வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு இழப்பீடு! ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!

0
122
Compensation for victims during Veerappan search hunt! High Court orders action!
Compensation for victims during Veerappan search hunt! High Court orders action!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு இழப்பீடு! ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!

பல மாநிலங்களை விரல் விட்டு ஆட்டிய மிகப்பெரிய வீரர் வீரப்பன். அவர் அறியாத காட்டு வழித்தடங்களே இல்லை என்று தான் கூற வேண்டும். நமக்கு தண்ணீர் தராத கர்நாடகாவின் கண்ணில் விரல்விட்டு ஆட்டிய நபர் என்றால் அது வீரப்பன் மட்டும் தான். அவரை அப்போது பலர் சந்தித்தாலும், நக்கீரன் கோபால் அவரிடம் பேட்டி எடுப்பதில், கை தேர்ந்தவர்.

தற்போதும் அவர் உயிரோடு இல்லை என்றாலும், அவரை பலர் கடவுளாக வணங்குகின்றனர். அவரிடம் மிகுந்த மரியாதையும் வைத்துள்ளனர். அவரை பிடிக்க 1993 ஆம் ஆண்டு சிறப்பு அதிரடி படைகள் அமைக்கப்பட்டு மலைக் கிராம பகுதிகளில் தேடுதல் வேட்டைகள் பல நடந்தேறின. அப்போது மலை கிராம மக்களை தேவையில்லாமல் பிடித்து சித்திரவதை செய்தது, முகாம்களில் சிறை வைத்தது மற்றும் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமைகள் பல நடத்தப்பட்டது என மோசமான பல கொடுமைகள் அரங்கேறியதாக பல தரப்பட்ட புகார்கள் எழுந்தது.

அது குறித்து விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணையத்தின் உத்தரவுப்படி, சதாசிவ குழு ஒன்று அமைக்கப்பட்டு, அதன் மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதிரடிப்படையினரால் பாதிக்கப்பட்ட எண்பத்தி ஒன்பது பேருக்கு இழப்பீடு வழங்கவும், இந்த குழு பரிந்துரை செய்தது.

அதன் படி இரு மாநில அரசுகளும் தலா 5 கோடி ரூபாய் வரை இதற்கு ஒதுக்கீடு செய்தது. இந்த 10 கோடி ரூபாயில் 2 கோடியே 80 லட்சம் ரூபாய் இழப்பீடு கடந்த 2007 ம் ஆண்டு வழங்கப்பட்ட நிலையில், மீதமுள்ள பணம் வழங்காததால், வழங்கக்கோரி விடியல் மக்கள் கூட்டமைப்பின் சார்பில் கோர்ட்டில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மனுதாரரின் கோரிக்கை குறித்து தமிழக அரசு 4 வாரங்களுக்குள் தகுதியின் அடிப்படையில் பரிசீலித்து தக்க முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.