முதலிடத்தில் தமிழகம் !!!

0
72

தேசிய நல்லாட்சி தினத்தை முன்னிட்டு மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்தத்துறை மிகச்சிறந்த நிர்வாகத்திறன் உள்ள மாநிலங்களின் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. பெரிய மாநிலங்கள், வடகிழக்கு மற்றும் மலை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என மூன்று வகைகளாகப் பிரித்து இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.

இந்தப் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது. மஹாராஷ்டிரா இரண்டாவது இடத்தையும் கேரளா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. ஒடிசா, பீகார், உத்தரப்பிரதேசம், கோவா மற்றும் ஜார்ஜண்ட் ஆகிய மாநிலங்கள் நிர்வாகத்திறன் மிகவும் குறைவாக உள்ள மாநிலங்களாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.

வடகிழக்கு மாநிலங்களில் ஹிமாச்சல பிரதேசம் சிறந்த மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஜம்மு காஷ்மீர், நாகலாந்து, மணிப்பூர், அருணாச்சல பிரதேசம் கடைசி இடங்களைப் பிடித்துள்ளன. யூனியன் பிரதேசங்களில் புதுச்சேரி முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், “அறிவியல்பூர்வமாக பல்வேறு அளவுகோலின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது” என்றார்.

வேளாண்மை, வர்த்தகம், மனிதவள மேம்பாடு, சுகாதாரம், உள்கட்டமைப்பு, பொருளாதார நிர்வாகம், நீதித்துறை, பாதுகாப்பு, சுற்றுச்சூழல், பாதுகாப்பு போன்ற பத்துக்கும் மேற்பட்ட துறைகளின் செயல்பாடுகளை அடிப்படையாக வைத்து இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. வேளாண்மை மற்றும் அதன் தொடர்புடையத் துறைகளில் மத்தியப் பிரதேசம், மிசோரம் போன்ற மாநிலங்கள் சிறப்பாகச் செயல்படுகின்றன.

வளர்ச்சி விகிதம், உணவு தானியங்களின் உற்பத்தி, பால் மற்றும் இறைச்சி உற்பத்தி, பயிர்க் காப்பீடு போன்றவற்றை அடிப்படையாக வைத்தும் மதிப்பிடப்பட்டுள்ளது. மாநிலங்களின் வர்த்தகம் மற்றும் தொழில்களின் செயல்திறனை மதிப்பிடுகையில், ஜார்கண்ட், உத்தரகண்ட் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கின்றன.

author avatar
Parthipan K