விக்ரம் படத்தில் மேலும் ஒரு சின்னத்திரை நடிகை! யார் தெரியுமா?

Another actress joins in Kamalhaasan's vikram film

விக்ரம் படத்தில் மேலும் ஒரு சின்னத்திரை நடிகை! யார் தெரியுமா? நடிகர் கமல்ஹாசன் தற்போது நடிக்கும் விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது.இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி,பகத் பாசில்,அர்ஜுன் தாஸ்,ஷிவானி நாராயணன்,காளிதாஸ் ஜெயராம்,நரேன் ஆகியோரும் நடிக்கின்றனர்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தீவிர கமல் ரசிகர் ஆவார்.தான் சினிமாக் கற்றுக் கொண்டது நடிகர் … Read more

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தில் விஜய்யும் நடிக்கிறாரா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

Actor sharuk khan joins with vijay for his next film of director atlee

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தில் விஜய்யும் நடிக்கிறாரா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்! இயக்குனர் அட்லி தமிழ் சினிமாவில் ராஜா ராணி திரைப்படம் மூலம் அறிமுகம் ஆனார்.முன்னதாக இவர் இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார்.எந்திரன் மற்றும் நண்பன் திரைப்படங்களில் இவர் உதவி இயக்குனராக இருந்தார்.இவரின் முதல் படமான ராஜா ராணி 2013ம் ஆண்டு வெளியாகி மிகப் பெரும் வெற்றியைப் பெற்றது.இந்த படத்திற்கு இவர் தமிழ்நாடு அரசின் சிறந்த வசனத்திற்கான விருதை வென்றார். இந்த படத்தில் ஆர்யா … Read more

எம்ஜிஆரின் நண்பர் பாடலாசிரியர் புலவர் புலமைப்பித்தன் காலமானார்! தலைவர்கள் அஞ்சலி!

Poet pulavar pulamaipithan passed away

எம்ஜிஆரின் நண்பர் பாடலாசிரியர் புலவர் புலமைப்பித்தன் காலமானார்! தலைவர்கள் அஞ்சலி! புலமைப்பித்தன் தமிழில் புகழ்பெற்ற எழுத்தாளரும் பாடலாசிரியரும் ஆவார்.இவர் கோவையில் பிறந்தவர்.பாடல் வரிகளுக்காக நான்கு முறை தமிழக அரசின் விருதுகளை இவர் பெற்றுள்ளார்.2001ம் ஆண்டு தமிழக அரசு இவருக்கு பெரியார் விருது வழங்கி பெருமை செய்தது.பிரபல திரைப்படப் பாடலாசிரியரும் முன்னாள் சட்டசபை துணை தலைவருமான புலமைப்பித்தன் 1968ஆம் ஆண்டு நடிகர் எம்ஜிஆர் நடித்த குடியிருந்த கோயில் படத்தின் மூலம் திரைப்பட பாடலாசிரியராக அறிமுகமானவர். தொடர்ந்து நடிகர்கள் சிவாஜி,ரஜினி,கமல் … Read more

ஹர்பஜன் சிங் அர்ஜுன் நடித்துள்ள பிரண்ட்ஷிப் படம் டீசர் வெளியானது

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இருந்த ஹர்பஜன் சிங் முதல் முறையாக தமிழில் நடிக்கும் பிரண்ட்ஷிப் என்னும் படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் மிக சிறந்த சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்த பஞ்சாபை சேர்ந்த ஹர்பஜன் சிங் தமிழ் திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். பிரன்ட்ஷிப் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் ஒரு எதிர்மறையான வேடத்தில் நடித்துள்ளார். அதேபோல் சதீஷ், குக் வித் … Read more

நடிகர் மம்முட்டியின் பிறந்தநாள் பகிர்வு! மம்முட்டி தமிழில் தவறவிட்ட முக்கிய திரைப்படம் எது தெரியுமா?

நடிகர் மம்முட்டியின் பிறந்தநாள் பகிர்வு! மம்முட்டி தமிழில் தவறவிட்ட முக்கிய திரைப்படம் எது தெரியுமா? மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டிக்கு இன்று 70 வயதாகிறது.ஐந்து தசாப்த கால வாழ்க்கையில் மம்முட்டி பல மொழிகளில் 400 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.முஹம்மது குட்டி பனபரம்பில் இஸ்மாயிலாகப் பிறந்த மம்முட்டி ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.படங்களின் மீதான அவரது காதல்தான் அவரை மோலிவுட்டில் தள்ளியது. 1997ல் வெளிவந்த இருவர் திரைப்படம் தமிழ் சினிமா மற்றும் அரசியலின் மூன்று தூண்களான எம்ஜி ராமச்சந்திரன் … Read more

மின்சாரக் கனவு திரைப்படத்திற்கு பிறகு இணையும் முன்னணி நடிகர்கள்! இயக்குனர் வெங்கட்பிரபுவின் அடுத்த முயற்சி!

Director venkatprabhu's next big with minsara kanavu film heroes

மின்சாரக் கனவு திரைப்படத்திற்கு பிறகு இணையும் முன்னணி நடிகர்கள்! இயக்குனர் வெங்கட்பிரபுவின் அடுத்த முயற்சி! தமிழ் சினிமாவில் 1997ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் மின்சார கனவு.இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக அரவிந்த்சுவாமி நடித்திருப்பார்.மேலும் பிரபுதேவா,கஜோல்,நாசர்,எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகியோரும் நடித்திருப்பார்கள்.இந்த படத்தை ராஜீவ் மேனன் இயக்கியிருப்பார்.ஏவிஎம் ப்ரொடக்சன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்தது. இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.முக்கோண காதல் கதையாக இந்த படம் இருந்தது.இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.இந்த படத்தின் பாடல்களும் பெரிய வெற்றி … Read more

வெளிவராத புதிய படத்தின் காட்சிகள் இணையத்தில் பரவியதால் அதிர்ச்சி அடைந்த இயக்குனர்!

The director was shocked as the footage of the unreleased new film spread on the internet!

வெளிவராத புதிய படத்தின் காட்சிகள் இணையத்தில் பரவியதால் அதிர்ச்சி அடைந்த இயக்குனர்! சிறப்பு மிக்க வரலாற்று காவியமான கல்கியின் படைப்பில் வெளிவந்த  பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுக்க முயற்சிகள் நடைபெற்று வந்தன. இதை இயக்குனர் மணிரத்னம் இயக்குவதாகவும் சொல்லப்பட்டது. படப்பிடிப்பு ஆரம்பித்த சில நாட்களிலேயே கொரோனாவினால் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டது. அதன் காரணமாக அந்த படப்பிடிப்பு பல மாதங்கள் முடங்கிய நிலையிலேயே இருந்தது. அதன் பின்னர் வேறு படங்களில் நடிக்க சென்ற நடிகர், நடிகைகளை ஒன்று … Read more

ஷில்பா மஞ்சுநாத் வெளியிட்ட கவர்ச்சிப் புகைப்படங்கள்! வாயைப் பிளந்த ரசிகர்கள்!

Actress shilpa manjunath sizzling photos gone viral

ஷில்பா மஞ்சுநாத் வெளியிட்ட கவர்ச்சிப் புகைப்படங்கள்! வாயைப் பிளந்த ரசிகர்கள்! நடிகை ஷில்பா மஞ்சுநாத் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.இவர் 2016ம் ஆண்டு கன்னடத் திரைப்படம் ஒன்றில் நடிகையாக அறிமுகம் ஆனார்.பின்பு மலையாள மொழியிலும் நடிக்கத் தொடங்கினார்.இவர் தமிழில் காளி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இந்த திரைப்படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்திருப்பார்.கிருத்திகா உதயநிதி இந்த படத்தை இயக்கியிருப்பார்.விஜய் ஆண்டனி பிலிம் … Read more

நடிகர் விஜய் உடன் கூட்டணி சேரும் இயக்குனர் பா.ரஞ்சித்! என்ன கதை தெரியுமா?

Director pa.ranjith directs actor vijay as superhero

நடிகர் விஜய் உடன் கூட்டணி சேரும் இயக்குனர் பா.ரஞ்சித்! என்ன கதை தெரியுமா? நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது.இந்த படத்தில் பூஜா ஹெக்டே,இயக்குனர் செல்வராகவன்,யோகிபாபு,அர்ஜுன் தாஸ் ஆகியோரும் நடிக்கின்றனர். இதனிடையே நடிகர் விஜய் நடிக்கும் அடுத்த படத்திற்கு இப்போதிருந்தே எதிர்ப்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.அவரது ரசிகர்கள் அடுத்த படத்தின் அறிவிப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.பீஸ்ட் … Read more

பிக்பாஸ் தமிழ் : தெறித்து ஓடும் பிரபலங்கள் !

பிரபல தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க தயங்கி பல நட்சத்திரங்கள் பின்வாங்கியுள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகெங்கும் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தியாவில் பிக்பாஸ் என்னும் பெயரில் இந்தியில் முதலாவதாக ஒளிப்பரப்பாகி வெற்றிபெற்றது. ஒரு மனிதனுடைய தனித்துவம் மற்றும் அவர்கள் மற்றவர்களோடு நடந்து கொள்ளும் விதம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன. காதல்,கவர்ச்சி,விளம்பரம் போன்றவற்றையே அடிநாதமாக கொண்டு தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகிவருகிறது. இந்நிலையில் இந்நிகழ்ச்சின் அடுத்த சீசனுக்கான ப்ரோமோவை மக்கள் பெரிதும் … Read more