தனியார் மருத்துவமனை அனுமதி ரத்து! மாவட்ட நிர்வாகம் அதிரடி!

விருதுநகர்: கொரோனா சிகிச்சைக்காக ரூ.7.40 லட்சம் கட்டணம் வசூலித்ததாக அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் அனுமதியை மாவட்ட நிர்வாகம் தற்காலிகமாக ரத்து செய்தது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அரசின் அனுமதி பெற்று சில தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளித்து வருகின்றன. இந்த வகையில் சிகிச்சை பெறும் பொதுமக்கள் அதிக நிதிச் சுமைக்கு ஆளாகாத வகையில் கட்டணங்களை அரசு நிர்ணயித்துள்ளது. மேலும் தனியார் மருத்துவமனைகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் குறித்து அவ்வபோது அதிகாரிகள் ஆய்வு செய்தும் வருகின்றனர். … Read more

கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் உறுதி அளித்தார்?

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தமிழக எல்லைப்பகுதியில் மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடி பகுதியில் தனியார் தேயிலை தோட்டம் ஒன்று இயங்கி வருகின்றது.அதில் தென் தமிழ்நாட்டை சேர்ந்த 20 குடும்பங்கள் தேயிலைத் தோட்டத்தில் உள்ள வீடுகளிலேயேதங்கி,மொத்தம் 78 பேர் தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கேரளாவின் பல பகுதிகளிலும் தொடர்ந்து அதிமழை பெய்து வருகின்றது.இந்த கனமழையால் கேரளாவின் இடுக்கி மாவட்டம் தமிழக எல்லைப்பகுதியில் மூணாறு … Read more

இன்று காலை வெளியாகிறது 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் !

தமிழகத்தில் மார்ச் மாதம் 27 ஆம் தேதி நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.மேலும் காலாண்டு, அரையாண்டு தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று பள்ளி கல்வித் துறை அறிவித்தது. இதனையடுத்து இன்று காலை 9.30 மணிக்கு தேர்வு முடிகள் வெளியாகிறது.மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் … Read more

தமிழக அரசின் “அம்மா கோவிட் ஹோம் கேர்” திட்டத்தின் சிறப்பம்சங்கள்:! மக்களே இதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

இந்தியாவில் மும்பையை அடுத்ததாக சென்னையில்தான் அதிக கொரோனாத் தொற்று பாதிப்படைந்தவர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் சென்னையை பொருத்தவரையில் சில மாதங்களாக தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கின்றது.தொற்று பாதித்தவர்களுக்கு லேசான அறிகுறி,தீவிர அறிகுறி என பிரிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உடல் நிலைக்கு ஏற்ப மருத்துவமனைகள் மற்றும் கண்காணிப்பு மையங்களில் அனுமதிக்கப்படுகின்றனர். இவை தவிர அறிகுறிகள் எதுவும் இல்லாமலும் , லேசான அறிகுறிகளுடன் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். வீட்டு … Read more

இன்று முதல் இவையெல்லாம் இயங்கும்:! தளர்வுகளுடன் புதிய ஊரடங்கு?

கொரோனாத் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.ஊரடங்கின் காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களும்,வழிபாட்டுத் தலங்களும்,பொது போக்குவரத்தும் முற்றிலுமாக முடக்கப்பட்டது.அவ்வப்போது சில தளர்வுகளுடன் எட்டு கட்டமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் கடந்த மாதம் கிராமங்களிலுள்ள சிறு வழிபாட்டு தலங்களை மட்டும் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது. அடுத்த கட்ட தளர்வாக இன்று முதல் கோயில்கள் மற்றும் ஓட்டுநர் பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கியுள்ளது. இந்த விதிக்குட்பட்ட கோயில்களுக்கு மட்டுமே அனுமதி? மாநகராட்சி மற்றும் நகராட்சி … Read more

தமிழர்களின் ஒற்றுமையும் முருக பக்தியையும் இன்று ஒரே ஹேஸ்டேக்கில் உலகிற்கே உணர்த்திய தமிழர்கள்!

கறுப்பர் கூட்டம் என்ற அமைப்பினர் , தமிழ்க் கடவுள் முருகனை மற்றும் முருகனை வேண்டிப் பாடும் கந்த சஷ்டி கவசத்தை, கொச்சைப்படுத்தும் போக்கை நினைத்து உலகமெங்கும் வாழும் தமிழர்கள் மன வேதனையில் உள்ளனர்.இந்நிலையில் நேற்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன்,இதனை கண்டிக்கும் விதமாக,தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான ஆன்மிக பக்தர்கள், முருக பக்தர்கள், காவடி குழுக்கள், பாதயாத்திரைகுழுக்கள், தங்களது வீடுகள் தோறும் வேல் அல்லது முருகர் படத்தை வைத்து,நாளை சஷ்டி விரதம் என்பதால்,நாளை மாலை 6.01 பூஜை செய்ய … Read more

மூணார் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மலைக்க வைக்கிறது! இன்னும் எவ்வளவு பேர் கணக்கில் தெரியவில்லை

கேரளாவின் இடுக்கி மாவட்டத்திலுள்ள மூணாறு பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்தப்பகுதி மழைக்காலத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு கொண்டே இருக்கும். இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாட்களாக கேரளா மாநிலம் பல பகுதிகளிலும், மூணார் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு செல்கிறது. நேற்று முன்தினம் அதிகாலையில் ராஜமலை பெட்டிமுடி பகுதியில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. அந்தப் பகுதியில் உள்ள தேயிலைத் … Read more

திமுக பாஜக வின் கைக்குள் செல்கிறதா? கு.கசெல்வத்தை தொடர்ந்து மேலும் ஒரு திமுக எம்.பி பாஜகவில் இணைகிறார்?

கடந்த சில நாட்களாகவே திமுக மற்றும் பாஜக பற்றி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தேர்தல் வருகின்ற காரணத்தினால் இது போன்ற இழுபறிகள் நிகழ்வது சாதாரணம் தான். அண்மையில் திமுகவின் ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ கு.க செல்வம் பாஜகவில் இணைந்ததாக செய்திகள் வெளியாகின. மேலும் அவர் திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜெகத்ரட்சகன், கட்சி மாறப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் அவர் அதிருப்தியில் இருப்பதாகவும், தான் பாஜகவின் பிரதமரை சந்தித்ததாகவும் … Read more

குமரியில் கடல் சீற்றம்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! குமரி மக்களே உஷார்!

குமரியில் கடல் சீற்றம்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! குமரி மக்களே உஷார்! கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கடலோரப் பகுதி மக்களை பாதுகாப்பாக இருக்கச் சொல்லி வலியுறுத்துகின்றது. தமிழகத்தில் சில நாட்களாகவே நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் மிகுந்த மழை பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்களது பழைய நிலைக்கு வர முடியாமல் தவித்து வருகின்றனர். அதேபோல் நமது பக்கத்து மாநிலமான கேரளாவில் பயங்கரமான நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கு … Read more

விமான நிலையத்தில் கனிமொழி எம்.பிக்கு என்ன நேர்ந்தது என்று தெரியுமா.!?

திமுக வின் மகளிரணி செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி விமான நிலையத்திற்கு வருகைபுரிந்த போது சோதனை மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படை அதிகாரி (CISF) சோதனை மற்றும் பாதுகாப்பு குறித்து கனிமொழியிடம் இந்தியில் கேட்டபோது எனக்கு இந்தி தெரியாது தமிழ்,ஆங்கிலம் தான் தெரியும் அதனால் எதுவாக இருப்பினும் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் கூறுங்கள் என்று கூறியுள்ளார் அதற்கு அந்த CISF அதிகாரி நீங்கள் இந்தியர் தானா ?என்று கேள்வி எழுப்பி … Read more