சவுதி அரேபியாவில் பெண்களுக்கான மேலும் ஒரு கட்டுப்பாடு நீக்கம்!

0
79

சவுதி அரேபியாவில் பெண்களுக்கான மேலும் ஒரு கட்டுப்பாடு நீக்கம்!

சவுதி அரேபியாவில் கடந்த பல ஆண்டுகளாக பெண்களுக்கு என பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தது. பெண்கள் கார் ஓட்ட கூடாது என்றும், ஆண் துணை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது போன்ற பல கட்டுப்பாடுகள் இருந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு பட்டத்து இளவரசராக பதவி ஏற்ற முகமது பின் சல்மான் பல கட்டுப்பாடுகளை தளர்த்தினார்

பெண்கள் கார் ஓட்டலாம் என்றும் ஆண் துணையின்றி பெண்கள் தனியாக செல்லலாம் என்றும் சில கட்டுப்பாடுகளை தளர்த்தி நிலையில் தற்போது பெண்களுக்கான மேலும் ஒரு கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது

சவுதி அரேபியாவில் உள்ள ஹோட்டல்களில் ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக நுழைவாயில்கள் இதுவரை இருந்து வந்தன. அதே போல் ஹோட்டல் உள்ளேயும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே திரை போடப்பட்டிருக்கும்

இந்த நிலையில் தற்போது ஆண்கள் மற்றும் பெண்கள் என தனித்தனி நுழைவு வாயில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தனித்தனி நுழைவாயில் வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை அந்தந்த ஹோட்டல் நிர்வாகங்கள் முடிவு செய்து கொள்ளலாம் என்றும் சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது. இதனை அடுத்து படிப்படியாக மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என பெண்கள் தரப்பில் இருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது

author avatar
CineDesk