அதிமுகவின் பேச்சுக்கு பதிலடி கொடுத்த எல். முருகன்!

0
59

கூட்டணி ஆட்சி கிடையாது என்று நேற்று நடைபெற்ற அதிமுகவின் பிரச்சார கூட்டத்தில் உறுதியாக தெரிவித்த பின்னரும் கூட கூட்டணி ஆட்சிதான் என்று அடுத்து தெரிவிக்கின்றார் தமிழக பாஜகவின் தலைவர் முருகன்.

அந்தக் கட்சிக்கு எதிராக நேற்றைய தினம் முதல்வரும், துணை முதல்வரும், பேசவில்லை ஆனாலும்கூட மற்றவர்களை பேச வைத்து வேடிக்கை பார்த்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

சென்ற 50 வருடங்களாக திராவிடக்கட்சிகளால் தேசிய கட்சிகள் தமிழகத்தில் நுழைவதற்கான வழியே இல்லாமல் போயிற்று. ஆனாலும் எப்படியாவது தமிழ் நாட்டிற்குள் நுழைய வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள் தேசிய கட்சியினர் .என தெரிவித்த கே.பி.முனுசாமி பெரியார் காலத்தில் இருந்து திராவிட இயக்கத்தினை ஒழிக்கவேண்டும் என்று திரியும் கூட்டம் திராவிட இயக்க ஆட்சியில் தமிழ்நாட்டை சீரழித்து விட்டதாக தெரிவிக்கிறார்கள். கருணாநிதி, ஜெயலலிதா, போன்றோர் இல்லாத காலத்தில் சிலர் தமிழகத்திற்குள் வந்துவிடலாம் என நினைக்கின்றார்கள். என்று தெரிவித்துவிட்டு தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்று சிலர் தெரிவித்து வருகிறார்கள். அதற்கு வாய்ப்பே இல்லை என்று அழுத்தமாக தெரிவித்தார் கே.பி. முனுசாமி.

அவருடைய இந்தப் பேச்சில் ஒருசிலர் தேசிய கட்சி என தெரிவித்தாலும் அவர் பாஜகவை தான் தெரிவிக்கின்றார். என்று அனைவரும் புரிந்து கொண்டார்கள். அதற்குப் பின்னர் நேற்று மாலையில், விழுப்புரத்தில் பாஜகவின் சார்பாக நடந்த மாநாட்டில் உரையாற்றிய முருகன் எதிர் வரும் சட்டசபை தேர்தலில் என்னுடைய பாஜக சகோதரன் என்னுடைய பாஜக சகோதரி சட்டசபைக்குள் அமர்ந்தே ஆகவேண்டும் என்று தெரிவித்தார்.

அதோடு அவர் எதிர்காலம் எங்களுடையது தான் என்பதையும், எதிர்வரும் ஆட்சியும் எங்கள் கூட்டணியின் ஆட்சி தான் என்பதையும், தீர்மானம் செய்து விடுவோம் என்று தெரிவித்தார். கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என்று அதிமுக அறிவித்த பின்னரும் கூட, கூட்டணி ஆட்சி தான் என்று பாஜக பிடிவாதமாக இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டு இருக்கின்றது.