ஒரே நாளில் உச்சத்தை தொட்ட கொரோனா வைரஸ்!

0
164

தமிழகத்தில் வெகுவாக குறைந்து வந்த நோய்த்தொற்று தற்சமயம் திடீரென்று அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இதற்கு பொதுமக்களின் அலட்சியமான போக்கு தான் காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது. ஒருபுறம் பொதுமக்களின் அலட்சியப் போக்கு தான் காரணம் என்று தெரிவிக்கப்பட்டாலும் மறுபுறம் இந்த தொற்றின் போது தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு சுகாதார பணிகளை வேகப்படுத்திய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இல்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயமாக இருந்து வருகிறது.

தற்போது தேர்தல் விதிமுறை அமலில் இருப்பதால் அவரால் எந்த ஒரு உத்தரவுகளையும், ஆணையையும், பிறப்பிக்க முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது. அதன் காரணமாக பொது மக்கள் எல்லோரும் தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை தேடத் தொடங்கியிருக்கிறார்கள்.ஆனாலும் அரசு அதிகாரிகள் பல அதிரடி கட்டுப்பாடுகளை விதித்து தான் வருகிறார்கள். இருந்தாலும் தற்போது இந்த நோய் தொற்று மிக வேகமாகப் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து மூன்றாவது தினமாக இரண்டு லட்சத்தை கடந்ததால் முக்கிய நகரங்களில் இரவுநேர ஊரடங்கு அமலில் இருக்கிறது. அத்துடன் சென்ற வருடத்தை போலவே பல மாநில அரசுகள் பல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றன.