் உபர் ஈட்ஸ் போன்றவை இருந்து வந்தன. இந்நிலையில் உபர் ஈட்ஸ் நிறுவனத்தின் இந்தியாவின் மொத்த வர்ததகங்களும் இன்று முதல் ஸொமட்டோ நிறுவனத்துக்குக் கைமாறியுள்ளன.

2017-ம் ஆண்டு இந்தியாவில் ஆன்லைன் உணவு டெலிவரி உபர் ஈட்ஸ் நிறுவனம் 41 நகரங்களின் 26,000 உணவகங்கள் கைவசம் வைத்திருந்தது. ஸ்விக்கி மற்றும் ஸொமாட்டோ போன்ற நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க முடியாமல் திணறியது.

இதையடுத்து ஸொமாட்டோ நிறுவனத்துடனான பேச்சுவார்த்தையை நீண்டகாலமாக நடத்தி வந்துள்ளது. சொமாட்டோ நிறுவமனம் 150 மில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மீண்டும் மூலப் பத்திர விவகாரத்தை கிளப்பும் H ராஜா! கடும் கோபத்தில் திமுகவினர்

0

மீண்டும் மூலப் பத்திர விவகாரத்தை கிளப்பும் H ராஜா! கடும் கோபத்தில் திமுகவினர்

சமீபத்தில் சென்னையில் நடைபெற்று முடிந்த துக்ளக் பத்திரிக்கையின் பொன்விழாவில் பத்திரிக்கை ஆசியரான மறைந்த சோவின் நெருங்கிய நண்பரான ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.அவர் இந்த விழாவில் கலந்து கொள்வதாக அறிவித்த போதே அது அரசியலாக பேசப்பட்டது. இந்நிலையில் அனைவரும் எதிர்பார்த்த மாதிரியே அவர் பேச்சு தற்போது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

அதாவது விழாவில் கலந்து கொண்டு ரஜினிகாந்த் பேசிய போது,1971 ஆம் ஆண்டு உடை இல்லாமல் இருக்கும் ராமன் சிலைக்கு செருப்பு மாலை போட்டு பெரியார் ஊர்வலம் சென்றார் என்று குறிப்பிட்டார்.  மேலும் அன்றைக்கு அதை யாரும் துணிந்து பத்திரிகையில் பதிவு செய்யவில்லை என்றும், ஆனால்,துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியரான ‘சோ’ அதை அட்டைப்படத்தில் போட்டுக் கடுமையாகக் கண்டித்தார் என்றும் குறிப்பிட்டார்.

இதனையடுத்து அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதிக்கு இது சிக்கலை ஏற்படுத்தியது. இதனால் இந்த செய்தியை வெளியிட்ட துக்ளக் பத்திரிக்கையை ரத்து செய்தார்கள். ஆனால் இதனைக்கண்டு கொஞ்சமும் சளைக்காமல் மீண்டும் அச்சடித்து பிளாக்கில் பத்திரிக்கையை சோ வெளியிட்டார். இதனையடுத்து அப்புத்தகம் பிளாக்கில் அதிக விலைக்கு விற்பனையானது. இதன் மூலமாக பத்திரிக்கை உலகில் சோ மிகவும் பிரபலமானார் என்றும் நடிகர் ரஜினிகாந்த் அந்த விழாவில் பேசினார்.

நடிகர் ரஜினிகாந்த் பேசிய இந்த கருத்துக்கு பலர் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கருத்து தெரிவித்து வந்தனர். குறிப்பாக பெரியார் கொள்கையை பின்பற்றுபவர்கள் நடிகர் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள். இந்நிலையில் ரஜினிகாந்த் இன்று தனது போயஸ்தோட்ட இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து இதற்காக விளக்கம் அளித்தார். அதில் தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்றும், பேசிய கருத்து உண்மை என்றும் அதற்கான ஆதாரத்தை காட்டி உறுதியாக கூறினார்.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் பேச்சு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, ரஜினிகாந்த் அவர்கள் தான் தெரிவித்த கருத்துக்கு ஆதாரமாக பத்திரிக்கை செய்தியின் நகலைக் காட்டியதற்கு திக வினர் ஒரிஜினலை காட்டச் சொல்கின்றனர். முதலில் நீங்கள் முரசொலி இட மூலப்பத்திரத்தை காட்டுங்கள் என திமுகவையும், திராவிடர் கழகத்தை ஒட்டு மொத்தமாக விமர்சனம் செய்துள்ளார்.

ஏற்கனவே இவர் திராவிடர் கழகத்தினரின் மிரட்டல்கள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கவலைப்பட தேவையில்லை என்றும், பெரியார் குறித்து ரஜினிகாந்த பேசிய விவகாரத்தில்அவர் மீது சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது” என்று கூறியிருந்தார்.H.ராஜாவின் இந்த கருத்துக்கு திமுக மற்றும் திகவினர் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதில், ராஜா அவர்களே சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அனைத்து ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது  உங்களிடம் ஏதேனும் ஆவணங்கள் இருந்தால் நீங்கள் நீதிமன்றத்தை நாடலாம் என்றும் இந்திய அளவில் அதிக பொய் செய்திகளை உருவாக்கி பரப்புவது பாஜக மற்றும் மோடி ஆதரவாளர்கள் தான் என்றும், இதை ஒரு தனியார் தொலைக்காட்சி ஆய்வறிக்கையில் கூறியுள்ளது என்றும் பதிலடியாக கூறி விமர்சித்து வருகிறார்கள். 

நடந்து முடிந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஆரம்பித்து வைத்த இந்த முரசொலி அலுவலகத்தின் மூலப் பத்திர விவகாரம் திமுகவினருக்கு பெரும் சோதனையாக அமைந்துள்ளது.

ரஜினியின் ஹிட்படத்தின் பார்ட் 2 ல் தனுஷ் : ஜோடியாக கீர்த்தி சுரேஷ் !

0

ரஜினியின் ஹிட்படத்தின் பார்ட் 2 ல் தனுஷ் : ஜோடியாக கீர்த்தி சுரேஷ் !

ரஜினி நடிப்பில் 1981 ஆம் ஆண்டு வெளியான நெற்றிக்கண் படத்தின் பார்ட் 2 வில் தனுஷ் நடிக்க இருப்பதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் இப்போது கதைப்பஞ்சம் அதிகளவில் உள்ளது. அதனால் கதைத் திருட்டு பிரச்சனைகள் ஒருப்பக்கம் எழ, மற்றொரு பக்கம் ரீமேக் மற்றும் பார்ட் 2 படங்களும் வரிசைக் கட்டி உருவாகி வருகின்றன. ஆனால் அவை எதிர்பார்த்தபடி வெற்றி பெறுகின்றனவா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

இந்நிலையில் ரஜினி, சரிகா மற்றும் மேனகா நடிப்பில் கடந்த 1981 ஆம் வருடம் வெளியான படம் நெற்றிக்கண். இரு வேடங்களில் நடித்த ரஜினி ஒரு கதாபாத்திரத்தில் ஏக பத்தினி விரதனாகவும் மற்றொரு கதாபாத்திரத்தில் பெண் பித்தனாகவும் நடித்திருந்தார். இந்த படத்தை ரஜினியின் ஆஸ்தான இயக்குனர் எஸ் பி முத்துராமன் இயக்கி இருந்தார்.

ரஜினியின் ஹிட்படத்தின் பார்ட் 2 ல் தனுஷ் : ஜோடியாக கீர்த்தி சுரேஷ் !

இந்த படம் மிகப்பெரிய ஹிட்டானது. படம் வெளியாகி 39 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இப்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. இதில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கிறார். (முதல் பாகத்தில் நடித்தது அவரது தாயார் மேனகா).

இந்தப் படத்தை யார் இயக்குவது மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் யார் என்பது குறித்த விவரம் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

பாமகவை பின்பற்றும் ஆம் ஆத்மி கட்சி! மகிழ்ச்சி தெரிவித்த மருத்துவர் ராமதாஸ்

0

பாமகவை பின்பற்றும் ஆம் ஆத்மி கட்சி! மகிழ்ச்சி தெரிவித்த மருத்துவர் ராமதாஸ்

தற்போது டெல்லியில் ஆட்சி செய்து வரும் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சிக் காலம் வருகின்ற பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து அங்கு புதிய அரசை தேர்வு செய்வதற்காக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.70 உறுப்பினர்களைக் கொண்டுள்ள டெல்லி சட்டப்பேரவைக்கு வருகின்ற பிப்ரவரி 8 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் 14.01.2020 ஆம் தேதி காலை 11.00 மணி தொடங்கியது. தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்ய ஜனவரி 21 ஆம் தேதியான இன்று தான் கடைசி நாள் ஆகும். இதனையடுத்து வேட்பு மனு மீதான பரிசீலனை வருகின்ற ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியிட விருப்பம் இல்லாதவர்கள் வேட்பு மனுவை திரும்ப பெற ஜனவரி 24 ஆம் தேதி கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து வாக்குப்பதிவானது வருகின்ற பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பிப்ரவரி 11 ஆம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் டெல்லி அரசியல் நிலவரம் சூடு பிடித்துள்ளது.நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் தற்போதைய ஆளும் கட்சியான அரவிந்த் கெர்ஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் செயல்பட்டு வருகிறது.

இதற்காக அக்கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில்  இலவசக் கல்வி, மாணவர்களுக்கு இலவச பேருந்து வசதி, தடையில்லா மின்சாரம், பெண்களுக்கு பாதுகாப்பு போன்ற 10 வாக்குறுதிகளை அளித்துள்ளனர். ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ள இந்த தேர்தல் அறிக்கையில் வழங்கப்பட்ட பல சலுகைகள் தமிழக அரசியலில் பாட்டாளி மக்கள் கட்சி வழங்கியுள்ள தேர்தல் வாக்குறுதியில் ஏற்கனவே வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டெல்லி சட்டமன்ற தேர்தலுக்காக ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் வழங்கியுள்ள வாக்குறுதிகளில் பல ஏற்கனவே பாமக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது என்று அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் பதிவிட்ட ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது, “தில்லி சட்டமன்ற தேர்தலுக்கான ஆம்ஆத்மி கட்சி தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட 10 வாக்குறுதிகளில் இலவசக் கல்வி, மாணவர்களுக்கு இலவச பேருந்து வசதி, தடையில்லா மின்சாரம், பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட பெரும்பான்மையான வாக்குறுதிகள் பாமகவால் ஏற்கனவே வழங்கப்பட்டவை என்பதில் மகிழ்ச்சி!” என்று அவர் தெரிவித்துள்ளார்.