ஏப்பம் மற்றும் வாய்வுத் தொல்லையா!! அப்போ இதை ஃபாலோ பண்ணுங்க!!

0
43

ஏப்பம் மற்றும் வாய்வுத் தொல்லையா!! அப்போ இதை ஃபாலோ பண்ணுங்க!!

நாம் தினமும் சந்திக்கும் வாய்வு பிரச்சனையே பல நோய்களை உண்டாக காரணமாகி விடுகிறது. அறிகுறி வரும் போதே இதை அலட்சியம் செய்யகூடாது. என்னதான் மருத்துவர்கள் எச்சரித்தாலும் இது சின்ன விஷயம் தானே என்று பலரும் சாதாரணமாக இருந்து விடுகிறோம். உடலில் உண்டாகும் சிறு சிறு ஆரோக்கிய குறைபாடுகள் தான் அதிகப்படியான நோய்கள் உருவாக காரணமாக அமைகின்றன.

ஒவ்வொரு வேளையும் சாப்பிட்டு முடித்ததும் செரிமானம் ஆக வேண்டும். ஏப்பம் வர வேண்டும். அடுத்த வேளை உணவு தாமதமாகும் போது பசிக்க வேண்டும். ஆனால் மாறாக சாப்பிட்டு முடித்ததும் வயிறு உப்புசமாக இருப்பது, ஏப்பம் வராமல் செரிமானம் ஆகாமல் இருப்பது, பசி யின்மையோடு மந்தமாக சோர்வாக இருப்பது எல்லாமே வாய்வுத்தொல்லை தான்.

காரணம்:

காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு வாய்வு தொல்லை வருவதற்கு வாய்ப்பு அதிகமாக உண்டு. சிலர் உணவு சாப்பிடும் நேரத்தில் சாப்பிடாமல் அந்த நேரத்தில் டீ, காபி பானங்கள் குடிப்பது.சிலர் பசி எடுக்கும் போதும் சாப்பிடாமல் தள்ளி போடும் போதும் இந்த வாய்வு அதிகமாகிறது. மிக முக்கியமாக சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளாதது தான் வாயு தொல்லைக்கு காரணம். உணவு பொருள்களில் மசாலா, காரம் நிறைந்த உணவுகளை எடுக்கும் போது பிரச்சனை ஏற்படுகிறது.

பாதிப்பு:

வயிற்றுப்புண், மூட்டுவலி பிரச்சனை இருப்பவர்களுக்கு இந்த வலி அதிகரிக்க வாய்ப்புண்டு.

சாப் பிட்டு முடித்ததும் நெஞ்சு எலும்பு கூட்டில் நடுவில் ஒருவித எரிச்சல் இருக்கும்.

ஏப்பம் வரும் போது சாப்பிட்ட உணவு எதுக்களிக்கும். இவை தான் பின்னாளில் குடல் புண், அல்சர் இப்படி ஒவ்வொன்றாக பிரச்சனை வந்துவிடும்.

எனவே ஆரம்ப அறிகுறியிலேயே எப்படி தடுப்பது என்பதை பார்ப்போம்,

தீர்வு:

1.இஞ்சி 2.பூண்டு 3. சீரகம் 4. பெருங்காயம். இந்த பொருட்களை அன்றாட உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நீரில் சீரகத்தை சேர்த்து கொதிக்க வைத்து தினமும் காலையில் குடித்து வர வேண்டும்.

மோரில் சீரகத்தை சேர்த்து குடிக்க வேண்டும். பின் வருவனவற்றை தொடர்ந்து முயற்சி செய்தால் வாய்வு மற்றும் ஏப்பம் தொல்லையிலிருந்து விடுபடலாம்.