இன்று இந்தப் பகுதியில் காற்று வேகமாக வீசக்கூடும்! மீனவர்களே எச்சரிக்கையாக இருங்கள்!

0
61

தெற்கு வங்க கடல் மத்திய பகுதி மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டி இருக்கக்கூடிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 நாட்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழகக் கடற்கரை மற்றும் இலங்கையை நோக்கி நகர்வதற்கான வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட பகுதிகளில் அனேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது மயிலாடுதுறை, கடலூர், உள்ளிட்ட, மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் மற்றும் திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் ஓரிரு பகுதிகளில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சென்னையை பொருத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை போன்றவற்றை பொருத்தவரையில் தமிழக கடலோரப் பகுதியில் மன்னார் வளைகுடா மற்றும் கடல் பகுதிகளில் இன்று சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும், வீசுவதற்கான வாய்ப்பிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 கிலோ மீட்டர் முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் ஆகவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.