ரஜினியுடன் போனில் பேசிய சுப்பிரமணியம் சுவாமி: என்ன பேசினார்கள்?

0
59

தந்தை பெரியார் குறித்து சமீபத்தில் நடைபெற்ற துக்ளக் விழாவில் சர்ச்சைக்குரிய வகையில் ரஜினிகாந்த் பேசியதாக அவரை அரசியல் கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இருப்பினும் தான் பேசியது உண்மைதான் என்றும் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்கவோ மன்னிப்புக் கேட்கவோ முடியாது என்றும் நேற்று ரஜினிகாந்த் பேட்டி அளிக்க ரஜினியின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ரஜினிகாந்த் உள்பட நடிகர்கள் அரசியலுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நேற்று ரஜினியின் இந்த பேட்டி குறித்து தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

ரஜினி தனது நிலையில் உறுதியாக நின்றால் அவருக்காக நீதிமன்றத்தில் வாதாட தயார் என்றும் ராமர் மற்றும் சீதையை பெரியார் இழிவுபடுத்தியது உண்மைதான் என்றும் இந்த விஷயத்தில் ரஜினிக்குதான் உதவ முடிவு செய்துள்ளாதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் தன்னிடம் போனில் பேசியதாகவும் இந்த பிரச்சினை குறித்து அவரிடம் தான் சில அறிவுரைகள் கூறியதாகவும் அவருக்காக எந்த உதவி வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பதாக கூறியதாகவும் மீண்டும் ஒரு டுவிட்டில் சுப்பிரமணியம் சுவாமி குறிப்பிட்டுள்ளார். ரஜினியை கடும் எதிரியாக கடந்த சில வருடங்களாக கருதி வந்த சுப்பிரமணியம் சாமி அவருக்கு திடீரென உதவி செய்யும் அளவுக்கு நண்பர் ஆகிவிட்டதற்கு ஒருவகையில் பெரியார் தான் காரணம் என ரஜினி ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

author avatar
CineDesk