சேரலாதன் ராமகிருஷ்ணன் எங்களுடைய வாடிக்கையாளர் தான்-எங்கள் கிளையில் தான் வாட்ச் விற்பனை!

சேரலாதன் ராமகிருஷ்ணன் எங்களுடைய வாடிக்கையாளர் தான்-எங்கள் கிளையில் தான் வாட்ச் விற்பனை!

சேரலாதன் ராமகிருஷ்ணன் எங்களுடைய வாடிக்கையாளர் தான் எங்கள் கிளையில் தான் வாட்ச் விற்பனை செய்யப்பட்டது என பிரபல வாட்ச் கடையின் கிளை மேலாளர் தகவல். சென்னையில் ரூ.3 லட்சத்திற்கு ரஃபேல் வாட்சை வாங்கியதாக கூறிய அண்ணாமலை, அதற்கான பில்லை இன்று வெளியிட்டார். அதில் சேரலாதன் இராமகிருஷ்ணன் என்ற பெயரில் கடந்த 2021ம் தேதி விற்பனை செய்ய்ப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அதில் அவருடைய தொடர்பு எண்ணும், ஜி.எஸ்.டி எண்ணும் அடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கோவை பந்தய சாலையில் இங்கிவரும் ஜிம்சன் … Read more

அண்ணாமலை ரஃபேல் வாட்ச் பில் கொடுக்காமல் ஏதோ ஒரு சீட்டை காட்டி சீட்டிங் !

அண்ணாமலை ரஃபேல் வாட்ச் பில் கொடுக்காமல் ஏதோ ஒரு சீட்டை காட்டி சீட்டிங் !

அண்ணாமலை இன்று பேட்டியை சீட்டிங்கில் ஆரம்பித்துள்ளார், சம்பந்தப்பட்டவர்கள் வழக்கு தொடர்ந்தால் அண்ணாமலை தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள மாட்டார் நீதிமன்றங்களுக்கு செல்லத்தான் நேரம் அதிகமாக இருக்கும் – அண்ணாமலை ரஃபேல் வாட்ச் பில் கொடுக்காமல் ஏதோ ஒரு சீட்டை காட்டி சீட்டிங் செய்துள்ளார் அவர் சீட்டிங் அண்ணாமலை. சொத்து விவரங்களை 15 நாட்களில் அண்ணா அறிவாலயத்தில் வழங்க வேண்டும். தமிழக மக்கள் ஆருத்ரா நிறுவனத்தில் பணம் முதலீடு செய்துவிட்டு வயிற்று எரிச்சலுடன் உள்ளனர், 84 கோடி ரூபாய் வரை … Read more

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு!! முன்னாள் உதவி ஆணையர் குற்றவாளி என அறிவிப்பு !

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு!! முன்னாள் உதவி ஆணையர் குற்றவாளி என அறிவிப்பு !

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், முன்னாள் உதவி ஆணையரை குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. அவருக்கான தண்டனை விவரத்தை அறிவிக்க வரும் ஏப்ரல் 19ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை முகப்பேரை சேர்ந்தவர் வசந்தகுமார், 1991 முதல் 2000ம் ஆண்டு வரை தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றி வந்தார். மதுரை உதவி ஆணையராக பணி ஓய்வு பெற்ற இவர், பதவிக் காலத்தில், வருமானத்துக்கு அதிகமாக 28 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக … Read more

16ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் பேரணி!! தமிழக காவல்துறை சார்பில் அனுமதி!

16ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் பேரணி!! தமிழக காவல்துறை சார்பில் அனுமதி!

வருகிற 16ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழக காவல்துறை சார்பில் அனுமதி வழங்கி உள்ள நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றி பேரணியில் ஈடுபட வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். பேரணியின் போது எந்த விதமான பாடலோ அல்லது சைகைகளோ காண்பிக்காமல் நடக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொது மக்களுக்கு இடையூறாகவும், வாகன நெரிசல் ஏற்படாத வகையிலும் பேரணி நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரணியில் கலந்துகொள்வோர் எந்தவிதமான குச்சி, லத்தி … Read more

 வேலூரை சேர்ந்த திருநங்கை ஐஸ்வர்யாவுக்கு 2023-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருது!!

 வேலூரை சேர்ந்த திருநங்கை ஐஸ்வர்யாவுக்கு 2023-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருது!!

வேலூர் காட்பாடியை சேர்ந்த திருநங்கை ஐஸ்வர்யாவுக்கு 2023-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருது முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். திருநங்கைகளின் நலனிற்காக சிறப்பான முறையில் சேவைபுரிந்து, அவர்களுக்குள் முன்மாதிரியாக திகழும் திருநங்கை ஒருவர், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவால் தேர்வு செய்யப்பட்டு அவர்களை சிறப்பிக்கும் பொருட்டு சிறந்த திருநங்கை விருது, 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமைச் … Read more

காவல் பகுதியில் ரோந்து பணிகளை கண்காணிக்க புதிய செயலி!!

காவல் பகுதியில் ரோந்து பணிகளை கண்காணிக்க புதிய செயலி!!

தாம்பரம் மாநகர காவல் பகுதியில் ரோந்து பணிகளை கண்காணிக்க புதிய செயலியை மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தொடங்கி வைத்தார். தாம்பரம் மாநகர எல்லைக்குட்பட்ட அனைத்து காவல் நிலையங்களில் உள்ள பகல் மற்றும் இரவு ரோந்து பணிகளை நவீன படுத்தும் வகையில் ரோந்து போலீசார் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட பகுதியில் ரோந்து பணி செய்கின்றார்களா என்பதை அந்தந்த போலீஸ் அலுவலகத்திலிருந்து கண்காணிக்க புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய செயலியை தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் அறிமுகப்படுத்தி … Read more

கஞ்சா கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை-சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு!

கஞ்சா கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை-சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு!

155 கிலோ கஞ்சா கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை மாதவரம் ரவுண்டானா பகுதியில் 155 கிலோ கஞ்சா கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசிய த்கவலின் அடிப்படையில், போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் கார் ஒன்றை வழிமறித்து சோதனை நடத்தியதில், பை ஒன்றில் 155 … Read more

சேலம் வனவாசி சேர்ந்த ராணுவவீரர் கமலேஷ் உடலுக்கு அரசு மரியாதை வழங்க வேண்டும்!! பொதுமக்கள் போராட்டம்!

சேலம் வனவாசி சேர்ந்த ராணுவவீரர் கமலேஷ் உடலுக்கு அரசு மரியாதை வழங்க வேண்டும்!! பொதுமக்கள் போராட்டம்!

சேலம் வனவாசி சேர்ந்த ராணுவவீரர் கமலேஷ் உடலுக்கு அரசு மரியாதை வழங்க வேண்டும் என்று கூறி, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சாலையில் ராணுவவீரர் உடல் கொண்டுவரப்பட்ட ஆம்புலன்ஸ் இருந்து மாற்று வாகனமான ராணுவ வீரர்கள் வந்த ஆம்னி வாகனத்தில் முயற்சித்ததால் பொதுமக்கள் ஆம்புலன்சில் ஏற்ற விடாமல் தடுத்தனர். இந்த நிலையில் சேலம் பகுதியில் இருந்து ராணுவ வாகனம் எடுத்துவரப்பட்டது. வாகனம் வந்தவுடன் ராணுவ வாகனத்தில் ராணுவ வீரர் உடல் ஏற்றப்பட்டு ஊர் எல்லைப் … Read more

தேனியில் பள்ளி தலைமை ஆசிரியரை பள்ளியின் தாளாளர் தாக்கிய விவகாரம்!

தேனியில் பள்ளி தலைமை ஆசிரியரை பள்ளியின் தாளாளர் தாக்கிய விவகாரம்!

தேனியில் பள்ளி தலைமை ஆசிரியரை பள்ளியின் தாளாளர் தாக்கிய விவகாரம். மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பள்ளிக்கு பூட்டி சீல் வைப்பு. தேனி நகரில் இயங்கி வந்த மஹாராஜா தொடக்க பள்ளியில் 28 மாணவர்கள் கல்வி பயிண்று வந்த நிலையில் இந்த பள்ளியின் தாளாளரான அன்பழகன் தேனியில் செயல்பட்டு வந்த மற்றோரு அரசு உதவி பெறும் பள்ளியான முத்தையா அரசு உதவி பெறும் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்தும் வந்துள்ளார். இது தொடர்பான புகார் கல்வி துறை அதிகாரிகளுக்கு … Read more

பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் எந்த ஒரு இடையூறும் ஏற்படுத்த கூடாது!! ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த உத்தரவு!

பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் எந்த ஒரு இடையூறும் ஏற்படுத்த கூடாது!! ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த உத்தரவு!

பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எந்த ஒரு இடையூறும் ஏற்படுத்தாமல் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த வேண்டும் என உத்தரவு. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மீறி செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை உத்தரவு. தமிழகத்தில் வருகிற 16ஆம் தேதி 46 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், அதற்கு தமிழக காவல்துறையும் அனுமதி வழங்கியது. இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்துவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகள் … Read more