Home Blog Page 5807

பொது மக்களிடம் பேராதரவை பெற்ற திரெளபதி! பெரியாரிஸ்டுகள்! போலிப் போராளிகள்! புள்ளீங்கோ கதறல்!

0

பொது மக்களிடம் பேராதரவை பெற்ற திரெளபதி! பெரியாரிஸ்டுகள்! போலிப் போராளிகள்! புள்ளீங்கோ கதறல்!

தமிழ்ப் பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தியும், சமூகத்தில் நடந்த திட்டமிட்ட நாடக காதல் சம்பவங்களையும் மையப்படுத்தி உருவான திரைப்படமே திரெளபதி. இப்படத்தின் டிரெய்லர் கடந்த மூன்றாம் தேதி வெளியிடப்பட்டு பொது மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றது.

பொது மக்களிடம் பேராதரவை பெற்ற திரெளபதி! பெரியாரிஸ்டுகள்! போலிப் போராளிகள்! புள்ளீங்கோ கதறல்!

டிரெய்லர் வெளியிட்ட முதல் நாளே யூ டியூப், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் அனைத்து சமுதாய மக்களின் சார்பில் பலத்த ஆதரவை பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படம் கிரவுட் பண்டிங் முறையில் தயாரிக்கப்பட்ட படம் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது மக்களிடம் பேராதரவை பெற்ற திரெளபதி! பெரியாரிஸ்டுகள்! போலிப் போராளிகள்! புள்ளீங்கோ கதறல்!

படத்தின் வசனங்கள் பெண்களின் பாதுகாப்பை மையப்படுத்தி தெறிக்கவிடும் அளவிற்கு சமூக வலைதளங்களில் மீம்ஸ் வழியாக பிரதிபலிக்கிறது. ரஜினியின் தர்பார் படத்திற்கு கூட இவ்வளவு ஆதரவு இல்லை என்பதற்கு சமூகவலைதளங்களே சாட்சி.

விழுப்புரம், தருமபுரி, அரியலூர் போன்ற வடமாவட்டங்களில் திட்டமிட்டு நடந்த நாடக காதல் சம்பவங்களை வைத்து படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது என திரெளபதி திரைப்பட இயக்குனர் மோகன்.ஜி பேட்டியளித்துள்ளார்.

பொது மக்களிடம் பேராதரவை பெற்ற திரெளபதி! பெரியாரிஸ்டுகள்! போலிப் போராளிகள்! புள்ளீங்கோ கதறல்!

இப்படத்தின் வசனங்கள் எங்களை தாக்குவது போல் உள்ளதென்று சில புள்ளீங்கோ கதறுவதால் படத்தின் ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இணையத்தில் அடிக்கடி டிஷூம் டிஷூம் நடக்கிறது.

இப்படத்திற்கு எதிராக பெரியார் திராவிட கழகத்தின் தலைவர் கு.ராமகிருஷ்ணன் மற்றும் பெரியாரிஸ்டுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமல்லாமல் இவர்களது தரப்பில் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடுத்துள்ளனர்.

இன்னொரு பெண்ணை ஏமாற்றிய பறையிசை பயிற்சி நடத்தும் சக்தி என்பவருக்கு உடுமலை கவுசல்யாவை இரண்டாவதாக சாதிமறுப்பு திருமணத்தை நடத்தி வைத்தவர்களில் கு.ராமகிருஷ்ணனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவியிடம் ஆபாச படம் காட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி

0

மாணவியிடம் ஆபாச படம் காட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி

சென்னையில் பள்ளி மாணவியிடம் மொபைல் போனில் ஆபாச படத்தை காட்டி பாலியல் சீண்டல் செய்ததாக அதிமுக நிர்வாகியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

வட சென்னை பகுதியான வண்ணாரப்பேட்டையிலுள்ள மாடல் லைன் பகுதியில் வசிக்கும் பாளையம் ரவி தற்போது அதிமுக கட்சியில் வட்டத் தலைவராக பதவி வகித்து வருகிறார்.68 வயதாகும் இவர் இதற்கு முன் எம்.ஜி.ஆர் மன்ற நிர்வாகியாக இருந்தவர் நாளடைவில் கட்சி பொறுப்பிற்கு வந்துள்ளார்.

இவர் வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழில் செய்து வரும் இந்திராணி என்பவரின் மகள் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். 13 வயதே ஆகும் அந்த மாணவி, ரவி தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தன்னிடம் தவறாக நடக்க முயற்சிப்பதாக அவரது தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து 1089 என்ற உதவி எண்ணைத் தொடர்பு கொண்ட மாணவியின் தாய் நடந்த விவரத்தை தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்டு இது குறித்து ரவி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. ரவி மீது கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த மகளிர் காவல் துறையினர் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ரவியைக் கைது செய்தனர். இதனையடுத்து அவரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தியதில் மாணவியிடம் அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது காவல் துறையினருக்கு தெரிய வந்துள்ளது.

மாணவியிடம் ஆபாச படம் காட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி

மேலும் பாதிக்கப்பட்ட மாணவியை மருத்துவ பரிசோதனை செய்த போது அவரிடம் பாலியல் ரீதியாக ஈடுபட்டது மருத்துவ அறிக்கையின் மூலமாக உறுதி படுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாணவியிடம் தவறாக நடந்து கொண்ட ரவியை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்துக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.

இதனையடுத்து ஆளும் கட்சியான அதிமுகவில் இவர் பதவி வகிப்பதால் காவல்துறையினர் கைது செய்யாமல் விடுவித்து விடுவார்கள் என்று எண்ணி அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் மற்றும் மாணவியின் உறவினர்கள் என அனைவரும் கல்லறை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து மறியல் நடைபெற்ற பகுதிக்கு வந்த காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசி அங்கிருந்து கூட்டத்தைக் கலைத்தனர். இந்த மறியல் சம்பவத்தினால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேர அளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

வாக்குறுதிகள் மட்டுமே போதுமானதல்ல! பணியை விரைவுபடுத்த வலியுறுத்தும் மருத்துவர் ராமதாஸ்

0

வாக்குறுதிகள் மட்டுமே போதுமானதல்ல! பணியை விரைவுபடுத்த வலியுறுத்தும் மருத்துவர் ராமதாஸ்

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வழங்கப்பட்டு வரும் 69% இடஒதுக்கீட்டை எப்படி பாதுகாப்பது? என்பது குறித்தும் அதற்கான பணிகளை விரைவாக ஆரம்பிக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் “69% இடஒதுக்கீட்டை எப்படி பாதுகாப்பது? சாதிவாரி கணக்கெடுப்பே ஒரே தீர்வு!” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வழங்கப்பட்டு வரும் 69% இடஒதுக்கீட்டை முழுமையாக பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஆளுனர் உரையில் தமிழக அரசு உறுதியளித்துள்ளது. பல ஆண்டுகளாக இத்தகைய வாக்குறுதிகள் மட்டுமே அளிக்கப்பட்டு வருவது போதுமானதல்ல; மாறாக, இடஒதுக்கீட்டை காப்பதற்கான பணி விரைவுபடுத்தப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

சமூகநீதியின் தொட்டில் தமிழ்நாடு என்றெல்லாம் பெருமை பேசப்பட்டாலும் கூட, தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு மீது கடந்த 10 ஆண்டுகளாக கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது என்பது தான் மறுக்க முடியாத உண்மை ஆகும். இட ஒதுக்கீட்டின் அளவு 50%-க்கும் கூடுதலாக இருக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த நிலையில், தமிழகத்தில் மட்டும் 69% இட ஒதுக்கீடு வழங்கப்படுவதை எதிர்த்து சில தொண்டு நிறுவனங்கள் கடந்த 1994-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

அந்த வழக்கில் 2010-ஆம் ஆண்டு தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு தொடரலாம்; ஆனால், 69% இட ஒதுக்கீடு தேவை என்பதை நியாயப்படுத்துவதற்காக, அடுத்த ஓராண்டுக்குள் தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் விவரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என நீதிபதிகள் ஆணையிட்டிருந்தனர். ஆனால், அதன்பின் 10 ஆண்டுகள் ஆகியும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. அதன் விளைவாக தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.

உச்சநீதிமன்றத்தில் எந்த நேரமும் அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம். அப்போது தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டுப் பிரிவினரின் மக்கள்தொகை விவரம் தாக்கல் செய்யப்படாவிட்டால், தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு ரத்து செய்யப்படக்கூடும் என்பது தான் உண்மை. உச்சநீதிமன்றம் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானது அல்ல. அதேநேரத்தில் நியாயப்படுத்தக்கூடிய அளவுக்கு புள்ளிவிவரங்கள் இல்லாவிட்டால் எந்த நீதிமன்றமும் இட ஒதுக்கீட்டை அனுமதிக்காது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை ஓராண்டில் நடத்தி முடிக்கும்படி ஆணையிட்டு, பத்தாண்டுகள் ஆகும் நிலையில் இன்று வரை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாததை உச்சநீதிமன்றம் ஒருபோதும் ஏற்காது. இத்தகைய சூழலில் உடனடியாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதைத் தவிர, தமிழகத்தில் 69% இடஒதுக்கீட்டை பாதுகாக்க வேறு வழியே இல்லை என்பது தான் உண்மை.

தமிழகத்தில் 69% இட ஒதுக்கீட்டை பாதுகாப்பது மட்டுமே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கு காரணமல்ல. இந்தியாவில் உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்கியுள்ள நிலையில், அதனால் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்வதற்காக பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் இடஒதுக்கீட்டு அளவையும் அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதற்கும் சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்.

தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது மிகவும் எளிதானது என்பது மட்டுமன்றி, எதிர்ப்புகள் இல்லாததும் ஆகும். ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களைக் கொண்டு இரு வாரங்களில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி, அதில் கிடைத்த புள்ளிவிவரங்களை வகைப்படுத்தும் பணியையும் முடித்து விட முடியும். தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, இட ஒதுக்கீட்டை அதிகரிக்க சட்ட ரீதியாகவோ, சமூகரீதியாகவோ எந்த எதிர்ப்பும் எழப்போவதில்லை.

கால் நூற்றாண்டுக்கு முன் இந்தியாவில் தமிழகத்தில் மட்டும் தான் 69% இட ஒதுக்கீடு நடைமுறையில் இருந்து வந்தது. ஆனால், இப்போது மராட்டியத்தில் 78%, சத்தீஸ்கரில் 72%, ஹரியானாவில் 70% என பல மாநிலங்களில் தமிழகத்தை விட அதிக இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், தமிழகத்திலும் இட ஒதுக்கீட்டை தேவைக்கு ஏற்ற வகையில் உயர்த்த வேண்டிய நேரம் வந்துவிட்டது.

எனவே, தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும். அதில் கிடைக்கும் புள்ளி விவரங்களின் அடிப்படையில் இடஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் அதில் கூறியுள்ளார்.

நிர்பயா குற்றவாளிகளுக்கு வரும் 22 ந் தேதி தூக்கு!

0

நிர்பயா குற்றவாளிகளுக்கு வரும் 22 ந் தேதி தூக்கு!

டெல்லியில் 2012-ம் ஆண்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட ‘நிர்பயா’ வழக்கு குற்றவாளிகள் உள்பட சிலரது மரண தண்டனை உறுதி ஆகியுள்ள நிலையில் விரைவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்தியாவில் உள்ள பல்வேறு சிறைகளில் மரண தண்டனை நிறைவேற்றும் வசதி இருந்தாலும், குறிப்பிட்ட சில சிறைகளில் மட்டுமே தூக்கு கயிறு தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக பீகார் மாநில பக்சர் சிறையிலேயே அதிகமாக இந்த கயிறுகள் தயாரிக்கப்படுகின்றன. இவ்வாறு தயாரிக்கப்படும் தூக்கு கயிற்றின் சிறப்பு அம்சம் என்னவென்றால் அதை உடனடியாக பயன்படுத்த வேண்டும்.

நீண்ட நாட்களுக்கு பாதுகாப்பாக வைத்து இருந்து இதை பயன்படுத்த முடியாது.கடைசியாக அப்ஸல் குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது இந்நிலையில் திகார் சிறையில் ஒரே தூக்கு மேடை உள்ள நிலையில் மேலும் சில தூக்கு மேடைகள் தயாராகி வருவதாக தகவல் வந்தன.

இதோடு திகார் சிறையில் குழிகள் தோண்டும் பணிகள் நடப்பதாக கூறப்பட்டது. குற்றவாளிகள் எந்த நேரத்திலும் தூக்கிலிடப்படலாம் என கூறப்பட்டது. இதனிடையே குற்றவாளிகளுக்கு வரும் 22ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கு நிறைவேற்றப்படும் என டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

பண்டிகை நேரத்தில் குறைந்த தங்கத்தின் விலை?

0

அமெரிக்கா, ஈரான் பரபரப்பு அதிகரித்து உள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் கச்சா எண்ணையில் முதலீட்டை குறைத்து தங்கத்தின் மீது தங்கள் முதலீட்டை அதிகரித்துள்ளனர். இதனால் தங்கத்தின் விலை கிடு கிடு வென உயர்ந்தது.
குறிப்பாக கடந்த 6 நாட்களாக தங்கம் விலை அதிக அளவில் அதிகரித்தது.

இந்த 6 நாட்களில் தங்கம் விலை ரூ.1,288 உயர்ந்தது குறிப்படத்தக்கது.இதனால் சாமானிய மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த நிலையில் இன்று வளைகுடா நாடுகளில் சுமூக நிலை திரும்பி இருப்பதாலும், சர்வதேச சந்தையில் மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பதாலும் தங்கம் விலை குறைந்து இருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் இன்றைய தங்கத்தின் விலை வருமாறு:

ஆபரண தங்கம் 22 carat கிராம் ஒன்றுக்கு நேற்றைய விலையை விட 33 ரூபாய் குறைந்து 3863 ரூபாய் ஆகவும், ஒரு பவுன் தங்கம் நேற்றைய விலையை விட 264 ரூபாய் குறைந்து பவுன் ஒன்றுக்கு 30904ரூபாயாகவும் உள்ளது.

அதே போல் 24 கேரட் தூய தங்கத்தின் விலை1கிராம் 4056 ரூபாய் ஆகவும் 10 கிராம் தூய தங்கத்தின் விலை ரூபாய் 40560 ஆகவும் உள்ளது.வெள்ளியின் விலையைபொறுத்தவரை கிராம்க்கு அதிகரித்து ரூபாய் 51.20ஆகவும், 1கிலோ ரூபாய் 51200க்கும் வர்த்தகம் செய்யப்பட்டது.

 

குடல்புண், சளி உள்ளவர்கள் எடுத்து கொள்ளவேண்டிய பானம்?

0

கற்றாழை வறட்சியான பகுதிகளில் வளரும் ஒரு மருந்துச் செடி ஆகும். உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு அழகுச் சாதனங்கள் மருந்துப் பொருட்கள் தயாரிப்பதற்கு கற்றாழை பெரிதும் பயன்படுத்த படுகின்றது.

கற்றாழை இலையிலிருந்து எடுக்கப்படும் “ஜெல்”சருமத்தின் ஈரத்தன்மையை (Moisture) பாதுகாக்கப் பயன்படுகிறது. இதன் தேவைக்கு இயற்கை சூழ்நிலையிலிருந்து கற்றாழைச் செடிகள் சேகரிக்கப்பட்டு பக்குவப்படுத்தியபிறகு மருந்துப் பொருட்களில் பயன்படுத்தப்படுகின்றது.

சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கற்றாழைச்சாறு, இருமல், சளி, குடல்புண் ஆகியவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகின்றது. கடும் வயிற்றுப்புண், தோலில் ஏற்படும் தீக்காயம், அரிப்பு வெட்டுக்காயங்கள் ஆகியவற்றிற்கும் மருந்தாகப் பயன்படுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

வாரத்தில் நாலு! தினமும் ஆறு!! வேலை நேரத்தை குறைத்த பின்லாந்து பிரதமர்?

0

வாரத்தில் நாலு! தினமும் ஆறு!! வேலை நேரத்தை குறைத்த பின்லாந்து பிரதமர்?

ஒரு வாரத்தில் நான்கு நாட்களும், அந்த நான்கு நாட்களில் ஆறு மணி நேரம் மட்டுமே வேலை இருந்தால் போதும் என்ற திட்டத்தை பின்லாந்து நாட்டின் இளம் பிரதமர் சன்னா மாரின் முன்வைத்துள்ளார்.

ஊழியர்களின் வேலை நாட்களை குறைப்பதோடு, வேலை நேரத்தையும் 8 மணி நேரத்தில் இருந்து 6 மணி நேரமாக குறைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இவ்வாறு நடைமுறைபடுத்துவதால் மக்கள் தங்களின் குடும்பங்களுடன் அதிக நேரத்தை செலவிடுவதுடன் கலை, அறிவியல் மற்றும் விருப்பமான பொழுதுபோக்கு விசயங்களில் நேரத்தை செலவிட வழிவகுக்கும் என கூறியுள்ளார்.

பணியாளர்களின் வேலை நேரத்தை குறைத்து சம்பளத்தை குறைக்காமல் வழங்கினால் நிறுவனங்களுக்கு பல்வேறு சுமை கூடும் என்று சர்ச்சை எழுந்தாலும், விடுமுறை கிடைக்கும் மகிழ்ச்சியில் புத்துணர்வுடன் வேலை பார்க்கும் ஊழியர்களால் உற்பத்தி கூடும் என்ற ஆதரவு கருத்துக்களும் எழுந்துள்ளது.

இந்திய நாட்டில் இருக்கும் பல்வேறு நிறுவனங்களின் வேலை நேரத்தையும் குறைத்தால் நன்றாக இருக்கும் என்பது பெரும்பாலானவர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

ஆஸ்திரேலியாவில் கருகிய 50 கோடி விலங்குகள்..! கண்ணீரை வரவழைக்கும் கருணையில்லா காட்டுத்தீ..!!

0

ஆஸ்திரேலியாவில் கருகிய 50 கோடி விலங்குகள்..! கண்ணீரை வரவழைக்கும் கருணையில்லா காட்டுத்தீ..!!

ஆஸ்திரேலியாவின் வெப்பநிலை உயர இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட பருவநிலை மாற்றமே காரணம் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட காட்டுத்தீ  காற்றின் வேகத்தில் மிக வேகமாக பரவும் என இயற்கை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆஸ்திரேலியாவில் கருகிய 50 கோடி விலங்குகள்..! கண்ணீரை வரவழைக்கும் கருணையில்லா காட்டுத்தீ..!!

இதுவரை இந்த காட்டுத்தீயில் சிக்கி 20 பேர் பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகள் தீயில் சாம்பலாகின, இதன்காரணமாக அங்கிருந்து வெளியேறிய மக்கள் விக்டோரியா கடற்கரையில் தற்காலிகமாக தங்கியுள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் கருகிய 50 கோடி விலங்குகள்..! கண்ணீரை வரவழைக்கும் கருணையில்லா காட்டுத்தீ..!!

இந்த காட்டுத் தீ விபத்தினால் 50 கோடி விலங்குகள் உயிரிழந்துள்ளதாக சிட்னி பல்கலையின் பேராசிரியர் கிறிஸ் டிக்மேன் கூறிய கருத்து பிபிசி செய்தி நிறுவனத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் நியூ செளத் வேல்ஸ் மாகாணத்தின் காடுகள் அழிக்கப்படுவதால் விலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து இயற்கைக்கான உலகளாவிய நிதியத்திற்காக ( WWF ) மற்ற ஆய்வாளர்களுடன் ஆலோசித்து எழுதிய அறிக்கையை வைத்தே இந்த எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் கருகிய 50 கோடி விலங்குகள்..! கண்ணீரை வரவழைக்கும் கருணையில்லா காட்டுத்தீ..!!

ஒரு ஹெக்டேருக்கு சராசரியாக 20.7 பறவைகள், 129.5 ஊர்வன மற்றும் 17.5 பாலூட்டிகள் ஆகியன வாழ்வதாக குறிப்பிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் காட்டுத்தீ ஏற்பட்ட நிலப்பரப்புகளை வைத்து உயிரிழப்பு கணக்கீட்டை கூறியுள்ளனர்.

தற்போது மூன்று மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்புகளில் காட்டுத்தீ பரவியுள்ளது. இதனடிப்படையில் பார்த்தால் 480 மில்லியன் பறவைகள், பாலூட்டிகள், ஊர்வன போன்றவை பாதிக்கப்பட்டிருக்கும்.

ஆஸ்திரேலியாவில் கருகிய 50 கோடி விலங்குகள்..! கண்ணீரை வரவழைக்கும் கருணையில்லா காட்டுத்தீ..!!

காடுகளை நம்பியே வாழும் பல்வேறு உயிரினங்களும், வேறு இடங்களுக்கு நகரமுடியாத விலங்குகளும் காட்டுத்தீயில் சிக்கி இருக்கும். தப்பிய விலங்குகள் தங்க இடமின்றி உணவின்றி உயிரிழக்க கூடும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
காட்டுத்தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

ஆஸ்திரேலியாவில் கருகிய 50 கோடி விலங்குகள்..! கண்ணீரை வரவழைக்கும் கருணையில்லா காட்டுத்தீ..!!

கருப்பு நிறமாக மாறிய டெஹ்ரான் நகரம்; கதறி அழுத மூத்த தலைவர் !!! டிரம்ப் தலைக்கு 536 கோடி பரிசு ??? உலகின் தலைப்பு செய்தியாகும் ஈரான்

0

பாக்தாத்தில் உள்ள விமான நிலையம் அருகே அமெரிக்கா கடந்த வெள்ளிக்கிழமை நடத்திய தாக்குதலில் ஈரானின் ரகசியப் படைப் பிரிவுத் தலைவா் காசிம் சுலைமானி உள்பட 9 போ் உயிரிழந்தனா். இந்தச் சம்பவத்தால், ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மீண்டும் போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், வளைகுடா நாடுகளில் பதற்றம் நிலவுகிறது. இந்த நிலையில், காசிம் சுலைமானி இறுதி ஊர்வலம் நேற்று  நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

ஈராக்கில் இருந்து கொண்டுவரப்பட்ட சுலைமானியின் உடலுக்கு  ஈரான் தலைநகர்  டெஹ்ரானில்  நேற்று  இறுதி சடங்குகள் நடந்தன. அங்குள்ள  ஒரு பல்கலைக்கழகத்தில் அவரது  உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.  சுலைமானியின்  உடலுக்கு  அஞ்சலி  செலுத்துவதற்கு லட்சக்கணக்கான  மக்கள்  அந்த  பகுதியில்  குவிந்தனர். அவர்கள்  அனைவரும் கறுப்பு நிற  உடையில்  வந்திருந்தனர்.  இதனால் டெஹ்ரான்  நகரமே  கறுப்பு நிறமாக  மாறியது  போல  காட்சியளித்தது.  மக்கள்  தங்கள்  கைகளில்  கறுப்பு மற்றும்  ஈரான்  நாட்டு  கொடிகளை  ஏந்தியபடி  அமெரிக்காவுக்கு  எதிராக கோஷங்களை  எழுப்பி பேரணியாகச்  சென்றனர்.

சுலைமானி  உடலுக்கு,  ஈரானின்  மூத்த மத  தலைவர்  அயதுல்லா  அலி காமெனி  தலைமையில்  இறுதி  சடங்குகள்  நடந்தன.  இதில்  அதிபர்  ஹசன் ருஹானி  உள்பட  முக்கிய  தலைவர்கள்  பலரும்  கலந்து  கொண்டனர்.  இறுதி சடங்கின் போது, அயதுல்லா அலி  காமெனி  கண்ணீர்  விட்டுக் கதறி  அழுதார். சுலைமானியின்  இறுதி சடங்கு  நிகழ்ச்சிகள் அனைத்தும் அந்நாட்டு ஊடகங்களில் நேரடியாக  ஒளிபரப்பப்பட்டது. பின்னர்  சுலைமானியின்  உடல் பெரிய  வாகனத்தில்  வைக்கப்பட்டு, மக்கள்  வெள்ளத்தில் மிதந்தவாறே கொண்டு  செல்லப்பட்டு  நல்லடக்கம்  செய்யப்பட்டது.

இதற்கிடையே ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகளை வெளியேற்றுவது தொடர்பாக அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி  டிரம்ப்,  ஈராக்  மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.

முன்னதாக ஈரானின் மூத்த அதிகாரி ட்ரம்பிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பேசியதாவது “ ஈரானில் 8 கோடி மக்கள் வசிக்கின்றனர். எனவே அதனை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்  டிரம்ப் தலையை  கொண்டு  வருபவருக்கு  8 கோடி அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.576 கோடி) பரிசு  வழங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், ஈரானைச் சேர்ந்த ஒவ்வொருவரும் தங்கள் சார்பில் 1 அமெரிக்க டாலர் வழங்கி உதவ வேண்டும் “ எனவும்  வலியுறுத்தினார்.

மும்பை பயங்கரவாத தாக்குதலை நினைவூட்டுகிறது; மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து உத்தவ் தாக்ரே கருத்து

0

ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவா்கள் பேரணியின்போது முகமூடி அணிந்த மா்ம நபா்கள் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்து, மாணவா்களைத் தாக்கிய சம்பவம், நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு கட்சி தலைவர்களும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கண்டனம் தெரிவித்து உள்ளார்.


இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது “ டெல்லியில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது முகமூடி அணிந்து சென்று தாக்குதல் நடத்தியவர்கள் கோழைகள். மாணவர்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய அதிபயங்கர தாக்குதலை எனக்கு நினைவுபடுத்துகிறது. இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட வேண்டும். நாட்டில் மாணவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக உணருகிறார்கள். குற்றவாளிகளை நீதியின் முன் கொண்டு வந்து நிறுத்துவதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு காரணமானவர்களை டெல்லி போலீசார் கண்டுபிடிக்க தவறினால் அவர்களும் கோர்ட்டு கூண்டில் நிற்பார்கள்.


மராட்டியத்தில் இதுபோன்ற சம்பவத்தை அனுமதிக்க மாட்டோம். இங்கு மாணவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். மாணவர்களை காயப்படுத்தும் எந்த நடவடிக்கையையும் ஊக்கப்படுத்த மாட்டேன். டெல்லி சம்பவத்தை கண்டித்து மும்பை கேட்வே ஆப் இந்தியாவில் போராட்டம் நடத்தும் மாணவர்களின் கோபம் எனக்கு புரிகிறது. அவா்களை பாதிக்கும் வகையிலான எந்தவொரு நடவடிக்கையையும் பொறுத்துக் கொள்ளமாட்டேன். மாணவா்களின் மீதான தாக்குதலுக்குப் பொறுப்பேற்று, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பதவி விலக வேண்டுமென்று சிலா் கோரிக்கை விடுப்பது தொடா்பாக செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். இதற்கு பதிலளித்த உத்தவ் தாக்கரே, ‘‘தாக்குதலில் ஈடுபட்டவா்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கே தற்போது முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்த விவகாரத்தை அரசியலாக்குவது தற்போது அவசியமற்றது” என்று கூறினார்.